ஜகன்நாத்பூரி

Print Friendly, PDF & Email
ஜகன்நாத்பூரி


பறந்து விரிந்திருந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் இந்திரத்யும்னன் காலத்தில் நடைபெற்றதாக இந்த வரலாறு கூறப் பெறுகிறது. ஓர் இரவு இறைவன் கனவில் வந்து தமக்கு ஒரு கோவில் கட்டும்படி பணித்தார். மாபெரும் கோவிலொன்றை அமைக்க, அரசன் தன் முழு நேரத்தையும் அளவற்ற செல்வத்தையும், தன் ஆற்றல் அனைத்தையும் கூட செலவிட்டான். மறுபடியும் அவன் ஒரு கனவு கண்டான். அதன்படியே கடலோரத்தில் அலைகளால் தள்ளப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் ஒரு மரத்துண்டை எடுத்து வந்தான். அந்த மரத்துண்டில் இறைவனுடைய திருவுருவை யார் செதுக்குவது என்ற ஒரு புது சிக்கல் எழுந்தது. அப்போது முன்பின் தெரியாத ஒரு பெரியவர் தாமே முன் வந்து அழகிய சிற்பமாகச் செதுக்கித் தருவதாக பொறுப்பேற்றார். அங்ஙனம் வந்தது வேறு யாருமில்லை. தேவ தச்சனான விசுவகர்மாவே தான் அது. அவர் ஒரு நிபந்தனை இட்டார். அதாவது தாம் பணியாற்ற ஒரு அறை தரப் பெற வேண்டும் என்றும், இருபத்தோரு நாட்களுக்கு அந்த அறையின் கதவை யாருமே திறக்க முயலக் கூடாது என்றும் கட்டளயிட்டார். சில நாட்களுக்கு அரசியார் அவ்வறையில் தச்சு வேலை செய்யும் ஒலியை கேட்டு வந்தாள். ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கு பேரமைதியே நிலவியது. அதற்குமேல் அரசியால் பொறுக்க இயலாதவளாய் வேகமாகச் சென்றுத் திடுமென அந்த அறையின் கதவுகளைத் திறந்து விட்டாள். உடனே அதனுள் இருந்த பெரியவர், கிருஷ்ணர், அவரது தமையனார் பலராமர், தங்கை சுபத்ரா, ஆகிய ஜகன்நாத் கோவிலின் முற்றுப்பெறாத திருவுருவங்களை அங்ஙனமே விட்டு விட்டு மறைந்து விட்டார்.

ஜகன்நாத் பூரியில் இரத உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோது திரு மூர்த்தங்கள் பதினாறு சக்கரங்கள் கொண்ட பெரிய மரத்தேர்களில் அமர்ந்து குண்டிகர கோவிலுக்குச் செல்லும் பவனியைக் காண ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். இந்தத் தேர் பவனி, கிருஷ்ணர் கோகுலத்திலிருந்து மதுரா நகருக்குச் செல்வதை விளக்குகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன