கற்பனை வளத்தை மேம்படுத்துதல்

Print Friendly, PDF & Email

கற்பனை வளத்தை மேம்படுத்துதல்

விளையாட்டின் நோக்கம்:

குழந்தைகளின் கற்பனை வளத்தை அல்லது திறனை மேம்படுத்துதல்

கற்பிக்கப்படும் பண்புகள்:

கற்பனைத் திறம்

கேட்டறிதல்

பாராட்டுதல்

தேவையான பொருட்கள்:
  1. கிண்ணம்
  2. எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகள்
    எடுத்துக்காட்டு: “நான் பூவாக இருந்தால்….”
    (பிற எ.கா: இராமாயணம், மாஹாபாரதம், முனிவர்கள், பேரறிஞர்கள், மரம், பூஜை பொருட்கள், பஞ்சபூதங்கள், விலங்குகள், பறவைகள்)
  3. இசை /பஜனை பாடல்கள்
விளையாடும் முறை:
  1. குருவானவர் குழந்தைகளை வட்டமாக அமர்ந்து கொள்ள சொல்லுவார்.
  2. அவர் விளையாட்டின் விதி முறைகளைப் பற்றி சொல்லுவார்.
  3. எழுதப்பட்ட எல்லா சீட்டுகளும் மடிக்கப்பட்டு கிண்ணத்தில் போடப்படும்.
  4. பிறகு பின்புலத்தில் பாடல் ஒலிக்க செய்யப்படும்.
  5. சீட்டுகள் உள்ள கிண்ணம், இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுக்கப்படும்.
  6. பின்புற இசை நிறுத்தப்பட்டவுடன் கிண்ணம் யாரிடம் இருக்கிறதோ, அந்த குழந்தை அதிலுள்ள ஒரு சீட்டை எடுத்து அதில் எழுதப்பட்டுள்ளதை வாசித்து அந்தப் பொருளை தானாக கற்பனை செய்து கொண்டு அதைப்பற்றி பேச வேண்டும்.
  7. எ.கா: அந்தச் சீட்டில், “பூ” என்றிருந்தால், “நான் தாமரையாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் தாமரை நம் தேசிய மலர்” என்பது போல பேசலாம்.
    எ.கா 2: அந்த சீட்டில் “பூஜை பொருட்கள்” என்று இருந்தால், “நான் தீபமாக இருக்க விரும்புகிறேன் ஏனெனில் தீபம் இருட்டை விரட்டி வெளிச்சத்தை நான் தீபமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் தீபம் இருட்டை விரட்டி வெளிச்சத்தை தருகின்றது” என்பது போல் குழந்தை பேசலாம்.
  8. மேற்கண்டவாறு கிண்ணத்தில் உள்ள எல்லா சீட்டுகளும் முடிவடையும் வரை (அ) எல்லா குழந்தைகளும் இந்த விளையாட்டில் பங்கேற்கும் வரை இந்த விளையாட்டை தொடரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: