குருவின் கருணை அழியாப் புகழைத் தரும்

Print Friendly, PDF & Email

குருவின் கருணை அழியாப் புகழைத் தரும்

Adi Shankaraஜகத்குரு ஆதி சங்கரருக்கு தோடகர், ஹஸ்தாமாலகர் , சுரேஸ்வரர், பத்மபாதர் என்ற நான்கு முதன்மையான சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் பத்மபாதர் குருவுக்கு சேவை செய்வதையே தம் கடமையாகக் கருதினார்; பாடங்களைக் கற்பதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை.

மற்ற சீடர்கள் பத்மபாதரின் அறியாமையைக் கேலி செய்தனர். ஆனால் அவர் தம் குருவின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையால் அவற்றைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. ஒரு நாள் அவர் தம் குருவின் ஆடைகளைத் துவைத்து நதியின் நடுவில் இருந்த பாறையின் மேல் உலர்த்தினார். துணிகள் காய்ந்து மடித்து வைப்பதற்குள் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செய்வது அறியாது பாறையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்.

Lotus-footed, Padmapada

நெடுநேரம் ஆயிற்று. குருவிற்கு உலர்த்திய ஆடைகள் தேவைப்படும் என்பதால், அவர் கரை புரண்டோடும் ஆற்றைக் கடக்க உறுதி பூண்டார். தம் குருவின் அருளாசி தம்மைக் காப்பாற்றும் என்று நம்பினார். அவ்வாறே நடந்தது. அவர் தம் காலை எடுத்து வைக்கும் இடங்களில் எல்லாம் ஒரு தாமரை மலர் தோன்றி அவரது பாதங்களை நீரில் நனையாமல் உறுதியாகத் தாங்கிப் பிடித்தது. இதனாலேயே அவர் ‘பத்மபாதர்’ என அழைக்கப்படுகிறார்.

குருவின் பேரருளால் அவர் அனைத்துக் கல்வியையும் கற்றுணர்ந்து ஆன்மீக அறிவை திறம்பட போதிப்பதில் சிறப்புற்று விளங்கினார்.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

[Source: China Katha – Part 1 Pg:2]

 Illustrations by Ms. Sainee &
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: