கீதாஞ்சலி

Print Friendly, PDF & Email

கீதாஞ்சலி

குறிக்கோள்:

குழந்தைகளின் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தவும், கற்றுக்கொண்ட கீதை வசனங்களை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நினைவுப்படுத்துவதே இந்த செயல்பாட்டின் குறிக்கோளாகும்.

கற்பிக்கப்படும் பண்புகள்:
  • ஆர்வம்
  • கவனம்
  • ஒருமுக தன்மை
  • நினைவாற்றல்
  • பொறுமை
  • துல்லியம்
  • சுய திருப்தி
தயாரித்துக் கொள்ள வேண்டியவை:
  • குரு 10 கீதை வசனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • குரு 20 அட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.நீல நிறத்தில் 10 அட்டைகளும் மற்றும் பிங்க் நிறத்தில் 10 அட்டைகளும் உருவாக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வசனங்களின் முதல் வரி 10 நீல அட்டைகளில் எழுத வேண்டும்; அதே வசனங்களின் இரண்டாவது வரி, 10 பிங்க் அட்டைகளில் எழுத வேண்டும்.
  • அட்டையின் பின்புறத்தில் சுவாமியின் படத்தை ஒட்டிக்கொள்ளாம்.
  • அட்டைகள் வண்ணமயமாக இருக்க வேண்டும். (மாறாக, ஸ்வாமியின் பாக்கெட் காலண்டர்கள் 10+10 வசனங்களை மறுபக்கத்தில் எழுதலாம்)
  • இவை அனைத்தும் முடிந்தவுடன், அட்டைகள் தயாராக உள்ளன.
விளையாடும் முறை:
  1. குரு 20 அட்டைகளை கலந்து வைக்க வேண்டும்.
  2. குரு இரு நிற அட்டைகளை கொண்டு நான்கு வரிசைகள் அமைக்க வேண்டும் அதில் ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து அட்டைகளை வைக்க வேண்டும்.(நிறத்தை பொருட்படுத்தாமல் அட்டைகளை கலந்து வரிசையில் வைக்க வேண்டும்)
  3. அட்டைகளில் எழுதப்பட்ட பகுதி கீழே பார்த்த படி வைக்கப்பட வேண்டும்.
  4. ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் விளையாடலாம்.
  5. முதல் குழந்தை ஒரே நேரத்தில் ஒரு நீலம் மற்றும் ஒரு பிங்க் ஆக இரண்டு அட்டைகளை எடுக்க வேண்டும், அதில் உள்ள வசனத்தின் இரண்டு வரிகளும் பொருந்துமா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
  6. அவை பொருந்தினால், அவர் வசனத்தைப் படித்து, அட்டைகளை தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும்.
  7. இல்லை என்றால், மற்ற குழந்தைகளிடம் காட்டிவிட்டு, மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்.
  8. இப்போது இரண்டாவது குழந்தை விளையாட வேண்டும்.அனைத்து 10 கீதை வசனங்களையும் முழுமையாகப் பொருத்தும் வரை இதே முறையைப் பின்பற்றி விளையாட வேண்டும்.
மாறுப்பட்ட விளையாட்டு முறை:
  • கீதை வசனங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் தரலாம்.
  • கீதை வசனங்களின் முதல் வார்த்தை மற்றும் கடைசி வார்த்தை இந்த விளையாட்டை விளையாட பயன்படுத்தலாம்.
குருக்களுக்கு குறிப்பு:

நேரம் மற்றும் குழந்தைகளின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குரு எத்தனை கீதை வசனங்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன