குருநானக் ஜெயந்தி

Print Friendly, PDF & Email
குருநானக் ஜெயந்தி

குருநானக் ஜெயந்தி சீக்கியர்களின் மிக முக்கியமான நாளாகும். சீக்கிய மதத்தின் முதல் குருவாகிய குருநானக் அவர்களின் பிறந்ததின விழா ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்து பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி கணக்குப்படி இத்திருநாள் நவம்பர் மாதத்தில் வருகிறது.

குருநானக் ஜெயந்தியன்று விடியற்காலை பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டே குருத்வாராவிலிருந்து ஊர்வலம் புறப்படுகிறது. சீக்கியர்கள் இதை ‘பிரபாத் பேரிஸ்’ என்று கூறுகிறார்கள். குருநானக் அவர்களின் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் முன்பாக குருத்வாராக்களில் 48 மணிநேரம் இடைவிடாத குருகிரந்தசாஹிப் பாராயணம் செய்யப்படும். இதனை அகண்ட் பட் என்று கூறுவர்.

பிறந்த நாளுக்கு முந்தைய நாள் நகர்சங்கீர்த்தன் என்கிற ஊர்வலமும் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்திற்கு பஞ்ச் ப்யாராஸ் (ஊண்ஸ்ங் க்ஷங்ப்ர்ஸ்ங்க் ர்ய்ங்ள்) தலைமை தாங்குவர். பால்கி என்கிற பல்லக்கில் (டஹப்ந்ண் டஹப்ஹய்வ்ன்ண்ய்) குருகிரந்த் சாஹிப்பை வைத்து தாங்கிக் கொண்டு நிஷான் சாஹிப் என்கின்ற சீக்கியக் கொடியையும் ஏந்தி பஞ்ச் ப்யாராஸ் முன்னே செல்வர். பாடல்களை இசைப்பவர்களும், பக்தர்களும் பாடல்களைப் பாடிக்கொண்டு பின்னே செல்வர். வாள் மற்றும் பல போர்க்கருவிகளை ஏந்தியபடி கட்கா குழுவினர்கள் அவர்களுக்குப் பின்னால் செல்வர். ஊர்வலம் செல்கின்ற வழியெங்கும் அலங்கரிக்கப்பட்ட கொடிகளும், தோரணங்களும், பூக்களும் கண்களுக்கு விருந்தளிக்கும்.

பிறந்தநாள் விழாவன்று காலை ஊர்வலத்திற்குப் பிறகு சீக்கிய மதநூல்களிலிருந்து கதைகள் சொல்லப்பட்டு அவற்றின் முக்கிய கருத்துக்கள் விளக்கப்படுகின்றன. குருவின் மேன்மையைப் போற்றும் கீர்த்தனங்கள் பாடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து குருத்வாராவில் லங்கர் என்னும் மதிய உணவு, ஜாதி, மத, இன,மொழி பேதமின்றி எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மிகுந்த பக்தியுடனும் சேவை மனப்பான்மையுடனும் ‘லங்கர்’ அனுசரிக்கப்படுகிறது. கர்ஸ்ங் அப்ப் நங்ழ்ஸ்ங் அப்ப் என்ற பாபாவின் அமுதமொழி கடைப்பிடிக்கப்படுகிறது. அதுவே உண்மையான ஆன்மீகம்.

சில குருத்வாராக்களில் இரவிலும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. சூரிய அஸ்தமன வேளையில் ரெஹ்நாஸ் எனப்படும் மாலை பிரார்த்தனையில் துவங்கி நடு இரவு வரை கீர்த்தன் நடத்தப்படுகிறது. எல்லா பக்தர்களும் பங்கு கொள்கின்ற குர்பானி என்கின்ற பிரார்த்தனை நானக் பிறந்த நேரமாகிய அதிகாலை 1.20க்கு துவங்குகிறது. அதிகாலை சுமார் 2.00 மணியளவில் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன