இந்து மதம்

Print Friendly, PDF & Email
இந்து மதம்

முன்னுரை: இந்து மதம் உலகத்திலேயே மிகவும் பழமையான மதம் ஆகும். அது அனைத்து மதங்களின் அன்னை என்றும் பௌத்தமும் சமணமும் இந்து மதத்தின் மகள் என்றும் கூறப்படுகிறது. இந்து மதத்திற்கு மிகச் சரியான பெயர் சனாதன தர்மம் (என்றும் நிலையான, அறநெறி சார்ந்த வாழ்க்கை முறை) ஆகும்.

இந்து மதத்தின் வேர்கள் வேதங்கள். வேதம் என்பதன் பொருள் உயர்ந்த ஞானம் / அறிவு. வேதங்கள் கடவுளிடமிருந்து நேரடியாக வந்த வெளிப்பாடு; நிகழப்போவதை முன்கூட்டியே உணரும் ஞானிகள், கடவுளிடம் தொடர்பு கொள்ளும் போது ஏற்பட்ட வெளிப்பாடு. வேதங்கள் அபௌருஷேயா, அதாவது மனிதன் தோற்றுவித்தது அல்ல. வேதங்களை அடிப்படையாகக் கொண்டதால் இந்து மதம் வைதீக தர்மம் என்று அழைக்கப்படுகிறது.

‘இந்து’ என்ற வார்த்தை, சிந்து ஆற்றின் கரையில் வாழும் மக்களையும் அவர்கள் பின்பற்றும் மதத்தையும் குறிப்பதாக அமைந்தது. பாபா அவர்கள் இந்து என்ற வார்த்தைக்குத் தெய்வீகத்துவம் பொருந்திய ஆன்மீகத் தெளிவுரை அளித்துள்ளார். ‘ஹிம்’ என்றால் ‘ஹிம்சை’. அதாவது வன்முறை என்றும், ‘து’ என்ற வார்த்தைக்கு அதிலிருந்து விலகி இருத்தல் என்றும் பொருள் கூறினார். அதாவது இந்து என்ற வார்த்தை எண்ணம், சொல், செயல் இம்மூன்றிலும் ஹிம்சையைத் தவிர்க்கின்ற மக்களைக் குறிக்கின்றது. அஹிம்ஸô பரமோ தர்மஹ என்ற உயர்ந்த பழமொழி எல்லோருக்கும் மிக முக்கியமான கடமையாகும்.

H-Humanity- மனிதநேயம்
I- Individuality- தனி மனித ஒழுக்கம் (3 Ps).
N- Nationality- தேசிய ஒழுக்கம்
D- Divinity- இறைத்தன்மை / பஞ்ச பண்புகள்
U- Unity- வேற்றுமையில் ஒற்றுமை.

பாரதம் என்ற வார்த்தைக்குப் பாபா வழங்கும் விளக்கம்: பா என்றால் பகவான். ரதி என்றால் அன்பு. ஆதலால், பாரதம் என்பது கடவுளை ஆழ்ந்து நேசிக்கின்ற மக்களின் நாடு. நான்கு முக்கியக் கோட்பாடுகள் :

  1. இயற்கைச் சக்திகள் எல்லாம் இறைவனின் வெளிப்பாடுகள். சூரியன், காற்று, நெருப்பு, நீர், பூமி, மழை இவை அனைத்தும் வணங்கப்படுகின்றன. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவைகளைச் செய்யும் இயற்கைச்சக்தி, கடவுளாகக் கருதப்படுகிறது. ‘பல கடவுள்கள்’ என்ற கருத்துக்குப் பின்னால், ‘ஒரு கடவுள்’ கருத்தும் உண்டு. ‘ஏகம் ஸத் விப்ரா பஹøதா வதந்தி’ என்ற கூற்று கடவுள் ஒருவர் என்ற நம்பிக்கையைச் சுட்டிக் காட்டுகிறது.
  2. ஜீவாத்மா என்பது பரமாத்மா என்ற நெருப்பில் இருந்து வந்த ஒரு சிறு பொறி போன்றதாகும். உயரிய மஹா வாக்கியமான ‘தத் த்வம் அஸி’ இந்த உண்மையைக் காட்டுகிறது. தானும் இந்தத் தெய்வீகத்தின் ஒரு பகுதி என்பதைத் தியானம் மற்றும் உள்ளுணர்வால் (ஐய்ற்ன்ண்ற்ண்ர்ய்) அறிவது மனிதனின் கடமையாகும்.
  3. கடவுளுக்கு எண்ணிலடங்கா உருவங்களும் பெயர்களும் உள்ளதால், கடவுளை எந்த உருவத்திலும் வணங்கலாம். உருவச் சிலையாகவோ அல்லது கண்ணுக்குத் தெரிகின்ற அடையாளமாகவோ வணங்கலாம்.
  4. எல்லாவற்றிலும் உள்ளே மறைந்திருப்பது ஆத்மா. எல்லா உயிர்களிலும் இருப்பது ஒரே ஆத்மா. அவர் மனிதர்கள், பசுக்கள், பாம்புகள், குன்றுகள், பூக்கள், கற்கள் மற்றும் தண்ணீரிலும் உள்ளார். அவர் எங்கும் நிறைந்தவர். ஈஸô வாஸ்யம் இதம் ஸர்வம் என்ற நம்பிக்கையே இந்து மதத்தின் மையக் கருத்தாகும்.
புனித நூல்கள்

உபநிஷதங்கள், ப்ரஹ்ம சூத்ரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இவை மூன்றும் இந்து மதத்தின் அதிகாரபூர்வமான புனித நூல்கள். அதாவது ப்ரஸ்தானத்ரயம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்து மதத்தின் மூலாதாரங்கள் இரண்டு வகைப்படும். ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகள்.

ஸ்ருதி:

எது காதால் கேட்கப்படுகிறதோ அது ஸ்ருதி. அதாவது கேள்வி ஞானம் என்பதாகும். பெரிய ரிμகள் வேதங்களில் இருந்து கேட்டு அறிந்ததாகக் கூறப்படுகிறது. வேதங்கள் எண்ணிலடங்கா, அதாவது ‘அனந்தவை வேதா.’ பிற்காலத்தில் வியாச முனிவரால் நான்கு முக்கிய வேதங்களாகப் பிரிக்கப்பட்டு தன்னுடைய நான்கு சிஷ்யர்களுக்குப் போதிக்கப்பட்டது.

பைலர் என்ற சிஷ்யருக்கு ரிக் வேதம்.
வைஸம்பாயனருக்கு யஜுர் வேதம்
ஜைமினிக்கு சாம வேதம்
சுமந்தாவுக்கு அதர்வண வேதம்

மேலே கூறிய நான்கு வேதங்கள் ஒவ்வொன்றும் மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  1. சம்ஹிதை (அ) மந்த்ரம்.
  2. பிராம்மணங்கள்.
  3. ஆரண்யகங்கள்.

சம்ஹிதையிலுள்ள மந்த்ரங்கள் யாகங்கள் செய்யும்போது ஓதப்படுபவை. சம்ஹிதையைப் பற்றி உரைநடையில் விவரிப்பது பிராம்மணங்கள் ஆகும். ஆரண்யகங்கள் என்பவை உபநிஷதங்கள் ஆகும். உபநிஷதங்கள் வேதங்களின் பிற்பகுதிகளாகும். அவை வேதாந்தம் என்று அழைக்கப்பெறும்.

  1. ஈஸா
  2. கேன
  3. கதோ
  4. ப்ரச்ன
  5. முண்டக
  6. மாண்டூக்ய
  7. ஐயித்ரேய
  8. தைத்திரிய
  9. சாந்தோக்ய
  10. ப்ருஹதாரண்யக

உபநிஷதங்கள் ஆகியவை முக்கியமான உபநிஷதங்கள். ஒவ்வொரு வேதமும் மேலும் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சம்ஹிதை மந்த்ரங்களும் பிராம்மணங்களும் கர்ம காண்டத்தில் அடங்கும். உபநிஷதங்கள் (அ) ஆரண்யகங்கள், பக்தி காண்டம் மற்றும் ஞான காண்டத்திலும் அடங்கும்.

ஸ்மிருதிகள்:

இவை இரண்டாம் நிலை புனித நூல்கள். வேதங்களின் கொள்கைகளை விவரிப்பதே இவற்றின் நோக்கமாகும். அவை:

  1. ஸ்மிருதிகள் (அ) சட்டவிதிகளின் தொகுப்பு.
  2. இதிகாசங்கள் (அ) காப்பியங்கள்.
  3. புராணங்கள் (அ) பரம்பரைக் கதைகள், வரலாறு.
  4. ஆகமங்கள் (அ) வழிபாட்டு முறைகள்.
  5. தர்ஷணா (அ) அகக்கண்ணால் சத்ய ஆய்வுகள்.

சட்டவிதித் தொகுப்பாளர்களில் மனு, யக்ஞவால்க்யர் மற்றும் பராசர முனிவர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். காலத்திற்குத் தகுந்தாற்போல் எல்லா வகுப்பினருக்கும் அவர்களின் கடமைகளைப் பற்றி சட்டவிதிகள் கூறப்பட்டுள்ளன. இவைகள் தர்ம சாஸ்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இராமாயணமும் மஹாபாரதமும் புகழ் மிக்க இதிகாசங்கள் ஆகும். புராணங்களில் சரித்திர சம்பந்தமான கதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. பதினெட்டு புராணங்களில் புகழ் வாய்ந்தவை விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம்.

ஆகமங்கள் கடவுளை வழிபடுவது பற்றி விவரிக்கின்றன. இவைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளை வரையறை செய்கின்றன. இவை வேதத்தை ஒத்து இருக்கும். ஊனக்கண்களால் காண்பது தர்ஷன். அகக் கண்களால் காண்பது தர்ஷணா. தர்ஷணா மொத்தம் ஆறு. அவையாவன:

  1. நியாயம்
  2. வைஷேμகம்
  3. சாங்க்யம்
  4. யோகம்
  5. பூர்வ மீமாம்ஸம்
  6. வேதாந்தம்.

தர்ஷனா வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றின் நோக்கம் முடிவான நித்திய சத்யத்தினை ஆராய்ந்து அறிவதாகும்.

நன்னெறிகளும் வாழ்வின் குறிக்கோள்களும்

வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டி உணரும் மகான்கள் மனித வாழ்வின் நான்கு முக்கிய குறிக்கோள்களைக் கூறுகின்றனர். அவைகள் நான்கு புருஷார்த்தங்கள் (எர்ஹப்ள் ர்ச் கண்ச்ங்) என அழைக்கப் படுகின்றன. அவையாவன: தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம். அர்த்தமும் காமமும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும். இவை மூன்றும் மோக்ஷத்தைச் சுற்றியே இயங்க வேண்டும். பிரம்மச்சர்யம் (மாணவப்பருவம்), கிருஹஸ்தம் (இல்லற வாழ்க்கை), வானப்பிரஸ்தம் (பற்றைத் துறந்து வாழ்தல்) மற்றும் சன்னியாசம் (துறவு) என்ற வாழ்க்கைப் பருவங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மகான்கள் விதித்துள்ளனர்.

ஜாதிகள் அல்லது வர்ணங்கள் பிறப்பினால் நிர்ணயிக்கப் படவில்லை. ஒருவரின் குணம் மற்றும் கர்மம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன. நான்கு ஜாதிகளாவன: பிராம்மணர், க்ஷத்திரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர். இவை நான்கும் சமூகத்தின் நான்கு தூண்கள். இதில் எந்த வேலையும் உயர்வோ அல்லது தாழ்வோ அல்ல. சமுதாயத்தில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆவர். அடிப்படை நற்குணங்களான சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்சை எல்லா ஜாதிகளுக்கும் பொதுவானவை.

கர்மவிதி (Law of Karma)

ஊழ்வினையில் நம்பிக்கை கொண்டிருப்பது இந்து மதத்தின் தனித்தன்மை ஆகும். காரண காரியங்கள் (ஸ்ரீஹன்ள்ங் ஹய்க் ங்ச்ச்ங்ஸ்ரீற்) வழி எவ்வாறு பௌதீக உலகில் இருக்கிறதோ, அவ்வாறே ஊழ்வினை ஆன்மீக உலகில் இருக்கிறது. நாம் பூர்வ ஜன்ம கர்மவினைகளைச் சுமக்கிறோம். மனம் மற்றும் இயல்புகள் அதற்குத் தகுந்தாற்போல் அடுத்த பிறவியில் தொடர்கின்றன. மோக்ஷம் அல்லது விடுதலை கிட்டும் வரை இது தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. எனவே, இதை வேறு யாரும் நிர்ணயிப்பதில்லை. நாமே நம் வாழ்வை நிர்ணயிக்கிறோம்.

மனிதனின் கர்மாவில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை 1.சஞ்சித கர்மம், 2.பிராரப்த கர்மம், 3.ஆகாமிய கர்மம்.

முற்பிறவிகளில் செய்த கர்மங்கள் குவிந்துள்ள மூட்டையே சஞ்சித கர்மா. ஒருவனின் குணாதிசயங்களை இது நிர்ணயிக்கின்றது. சஞ்சித கர்மம் வில்– ருந்து வெளியேறத் தயாராக இருக்கும் அம்பைப் போன்றது.

பலனளிக்கத் தொடங்கிவிட்ட கர்மா, பிராரப்த கர்மா. அது வில்– ருந்து வெளியேறிய அம்பைப் போன்றது. அதைத் திரும்பப் பெற இயலாது. எனவே,

விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

தற்பொழுதுள்ள வாழ்வில் இனி செய்ய இருக்கும் கர்மங்கள் ஆகாமியம். அதை மாற்றி அமைப்பது நமது கையில் இருக்கிறது. நாம் விதைப்பதையே அறுவடை செய்வோம். ஆகாமிய கர்மம் அம்பராத் துணிக்கு வர இருக்கும் அம்மைப் போன்றது.

பாபா கூறுகிறார்: சஞ்சித கர்மா என்பது நெற்குதிரில் சேகரித்து வைத்துள்ள நெல் மணிகளைப் போன்றது. பிராரப்த கர்மம் என்பது அந்தக் குதிரில் இருந்து நாம் (விதைக்க) உபயோகப்படுத்தும் நெல் மணிகளைப் போன்றது. ஆகாமிய கர்மம் என்பது அறுவடைக்குப் பிறகு நாம் குதிரில் புதிதாகச் சேர்க்கும் நெல் மணிகளைப் போன்றது. இறைவனின் அனுக்ரஹம் இருப்பின், பிராரப்த கர்மாவின் வீரியம் குறைக்கப்படும். அருந்தவத்தாலும், ஆத்ம ஞானத்தாலும் சஞ்சித கர்மாவைச் சாம்பலாக்கிவிடலாம்.

கடவுளிடம் சரணாகதி செய்து, பலன் மீது பற்று வைக்காமல், செய்யும் செயலைக் கர்ம விதி கட்டுப்படுத்தாது. இந்த வகையான செயலுக்கு நிஷ்காம கர்மா என்று பெயர். அது கர்ம யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. நமக்குத் தெய்வீக அருள் இருக்கும்போது, நமது செய-ன் பலன் என்னவாக இருக்கும் என்று கவலைப்பட வேண்டாம்.

அவதாரங்கள்

அவதாரம் என்ற வார்த்தை அவதரணா என்ற சொல்-ல் இருந்து வந்தது. இதன் பொருள் கீழிறங்குதல். தர்மத்தை நிலைநிறுத்தக் கடவுள் பூமிக்கு இறங்கி வந்து, மனித உருவமோ அல்லது வேறு ஏதாவது உருவமோ எடுப்பதாகும். தர்மத்தைக் கடைப்பிடித்தல் வீழ்ச்சி அடையும் போதெல்லாம் கடவுள் மீண்டும், மீண்டும் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நிறுத்துகிறார். முக்கிய அவதாரங்கள் பத்து. கடவுளின் பத்து அவதாரங்கள் கூறும் நற்செய்திகள் பின்வருமாறு:

1.மச்ச அவதாரம் ஞானம் என்ற புதையலைச் சந்தேகம் என்ற வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுதல்.
2.கூர்ம பற்றில்லாமல் எஜமானனாக வாழ்தல்.
3.வராஹ கடமை என்ற சுமையை கட்டுப்பாடு மற்றும் பக்தி ஆகிய இரட்டைக் கொம்புகள் மீது தூக்கிச் செல்லல்.
4.நரசிம்ம நான் என்ற அஹங்காரம் கடவுளின் ஒளியை மறைத்து விடாமல் இருத்தல்.
5.வாமன உன்னையே கடவுளின் பாதத்தில் கொடுத்து விடு, பிறகு பாதத்தை அடைந்து விடு.
6.பரசுராம சரணாகதி அல்லது துன்பத்தை பாடமாகப் பயில்.
7. ஸ்ரீராம வாழ்வில் என்ன சந்திக்கிறோமோ அது விதி ஆகும். எவ்வாறு சந்திக்கிறோமோ அது சுய முயற்சியாகும்.
8.ஸ்ரீகிருஷ்ண பகவான் கையில் ஓர் உன்னத கருவியாக இருக்க முயற்சி செய்.
9.புத்தர் உன்னை நிறைவுபடுத்து, அப்போதுதான் மற்றவர்களை நிறைவுபடுத்த உதவ முடியும்.
10.கல்கி வாழ்க்கை என்ற மாளிகையை சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அஹிம்ûஸ என்ற அடித்தளத்தின் மேல் கட்டு.
மதச்சடங்குகள்

எந்த மதத்திற்கும் சடங்குகள் மிக அவசியம். அவை நம் மனதைத் தூய்மைப்படுத்துகின்றன. இந்துக்களின் வாழ்க்கை மற்றும் நடத்தை பெரும்பாலும் வேதங்களின் கட்டளைகளை வழிகாட்டியாகக் கொண்டு அமைந்துள்ளது. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் இவைகளுக்கு என்று தனிச் சடங்குகள் உள்ளன. முக்கியமான சடங்குகள்: ஜாதகர்மம், அட்சராப்பியாஸம், உபநயனம், சந்தியாவந்தனம், பஞ்ச யக்ஞங்கள்.

பஞ்ச யக்ஞங்கள்

இதைத் தவிர, ஒவ்வொரு மாதமும் மற்றும் பண்டிகைக் காலங்களில் செய்யும் விசேஷ சடங்குகளும் உண்டு.

ரிμ யக்ஞம்- புனித நூல்களை ஓதுதல் (ஸ்வாத்யாயம்).

தேவ யக்ஞம்- தெய்வத்தை வழிபடுதல்.

பித்ரு யக்ஞம்- முன்னோர்களை நினைவுகூர்ந்து படையல் செய்தல்.

பூத யக்ஞம்- உயிரினங்களுக்கு உணவளித்தல்.

மனுஷ்ய யக்ஞம்- விருந்தினருக்கும், வறியவருக்கும் விருந்தோம்பல்.

பதினாறு உபசாரங்கள்

புனித மந்திரங்களை ஓதி கோவில்களில் உள்ள விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. விக்ரஹ ஆராதனை செய்ய ஷோடோபசாரங்கள் பதினாறு உள்ளன. அவை:

தூபம் – சாம்பிராணி, ஊதுபத்தி ஏற்றுதல். தீபம் – விளக்கு ஏற்றுதல் நைவேத்தியம் – உணவு படைத்தல் தாம்பூலம் – வெற்றிலை, பாக்கு அளித்தல்

நீராஞ்சனம் – தீப ஆராதனை ஸ்வர்ண புஷ்பம் – தங்கம் அல்லது பொருள்களை அளித்தல்

தியானம் – மனதை ஒருநிலைப்படுத்துதல்.

ஆவாஹனம் – இறைவனை எழுந்தருள வேண்டுதல்.

சிம்ஹாசனம் – இருக்கை அளித்தல்.

பாத்யம் – பாதத்தைக் கழுவுதல்.

அர்க்யம் – வரவேற்றல்.

ஸ்நானம் – நீராட்டுதல்.

வஸ்த்ரம் – ஆடை அணிவித்தல்.

யக்ஞோபவீதம் – பூணூல் அணிவித்தல்.

சந்தனம் – சந்தனம் பூசுதல்.

புஷ்பம் – பூக்களைப் படைத்தல்.

செடிகள், மிருகங்கள், ஆறுகள் மற்றும் கற்களை ஓர் இந்து வணங்குவான். கடவுளைப் பல உருவங்களில் பார்க்க ஆரம்பிப்பான். எங்கும் நிறைந்த பரம்பொருள் அவனுக்குள்ளும் பறவை, மிருகம் மற்றும் கல்-லும் இருப்பதை உணர்வான்.

சாதனா

குறிக்கோளை அடைவதற்கான முயற்சியும், ஆன்மீகப் பயிற்சியுமே சாதனா. குறிக்கோள் : தத்-ஜ-லான். எதி-ருந்து வந்தோமோ அதனுடன் மீண்டும் ஐக்கியமாதல். மனிதன் தன் சொந்த வீட்டிற்கு (இறைவனிடம்) திரும்ப வேண்டும். இதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் பாதை தான் சாதனா என்பது. மூன்று முக்கிய பாதைகள் அவை : 1.கர்ம மார்க்கம் 2.பக்தி மார்க்கம் 3.ஞான மார்க்கம். ராஜயோகமும் ஒரு சாதனாவே.

பக்தி மார்க்கம்

பக்த பிரஹலாதன் கூறிய நவ பக்தி பின்வருமாறு:
பக்தி விளக்கம் எடுத்துக்காட்டு

1.ஸ்ரவணம் இறைலீலைகளைச் செவிமடுத்தல். பரிக்ஷித் ராஜா
2.கீர்த்தனம் இறை புகழைப்பாடுதல் நாரதர்
3.நாமஸ்மரணம் இறைநாமம் இடையறாது ஓதுதல் பிரஹலாதன்
4.பாதஸேவனம் இறைபாதங்களுக்குச் சேவை ஸ்ரீமஹாலக்ஷ்மி
5.அர்ச்சனம் இறைவனைப் பூஜித்தல் பரதன்
6.வந்தனம் நமஸ்காரம் செய்தல் (வணங்குதல்) அக்ரூரர்
7.தாஸ்யம் இறைவனுக்காகச் சேவை ஹனுமன்
8.ஸக்யம் இறைவனை நண்பனாகக் கொளல் அர்ஜுனன்
9.ஆத்ம நிவேதனம் சம்பூர்ண சரணாகதி ராதை

பரபக்தியில் ஐந்து பாவங்கள் (ஆட்ஹஸ்ஹம்): சாந்தம், தாஸ்யம், சக்யம் வாத்ஸல்யம், மற்றும் மதுரம்- இவை பாவத்தின் வகைகளாகும். அதாவது பக்தன் தன் அன்புக் கடவுளிடம் கொண்டுள்ள உறவு.

  1. சாந்த பக்தி – பீஷ்மர், அம்பரீஷன்
  2. தாஸ்ய பக்தி – ஹனுமன், சபரி
  3. சக்ய பக்தி – அர்ஜுனன், குசேலன்
  4. வாத்ஸல்ய பக்தி – நந்தன், யசோதா
  5. மதுர பக்தி – ராதா, மீரா
ஞான மார்க்கம்

தன்னை ஆத்மா என்று அறிதலே ஞானம். மனிதனின் தெய்வீகத் தன்மையை உணரச் செய்வது நான்கு மஹா வாக்கியங்கள். அவையாவன:
1.ப்ரக்ஞானம் ப்ரஹ்மா (ரிக்)- நான் பிரம்மம் என்ற இடையறாத இறையுணர்வு.
2.அஹம் ப்ரஹ்மாஸ்மி (யஜுர்)- நான் கடவுள்.
3.தத்வம் அசி (ஸாம)- நீ அதுவாக (பரமாத்மாவாக) இருக்கிறாய்.
4.அயமாத்மா ப்ரஹ்மா (அதர்வண)- என்னுள் உறையும் ஆத்மா கடவுள்.தன்னை ஆத்மா என்று அறிய பஞ்ச கோசங்களைக் கடந்து செல்ல வேண்டும். இந்த அகமுகப்பயணத்திற்கு மூன்று வகையான வாஹனங்கள் உள்ளன. அவை:
1.சிரவணம்- ஆன்மீக உண்மைகளைக் கேட்டறிதல்
2.மனனம்- அவற்றை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
3.நிதித்யாஸனம்- அவற்றை ஆழ்ந்து சிந்தித்து நடைமுறைப்படுத்துதல்
ஞானம் பெற நான்கு ஒழுங்கு முறைகள்

ஞானம் பெற, நான்கு ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்பதற்குச் சாதன சதுஷ்டயம் என்று பெயர்.

1.விவேகம் நிலையானது எது, நிலையற்றது எது என்று பிரித்தறிதல்.
2. வைராக்கியம் பற்றற்ற தன்மை
3.ஷத் சம்பதி (ஆறு நல்-யல்புகள்)
ஷமா மனக் கட்டுப்பாடு
தமா புலன் கட்டுப்பாடு
உபரதி ஆசைகளை உள்ளிழுத்தல்
திதிக்ஷா சகித்துக் கொள்ளல்
ஷ்ரத்தா அசையாத நம்பிக்கை
சமாதானம் மனச் சமநிலை பெறுதல்
4.முமுக்ஷ்த்வம் விடுதலை பெற ஏங்குதல்
நிறைவுரை

இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளை ஈண்டு சிந்திப்போம்.

  1. கடவுள் எங்கும் நிறைந்தவர்.
  2. நீ செய்யும் செயலால் விளைவதே இன்பமும் துன்பமும்.
  3. அதர்மம் மேலோங்கும் போது, மனித சமுதாயத்தைத் தர்மநெறியில் நடத்தவே இறைவன் அவதரிக்கிறார்
  4. தன்னையறிதலே வாழ்வின் குறிக்கோள்.
  5. உலகளாவிய பிரார்த்தனை சிறப்பு அம்சமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன