அதிகாலையில் எழுதல்

Print Friendly, PDF & Email
அதிகாலையில் எழுதல்

ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்

நீங்கள் விரும்பினால் பின்னணியில் மென்மையான இசையை இசைக்கலாம்.

முதலில், உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும். முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும்.நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும். இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

அதிகாலையில் நீ இன்னமும் தூங்கிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொள்.

உன் தாய் உன்னை எழுப்புகிறார்கள்.

புறப்பட்டுப் பள்ளி செல்லச் சரியாக இருக்கும் என்று நீயும் நினக்கிறாய்.

கதகதப்பான உன் படுக்கையில் இன்னும் சற்று நேரம் தூங்க உனக்கு ஆசைதான்.

ஆனாலும், அவசரமாகக் கிளம்பி ஓடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து நீ எழுந்துவிடுகிறாய்.

உன் அம்மா மிகவும் மகிழ்கிறார்கள்

தூக்கத்தை வென்று எழுந்ததை நினைத்து நீ பெருமை அடைகிறாய்.

அவ்வாறு ஒழுக்கத்துடன் இருந்ததற்காக உன் முதுகில் நீயே தட்டிக் கொடுத்துக்கொள்.

(நீண்ட அமைதி இருக்கட்டும்)

மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.

[புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன