மன அமைதியும் மனக் குவிப்பும்

Print Friendly, PDF & Email
மன அமைதியும் மனக் குவிப்பும்

ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்.

விருப்பப்பட்டால் பின்னணியில் மென்மையான இசையை இசைக்கலாம்..

நாற்காலிகளில் வசதியாக உட்காரச் சொல்லலாம் அல்லது கால்களை மடித்துத் தரையில் (சம்மணமிட்டு) உட்காரலாம். முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தச் சொல்லவும். நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும்.

இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

இப்போது, நம் வகுப்பறையிலுள்ள ஒலிகளைக் கவனமாகக் கேட்கவும், மென்மையான ஒலிகளை மட்டும் உற்றுக் கேட்கவும்.

இப்போது, உரத்த ஒலிகளைக் கவனித்துக் கேட்கவும்.

இப்போது, வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து ஒலிகளையும் கேட்கவும்.

தொலைவில் கேட்கும் வாகனங்களின் முழக்கம்…… பறவைகளின் மெல்லிய ஒலி……

இப்படி எல்லாவிதமான ஒலிகளையும் கவனித்து உற்றுக் கேட்கவும். (சிறிது நேரம் மௌனம் இருக்கட்டும்)

மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.

கலந்துரையாடல்:

(அடுத்தமுறை இப்பயிற்சியைச் செய்யும்போது குழந்தைகளின் மனக்குவிப்பு நன்கு அமைய உதவுவதற்காக.)

  1. எவற்றையெல்லாம் கேட்டீர்கள்? உரத்த சப்தம் ஏதாவது கேட்டதா?
  2. மெல்லிய ஒலிகள் எவையேனும் கேட்டீர்களா? அப்போது இதமாக, இனிமையாக இருந்ததா?
  3. நீங்கள் கேட்ட ஒலிகளில் சிலவற்றைக் கூறி, அவை உரத்த ஒலிகளா அல்லது மென்மையானவைகளா என்று வகைப்படுத்திக் கூறவும்,
  4. அவ்வாறே, அவை நீண்ட ஒலிகளா அல்லது குறுகியவைகளா என்றும் கூறுக.

[புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயிக் கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன