அடையாளம் அறிதல்

Print Friendly, PDF & Email

அடையாளம் அறிதல்

நோக்கம்:

இந்த செயல்பாட்டில், குழந்தைகள் சரியான விடையை கண்டுபபிடிக்க, கேட்கப்படும் கேள்விகளை ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி, தக்க கேள்விகள் மூலம் தேவையான தகவல்களை வெளிக்கொண்டு வர உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது ஞானிகள் மற்றும் சிறந்த மனிதர்களின் வாழ்க்கை பற்றிய குழந்தைகளின் அறிவை மதிப்பிடுகிறது.

கற்பிக்கப்படும் குணங்கள்:
  • ஒருமுக தன்மை
  • நினைவாற்றல்
  • கவனம்
தயாரித்துகொள்ள வேண்டியவை:

கடவுள்/ஞானி/சிறந்த மனிதர்களின் பெயர்களை கொண்ட பல சீட்டுக்களை குரு தயார் செய்கிறார்.

விளையாடும் விதம்:
  1. வகுப்பை இரண்டு குழுக்களாக பிரிக்கவும்.
  2. குரு, ஒரு சீட்டை குழு ‘அ’ விற்கு கொடுக்கிறார். (எ.கா.விவேகானந்தர்)
  3. “அ” குழுவிலிருந்து ஒரு குழந்தை தன் சீட்டில் உள்ள பெயருக்கான குறிப்பை அளிக்கிறது.
  4. குழு “ஆ” விவேகமுள்ள கேள்விகள் மூலம் அந்த பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
  5. இந்த விளையாட்டின் முக்கிய விதிமுறை – கேள்விகள் ஆம்/இல்லை என்ற வகையில் மட்டுமே இருக்கவேண்டும்.
  6. குரு எடுத்துக்காட்டின் மூலம் விளையாட்டை விளக்க வேண்டும்.
    • குழு “அ”- ஞானி
    • குழு “ஆ”- உயிருடன் உள்ளவரா அல்லது இறந்தவரா? (இந்த கேள்வி விதிமுறைக்கு உட்பட்டதல்ல. எனவே குழு “அ” இதற்கு பதிலளிக்க தேவையில்லை)
    • குழு “ஆ”- உயிருடன் உள்ளவரா?
    • குழு “அ”- இல்லை
    • குழு “ஆ”- அந்த ஞானி வட இந்தியாவை சேர்ந்தவரா?
    • குழு “அ”- ஆமாம்
    • குழு “ஆ”- பெண்ணா?
    • குழு “அ”- இல்லை
    • குழு “ஆ”- அவர் வெளிநாட்டிற்கு பயணிதிருக்கிறாரா?
    • குழு “அ”- ஆமாம்
    • குழு “ஆ”- அவர் வங்காளத்தை சேர்ந்தவரா?
    • குழு “அ”– ஆமாம்
    • குழு “ஆ”- அவர் விவேகானந்தரா?
    • குழு “அ”- ஆமாம், சரி.
  7. குழுக்கள் தாங்கள் நடிக்கும் முறைகளை மாற்றிக்கொண்டு விளையாட்டை தொடரலாம்.
  8. குரு அடுத்த சீட்டை குழு “ஆ”விற்கு அளித்து, குழு “அ” பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன