நினைவாற்றல் சோதனை

Print Friendly, PDF & Email

நினைவாற்றல் சோதனை

  1. நம் வீடு, பள்ளி அல்லது பாலவிகாஸ் வகுப்பு போன்ற இடங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும்/பார்க்கும் 30 பொருட்களைச் சேகரிக்கவும்.உதாரணத்திற்கு, பென்சில், ஒரு மரத்தின் படம், ஒரு நாய் படம், புத்தகம்,பந்து, கஞ்சிரா, போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
  2. இவற்றிலிருந்து 20 பெருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து, இங்குமங்குமாக மேஜை மேலோ அல்லது தரையிலோ வைக்கவும். மீதமிருக்கும் பொருட்களை தற்பொழுது உபயோகிக்க வேண்டாம்.
  3. குழந்தைகளை, ஒரு சில வினாடிகள் இந்த 20 பொருட்களையும் நன்கு உற்று கவனிக்கச் சொல்லவும்.(30லிருந்து 40வினாடிகள் வரை).
  4. இப்பொழுது, இந்த 20 பொருட்களையும் அங்கிருந்து அகற்றிவிடவும். அல்லது, ஒரு துணி/போர்வையால் மூடிவிடவும்.
  5. குழந்தைகளை அவர்கள் பார்த்த அனைத்து பொருட்களையும் பட்டியலிடச் சொல்லவும். அவர்களால் சில பொருட்களை மட்டுமே நினைவுகூறமுடியும். அதிக கவனமும், ஞாபக சக்தியும் உள்ள குழந்தைகளால் 15 பொருட்கள் வரை நினைவு கூறமுடியும்.
  6. இப்பொழுது, குழந்தைகளை முழு கவனத்துடன் மூன்று முறை காயத்ரி மந்திரம் சொல்லச் சொல்லவும்.
  7. இப்பொழுது, இதுவரை வைக்காத மீதமுள்ள 10 பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏற்கனவே காண்பித்த 20 பொருட்களிலிருந்து ஏதாவது 10 பொருட்களைத் தேர்ந்தடுக்கவும். தற்பொழுது நம்மிடம் மொத்தம் 20 பொருட்கள் உள்ளன. ( காண்பித்த 20 பொருட்களிலிருந்து 10 பொருட்களும் காண்பிக்காத 10 பொருட்களும் சேர்த்து) இப்பொழுது, இந்த 20 பொருட்களையும் இங்குமங்குமாக மேஜை மீதோ அல்லது தரையிலோ வைக்கவும்.
  8. மேலே குறிப்பிட்டபடி, குழந்தைகளை, ஒரு சில வினாடிகள் இந்த 20 பொருட்களையும் நன்கு உற்று கவனிக்கச் சொல்லவும்.
  9. பின்னர், அந்த பொருட்களை ஒரு துணி/போர்வையால் மூடிவிடவும் அல்லது அங்கிருந்து அகற்றிவிடவும்.
  10. இப்பொழுது, குழந்தைகளை அவர்கள் பார்த்த பொருட்களை நினைவு கூறச் சொல்லவும்.
கருத்துச் சுருக்கம்

காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். அது கவனம், ஒருமுகபடுத்தும் தன்மை மேலும் ஞாபக சக்தி இவையனைத்தையும் அதிகரிக்கும். குழந்தைகள் இரண்டாம் முறை, அதாவது காயத்ரி மந்திரம் ஜபித்த பிறகு அதிக பொருட்களை நினைவு கூர்ந்து கொள்வார்கள். அப்படி ஏதாவது சில குழந்தைகளால் முதல் முறையை விட இரண்டாம் முறை அதிகம் நினைவு கூற முடியவில்லையென்றால், அவர்களை அதிக முறை காயத்ரி மந்திரம் ஜபிக்கச்க் சொல்லி அவர்களுக்கு அதிக வாய்ப்பளியுங்கள்.

இது ஒரு அற்புதமான செயற்பாடு. இதனால் குழந்தைகள் காயத்ரி மந்திர ஜபத்தின் பலன்களை நன்கு புரிந்துகொள்வார்கள் மேலும் அதை தினசரி சொல்ல பழகிக் கொள்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன