வார்த்தையை யூகிக்கவும்

Print Friendly, PDF & Email

வார்த்தையை யூகிக்கவும்

குறிக்கோள்:

குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் அவர்கள் பார்த்த விசயங்களை அதே வரிசையில் நினைவுபடுத்தும் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதே இந்த செயல்பாட்டின் குறிக்கோளாகும்.

கற்பிக்கப்படும் பண்புகள்
  • கவனம்
  • எச்சரிக்கை
  • கால நிர்வாகம்
தேவையான பொருட்கள்:

அட்டைகளை தொகுப்புகளாக வைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுப்பிலும் 6-7 அட்டைகளைக வைக்க வேண்டும். ஒரு தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் தொடர்புகள் இன்றி இருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையைக் கடைப்பிடிக்காமல் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:
  1. தெய்வங்கள்
  2. இயற்கை
  3. உயரிய ஆண்கள் மற்றும் பெண்கள்
  4. புனிதர்கள்
  5. மதங்கள்
எப்படி விளையாடுவது:
  1. குழந்தைகளை சிறிய குழுக்களாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 3-4 குழந்தைகள் இருக்க வேண்டும்.
  2. குரு ஒவ்வொரு குழுவிடமும் ஒரு அட்டை தொகுப்பை வழங்க வேண்டும்.பிறகு விளையாட்டைக் குறித்து எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
  3. தொகுப்பு 1- இயற்கை (மேகங்கள், ஆறுகள், வானம், மரங்கள்,சந்திரன், மலைகள்)
  4. ஒரு குழுவிலிருந்து, ஒரு குழந்தை தொகுப்பில் உள்ள அட்டைகளை கலந்து பின்பு வரிசையாக மற்ற குழுவினர் முன்பு வைக்க வேண்டும்.
  5. குழுவில் மீதமுள்ள குழந்தைகள் கொடுக்கப்பட்டுள்ள 2-3 வினாடிக்குள் அட்டைகளின் வரிசையை மனப்பாடம் செய்ய வேண்டும்.
  6. மீண்டும் அந்த குழந்தை அட்டைகளை அகற்றி கலந்து வைக்க வேண்டும்.
  7. இப்பொழுது ஒருவர் பின் ஒருவராக அக்குழுவில் உள்ள பிற குழந்தைகள் அந்த அட்டைகளை முன்பு இருந்தது போல அதே வரிசையில் மறுசீரமைக்க வேண்டும்.சரியாக செய்யும் குழந்தைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.
  8. 5 அட்டை தொகுப்பினையும் 5 குழுக்களும் சுழற்சி முறையில் விளையாட வேண்டும்.
  9. குழுவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் முன்னணி வீரர் அல்லது விளையாட்டை முதலில் தொடங்கும் வாய்ப்பை குரு அளிக்க வேண்டும்.
மாறுபாடுகள்:

குழந்தைகளின் திறன் அறிந்து தொகுப்பில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கலாம்.

குருக்களுக்கு குறிப்பு:

ஒவ்வொரு தொகுப்பில் உள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது தொடர்புகள் இன்றி தேர்ந்தெடுக்க வேண்டும். வார்த்தைகள் எந்த ஒரு வரிசையைப் பின்பற்றி இருக்கக்கூடாது. (புருஷார்த்தங்கள் போன்ற கருத்துக்கள், ஒரு வரிசையைப் பின்பற்றுகின்றன, ஆதலால் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து விடலாம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன