கற்பனைக் காட்சி உதாரணம்

Print Friendly, PDF & Email
கற்பனைக் காட்சி உதாரணம்

சிறுவயது முதலே நமது கவனத்தை ஒருமுகபடுத்த வேண்டுமெனில் , நம் புலன்களை கட்டுக்குள் வைத்தல் இன்றியமையாதது. முதல் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மனக்கண் முன் தோற்றுவித்தல் என்பது ஒரு சிறந்த செயல்முறையாகும். அந்த குழந்தைகளின் மனதில் கடவுளின் திருவுருவம் நன்கு பதியும்படியாக, அக்கடவுளின் தோற்ற அம்சங்களை குருமார்கள் நன்றாக விவரிக்க வேண்டும்.

சாயிராம் அன்பு குழந்தைகளே! நம் அன்பான சுவாமியின் திருவுருவ படத்தினை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். இப்பொழுது இப்படத்தினை எல்லோரும் நன்கு கவனித்து பாருங்கள்.

குழந்தைகளே, இப்போது மெதுவாக உங்கள் கண்களை மூடி, உங்கள் முன்பாக உங்கள் கரங்களை நீட்டுங்கள், மேலும் பிறர் மீது படாதிருங்கள். உங்கள் கை விரல்களை சின்முத்திரையில் வைத்து உங்கள் கரங்களை தொடை மீது வைக்கவும். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும் படியாக நிமிர்ந்து உட்காரவும்.

மூச்சை நன்கு உள்ளிழுத்து…… உங்கள் எண்ண அலைகளை வெளி ஏற்றி, இன்னுமொரு ஆழ்ந்த மூச்சினை எடுத்து கொள்ளவும். இப்போது, நீங்கள் அமைதியாக சாய் குல்வந்த் ஹாலில் உட்கார்ந்து சுவாமியின் அழகான திருவுருவை தரிசனம் செய்யக் காத்திருப்பதாக மெதுவாக உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள்.

பாருங்கள்! சுவாமி உங்கள் முன்னே மெதுவாக நடந்து வருகிறார்.

அவர் முகம் அன்பு மற்றும் ஒளியால் பிரகாசிக்கிறது. அவரது அடர்ந்த கருநிற கேசம் ஓர் ஒளிவட்டம் வைத்தாற்போல் அவரது முகத்தினை சூழ்ந்துள்ளது. அவருடைய பிரகாசமான கண்கள் உன்னிடம், உன் புறம் திரும்புகிறது. அவர் இப்பொழுது உங்களைப் பார்க்கிறார், நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். அவருடைய கண்கள் உங்கள் கண்களுடன் சில நொடிகளே இணைந்திருந்தாலும், அவர் சிறிது நேரம் ஆழமாக உங்களைக் கண்டது போல் தோன்றுகிறது.

அவர் உங்களைக் கண்டு புன்முறுவல் பூக்கிறார். நீங்கள் அன்பு மற்றும் மகிழ்ச்சியால் உவகையடைகிறீர்கள். அவர் அன்பின் ஸ்வரூபம். இரண்டு கால்களில் நடமாடும் அன்பு அவர்.

அவருடைய நீளமான காவி அங்கி காற்றில் அசைந்து, அதன் வழியே அவருடைய மென்மையான பாதங்கள் சிறிதளவு புலப்படுகின்றன.

நாம் அனைவரும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் இந்த தெய்வீக தரிசனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை உணர்கிறோம்.

நாம் இப்போது இந்தச் சிறிய பிரார்த்தனையை அவருடைய பாதக் கமலங்களில் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் சமர்ப்பிக்கலாம். இறைவா! என் பெற்றோர், குருமார்கள், என் உறவினர்கள் மற்றும் தோழர்கள் நல்லாரோக்கியம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இறைவா! என் படிப்பின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்த எனக்கு தயை கூர்ந்து உதவுங்கள். இறைவா! நான் என்றும் உங்கள் பாதக் கமலங்களை நினைவில் கொள்ள அருளுங்கள்!

ஸமஸ்த லோகா: ஸுகினோ பவந்து

இப்போது உங்கள் கண்களை மெதுவாக திறக்கவும்.

வகுப்பு நிறைவடைந்த பின் கலந்துரையாட சில கேள்விகள்
  1. சுவாமி எவ்வாறு காட்சியளிக்கிறார்?
  2. உங்களுக்கு இந்த அனுபவம் எவ்வாறிருந்தது?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: