ஈஸ்டர்

Print Friendly, PDF & Email
ஈஸ்டர்

கிறிஸ்தவர்களின் பண்டிகைகளில் ஈஸ்டர் முக்கியமானதாகும். சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரான் மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்தார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக (Good Friday) அனுசரிக்கப்படுகிறது. ஏசுபிரான் தனது உயிரைத் தியாகம் செய்த நாள் என்பதால் புனிதவெள்ளி தினத்தில் உண்ணா நோன்பை மேற்கொள்கிறார்கள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் பலர் ஏசு அனுபவித்த வேதனையையும், தியாகத்தையும் நினைவுகூருமுகமாக Lent என்று சொல்லப்படும் 40 நாட்கள் விரதமும் உண்ணா நோன்பும் பிரார்த்தனையும் செய்கிறார்கள். கங்ய்ற் ஏசுபிரான் உயிர்நீத்த புனிதவெள்ளியுடன் முடிவடைகிறது.

ஏசுபிரான் பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் உயிர் நீத்தார் என்று நம்பப்படுவதால் புனிதவெள்ளி அன்று தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன (நடுப்பகலில் தொடங்கி பகல் மூன்று மணி வரை).

துயரத்தையும், தியாகத்தையும் பிரார்த்தனையுடன் அனுசரித்த பின் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த நாளாகிய ஈஸ்டர் (Easter) அமைகிறது.

முதல் நாள் இரவு 11.30 மணிக்கு டஹள்ஸ்ரீட்ஹப்/உஹள்ற்ங்ழ் பிரார்த்தனைக் கூட்டம் துவங்கி 6 மணி நேரம் நடத்தப்படுகிறது. பிரார்த்தனைக் கூட்டம் துவங்கும்போது தேவாலயத்தில் விளக்குகள் ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்திருக்கும். விடியற்காலை சுமார் 5 மணியளவில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு மற்ற எல்லோர் கையிலும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகளைத் தருவர்.

ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு ஈஸ்டர் கண்டகியன் பாடல்களைப் பாடிக் கொண்டு எல்லோரும் தேவாலயத்தை மூன்று முறை வலம் வருகிறார்கள். அதன்பிறகு தேவாலயமணி 20 நிமிடங்கள் தொடர்ந்து ஒலிக்கப்படுகின்றன. ஈஸ்டருக்கான பாடல் பாடப்பெற்று, ஏசு உயிர்த்தெழுந்து விட்டார் (Christ is risen) என்று பலமுறைகள் ஆயர் உரக்கக் கூறுகிறார். கூடியிருக்கும் மக்களும் ஆமாம் கிறிஸ்து மீண்டும் எழுந்து விட்டார் என்று மறுமொழி எழுப்புகிறார்கள். 6 மணியளவில் Paschal Gospel வாசிக்கப்படுகிறது.

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைப் பற்றிய பல பாடல்கள் பாடப்படுகின்றன. இப்படி பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் 6 மணி நேர பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தபிறகு ஈஸ்டர் விருந்து துவங்குகிறது. பிரார்த்தனைக்கு வரும்போதே கூடைகளில் வகை வகையான உணவுகளை ஆயர் ஆசீர்வதித்துக் கொடுப்பதற்காகக் கொண்டு வருவார்கள். ஒருவரை ஒருவர் மூன்று முறை கன்னத்தில் முத்தமிட்டு ஏசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று கூறி மகிழ்வார்கள். பின் வண்ணம் பூசப்பட்ட முட்டைகளை (Easter Eggs) உண்டு மகிழ்வார்கள். ஈஸ்டர் முட்டைகளையும், ஈஸ்டர் முயல்களையும் (Easter Bunny) பரிசுகளாகக் கொடுப்பார்கள்.

முயல் வளமைக்கும் செழிப்புக்கும் அடையாளமாக கருதப்படுகிறது. ஈஸ்டருக்குமுன் அனுசரிக்கப்படும் நோன்பு தினங்களில் முட்டைகள் தவிர்க்கப்படுகின்றன. அதனால் நோன்பு முடிகின்ற தினத்தில் முட்டைகளைச் சாப்பிட்டு உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன