சமூகத்தில் நமது பொறுப்பு

Print Friendly, PDF & Email

சமூகத்தில் நமது பொறுப்பு

நோக்கம்:

சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் பல தொழில் புரிவோர் பற்றி அறிய வைக்கும் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.

கற்பிக்கப்படும் நற்பண்புகள்:

கலை திறமைகளை பயன்படுத்தி சமூகத்தில் மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

தேவையான பொருட்கள்:

மனித மதிப்பீடுகள் பற்றிய சீட்டுகள்

குருவிற்கான ஆயத்த வேலைகள்:

ஒன்றும் இல்லை

விளையாட்டு:
  1. குழந்தைகளை இரண்டு குழுக்களாக பிரிக்கவும். இரண்டு அரை வட்டத்தில் அமர்ந்து இரண்டு குழுக்களும் ஒரே நேரத்தில் விளையாட வேண்டும்.
  2. நாட்டின் வளர்ச்சியில் பலத்தரப்பட்ட மக்கள் ஆற்றும் கடமைகளை குரு குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
  3. ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் குருவிடம் வரவேண்டும். குரு ஒரு தொழிலின் பெயரை குழந்தையின் காதில் ரகசியமாக கூறுவார். அக்குழந்தை தனது குழுவிற்கு சென்று அதை மௌனமாக நடித்து காட்ட வேண்டும்.
  4. சரியான விடையை முதலில் கண்டுபிடிக்கும் குழுவிற்கு ஒரு “மனித மதிப்பீடு” சீட்டு வழங்கப்படும். ஒவ்வொரு சுற்றுக்கு பிறகும், குழுக்கள் அந்த தொழில் புரிவோர் நாட்டுக்கு செய்யும் நன்மைகளை விளக்க வேண்டும்.
  5. நாட்டின் வளர்ச்சியில் பல்துறை வல்லுனர்களின் பங்களிப்பை இந்த விளையாட்டு முன்வைக்கிறது.
  6. புது தொழில்களை நடித்து காட்ட மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளித்து இந்த விளையாட்டை தொடரலாம்.
குருமார்களுக்கான குறிப்புகள்:
  • குழந்தைகளின் எண்ணிக்கை சிறியதாக இருப்பின், குழுவாக அமைக்காமல் நேரடியாக விளையாடலாம்.
  • சரியாக கண்டுபிடிக்கும் குழந்தையிடம் அந்த “மனித மதிப்பீடு” சீட்டு வழங்கப்படும்.
  • பல சுற்றுகளுக்கு பிறகு, எந்த குழந்தையிடம் அதிக சீட்டுகள் உள்ளதோ, அதுவே வெற்றி பெற்ற குழந்தை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன