His vision of Amarnath – The Lord of Snows – Tamil

Print Friendly, PDF & Email

His Vision of Amarnath – The Lord of Snows

பனிமலை அரசன் அமரநாத்தின் தரிசனம் பிளேக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் ஸ்வாமியும் மேல் நாட்டு சீடர்களும் நைனிடால், அல்மோரா என்ற இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். பிறகு காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து புனித அமர்நாத்துக்கு 1898, ஆகஸ்டு 2ந் தேதி சென்றார்கள். ராமகிருஷ்ணரை 1880ல் சந்தித்ததும் 1893ல் சமய மகாநாட்டுக்குச் சென்றதும் போல, இதுவும் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. இந்தத் தடவை யாத்திரிகர்கள் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு, குகையின் அருகில் உள்ள பனிநீரோடையில் அவர்களுடன் சேர்ந்து நீராடி, கௌபீனம் மட்டும் அணிந்து சிவனின் கருவறைக்குச் சென்றார். அவரை முழுவதும் ஆட்கொண்ட பரவசவுணர்வுடன் கூடிய மிக உயர்ந்த ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. இதன் பயனாக அவர் இதயம் நிரந்தரமாக விரிந்தது. விவேகானந்தர் சிவன் வழிபாட்டில் மிகவும் ஈடுபட்டவர். அவரே, அவரது அன்னை காசி விஸ்வேஸ்வரரை வேண்டியதன் பயனாக வரபிரசாதமாகப் பிறந்தவர். ஆகவே பனிமலை அரசனின் புனித ஆலயத்துள் சென்றதும் பரவசமானதில் வியப்பில்லை. பிறகு பல நாட்கள் வரையில், இமாலயப் பனியின் நடுவில் தியானத்தில் அமர்ந்திருந்த யோகீச்வரரான சிவனைத் தவிர வேறு ஒன்றும் பேச இயலவில்லை. பிறகு அவர் கூறினார்: ‘அமர்நாத்துக்கு தான் சென்ற அன்று சிவன் என்னுள் புகுந்தார். அன்றிலிருந்து என்னுள்ளேயே உள்ளார், என்னை விலகார் .”

அமர்நாத்துக்குப் பிறகு ஸ்ரீ நகரின் அருகிலுள்ள ஷீரபவானி மாதாவின் புனித ஆலயத்துக்குச் சென்றார். அதுவும் அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக் அமைந்தது. அன்னையின் பேருணர்விலேயே தோய்ந்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன