அகநோக்கில் ஒருமைப்பாடு

Print Friendly, PDF & Email
அகநோக்கில் ஒருமைப்பாடு
  1. எல்லா மதங்களும் இறைவனைச் சார்ந்தவையாகும்.எல்லாமே இறை நம்பிக்கை உள்ளவையாகும். புத்தர்களும்சமணர்களும்இறைவனைப் பற்றி நேராகக்குறிப்பிடாமலிருக்கலாம். ஆயினும் அவர்கள் தெய்வத்தத்துவமாகிய பரிபூரணத்தைப் (முழுமையை) பற்றிப்பேசுகின்றனர். இத்தத்துவம் ஒருவரிடம் குடிகொள்ளும் போது,அவர் அர்ஹத் என அழைக்கப்படுகின்றார் (ஜைன மதம்). மனிதன்அடைய வேண்டிய மிக உயர்ந்த நிலையென்பது, நிர்வாணம்அல்லது மோட்சமாகும். அந்நிலையில் உலக சம்பந்தமானஉத்வேகங்கள், ஆசைகள், தேவைகள் அனைத்தும் புனிதமடைந்துகரைகின்றன. சமண மதத்தின்படி, தனி மனிதன் நிரந்தரமானஆனந்தத்தைப் பெறுகிறான்.புத்த மதத்தினரும் சமணமதத்தினரைப் போலவே இறைவன் இருக்கிறார் என்பதை நேராகநிர்ணயிப்பதில்லை. அதற்குப் பதிலாக மனிதனின் மிக உயர்ந்தநிலை, புத்தரின் நிலையாகும் எனக் கூறுகின்றனர். அவர் தெய்வீகமானவர் அதாவது கேவலின், முக்தா, பிரேமையின் ஞானத்தின்திருவுருவானவர். மற்றெல்லா மதங்களும் கடவுள் இருப்பதை நேர்முறையில் நம்புகின்றன. அவர் ஒருவரே என்றும் கூறுகின்றன.இந்துக்கள் அவரை பிரம்மன் என்றும், ஈச்வரன் என்றும் பரமாத்மாஎன்றும் அழைக்கின்றனர். கிறிஸ்தவர்கள்அவரை, பரமண்டலத்திலுள்ள பரம பிதா என்றழைக்கின்றனர். யூதர்கள்அவரை ஜெஹோவா என்றும், ஜாரதுஷ்டிரர்கள் அவரைஅஹுரமஸ்தா எனவும், முஸ்லிம்கள் அவரை அல்லா எனவும்அழைக்கின்றனர். அதனையே இந்து ஞானியர், “ஏகம் ஸத், விப்ராபஹுதா வதந்தி (இருப்பது ஒன்றே, ஞானியர் பலவிதமாகக்கூறுகின்றனர்) என்று நிர்ணயித்து விளக்கினர்.”
  2. பல்வேறு மதங்களின் இறைவன் அழைக்கப்படும் பெயர்கள்கீழே தரப்பட்டுள்ளன:
    • இந்து மதம்: ஈச்வரன், பரமாத்மா, பிரம்மன்.

      (இந்து மதக் கோட்பாட்டில் கடவுள் ஈச்வரன் என்று தலைவர்என்று கருதி அழைக்கப்படுகிறார். வேதாந்தக் கருத்தில் அவர்’பிரம்மன்’- முழுமையானவர் எனப்படுகிறார்.)

    • ஜாரதுஷ்டிர மதம்: அஹுர மஸ்தா (பரம ஞானி), சத்தியம், ஞானம், பேரொளி இவற்றின் முழுமையே கடவுள்.
    • சமண மதம்: அர்ஹத், கேவலின்.
    • புத்த மதம்: புத்த நிலை – நிர்வாணம் (ஆபூத், அக்ஷர், த்ருவ, சத்தியம்) பிரேமை, பேரறிவு இவற்றின் திருவுருவம்.
    • யூத மதம்: ஜெஹோவா
    • தாவோ மதம்: தாவோ, முடிவான இருப்பும், சத்தியமும்
    • இஸ்லாம்: அல்லாஹ் – இரக்கமும், பெருங்கருணையும் நிறைந்தவர். படைப்பின் ஒரே தலைவர். (கடவுள் ஒருவரே, முகம்மது அவரது தூதர்)
    • சீக்கிய மதம்: ஸத் அல்லது அகால். (கடவுள் ஒருவரே, அவரது பெயர் ஸத்யம், அவர் என்றும் உள்ளவர்)
    • கிறிஸ்தவ மதம்: பரமண்டலத்திலுள்ள பரம பிதா.

    ஆக எல்லா மதங்களும், கடவுள் ஒருவரே என்றஅடிப்படையான நம்பிக்கையைக் கொண்டுள்ளவை.

  3. எல்லா மதங்களும் இறைவனை மூன்று அம்சங்களில்விவரிக்கின்றன (viz) படைத்தல், காத்தல், அழித்தல், (இந்துமதம்)இந்துக்கள் இவற்றைப் பிரம்மத்தின் மூன்று அம்சங்களாகப்பிரம்மா, விஷ்ணு, மகேசுவரன் என்று குறிப்பிடுகின்றனர். கிறிஸ்துவர்கள் பரம பிதா, தெய்வமகன், புனித ஆவிஎன்றிவ்வாறாக வருணிக்கின்றனர். சீக்கிய மதம் படைப்பவர்,பாதுகாவலர், யாரிடம் எல்லாம் முடிவில் வந்து சேர்கின்றனவோஅவர், என்று இறைவனைக் கூறுகின்றது.
  4. மனிதன், இறைவனுடன் கொண்டுள்ள உறவு: மனிதன்இறைவனில் ஒரு பகுதி, ஒரு துண்டு, (அம்சம், முகப்பு) என்றுகூறுகிறது இந்து மதம். “மூக்குக்கு அருகில் கண் இருப்பது போல,கடவுள் என்னருகில் இருக்கிறார்” என்கிறது ஜாரதுஷ்டிர மதம்.“துகளிலிருந்து இறைவன் மனிதனைப் படைத்து, அவனுக்குள்ளேஆவியை ஊதினார்” என்று கிறிஸ்தவமும், யூதமும், இஸ்லாமும்கூறுகின்றன.“ஆத்மாவே மனிதனின் எஜமானன்” என்பது புத்த மதம்.இறைவன் உனக்குள் இருக்கின்றார் என்பது சீக்கிய மதம்“இறைவன் எல்லா இருப்பினுக்கும் அடிப்படையாவர்’ என்பது யூதமதம்.
  5. எல்லா மதங்களும் படைப்பியக்கத்துக்கு நற்றுணைசெய்யும், நற்குணங்கள் மிகுந்த தேவர்களை, தேவதைகளைநம்புகின்றன. அவர்களை வழிபடுவதைப் பல கடவுளர் நம்பிக்கைஎன்று திரித்துப் பொருள் கொள்ளலாகாது.
  6. எல்லா மதங்களும் பூவுலகம், சுவர்க்கம் (துறக்கம்) நரகம்என்ற மூவுலங்களை நம்புகின்றன. இவற்றிற்கு ஸ்தூலமானபொருள் கொள்ளலாகாது. இவை முந்நிலை உணர்வுகளையும், வாழ்க்கை நெறிகளையும் தெரிவிக்கின்றன. நரகம் என்பது மனிதத்தன்மையினை விடத் தாழ்ந்த உணர்வு நிலையினையும், அதற்குரியவாழ்க்கையினையும் குறிக்கும். பூவுலகம் என்பது மனிதத்தன்மையினையும் அதற்குரிய வாழ்க்கை நெறியினையும் குறிக்கும், சுவர்க்கம் (துறக்கம்) என்பது தெய்வத் தன்மையினையும்அதற்குரிய வாழ்க்கை நெறியினையும் குறிக்கும்.
  7. எல்லா மதங்களும் உயிர்த் (ஜீவ) தத்துவத்தைநம்புகின்றன. “சாவது உடலேயன்றி, உயிரன்று” என்பது கீதை “துகளாக இருக்கும் நீ, துகளுக்கே திரும்பிச் செல்கிறாய் என்பதுஉயிருக்குப் பொருத்தமானதல்ல” என்று பைபிள் கூறுகிறது.
  8. எல்லா மதங்களும் தியாகத்தின் மதிப்பினையும்,அவசியத்தையும் வலியுறுத்திகின்றன. “இறைவனின்திருவுள்ளத்திற்கு உன்னை அர்ப்ணித்துக்கொள்” என்கிறது குர்ஆன். “சிற்றயிருணர்வை ஆன்மவுணர்வினுக்குத் தியாகம் செய்” என்கிறது கீதை.
  9. மனிதனின் சமத்துவத்தில் எல்லா மதங்களும் நம்பிக்கைகொண்டுள்ளன. எல்லோரும் இறைவனின் மைந்தர்கள்;எல்லோரும் சமமானவர்கள். “நமது ஆளுமைத் தன்மையின்சூக்கும நிலைகளில், எனக்கும், அவருக்கும் (இறைவனுக்கும்)உனக்கும் இடையே வேறு பாடில்லை” (எல்லோருக்கும் ஆத்மாஒன்றே என்பதிலும், எல்லோரும் எல்லா நற்குணங்களையும்வெளிப்படையாகவோ, உட்கிடக்கையாகவோ பெற்றிருக்கின்றனர்என்பதிலும் எல்லாரும் சமமானவரே).
  10. எல்லா மதங்களும் பிரார்த்னையின் ஒப்பற்றமதிப்பினையும், பயனையும் வலியுறுத்துகின்றன. பிரார்த்தனைஎன்பது மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உள்ள தங்கச்சங்கிலியாகும். அது எல்லாம் வல்ல இறைவனுடன் நாம் கொள்ளும் அந்தரங்கமான பேசாமொழிக்கும்,ஒன்றிப்புக்கும்வழிமுறையாகும். அது ஒருமுகநோக்கினை (Concentration) அதிகரித்து, இதயத்தைத் தூய்மைப்படுத்தி,அகத்திலும் புறத்திலும் அமைதியைக் கொண்டு வருகிறது.
  11. எல்லா மதங்களும், நீதி நெறிமுறையான வாழ்க்கையின்அவசியத்தை ஒரேவிதமாக வலியுறுத்துகின்றன சமய வாழ்க்கைக்குஅறநெறி தவிர்க்க இயலாத, அவசியமான அடிப்படைத்தேவையாகும்.
  12. முடிவான இலட்சியம்: எல்லா மதங்களின் முடிவும்இலட்சியமும், மனிதனைப் பூரண முழு மனிதனாக்குவது தான்.சமயமில்லாது, மனிதன் முழுமையாக இயலாது சமயமேமனிதனைக் கடவுளுடன் இணைக்கிறது. அவனை தெய்வவடிவினனாக மாற்றுகிறது. இதற்கு முதலில் ஆன்மீக முயற்சிஅவசியமாகும். பிறகு இறைவனது அருள் அதனை நிறைவிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன