ஜபமாலை உடனான ஜெபம்

Print Friendly, PDF & Email
ஜபமாலை உடனான ஜெபம்

ஜபமாலையை பற்றி கி.மு 800 இல் 800 வருடத்தில்) அதர்வண வேதத்தில் முதல் முதலாக கூறப்பட்டிருக்கிறது. ஜபமாலை 108 மணிகளால் ஆனது. 108 மணிகள் இருந்தாலும், ஜெபமாலை யானது ஒற்றுமையை கற்றுத்தருகிறது. மணிகளின் ஊடே செல்லும் நூல்/கயிறு, அவற்றை ஒன்றிணைத்து மாலையாக உருவாக ஆதாரமாக இருக்கிறது.

SSS vol 7,p 36

ஜபமாலை உபயோகிப்பது எவ்வாறு?

நமது கையில் உள்ள சுண்டு விரல், மோதிர விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்றும் மூன்று குணங்களைக் குறிக்கின்றன

  1. மந்தமான தாமச குணம் – சுண்டுவிரல்
  2. உணர்ச்சி பூர்வமான மாறுபட்டுக் கொண்டே இருக்கும் இராஜஸ குணம்- மோதிரவிரல்
  3. சமநிலைப் பொருந்திய தூய்மையான சத்வ குணம் – சாத்வீக குணம் – நடுவிரல்

நமது ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவை குறிக்கும், வாழ்க்கை விரல். கட்டைவிரல் பிரம்மனைக் குறிக்கிறது. கட்டைவிரலுடன் ஆள்காட்டிவிரல் இணைவது, பரமாத்மாவுடன் இணைய விரும்பும் ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

மற்ற மூன்று விரல்களும் விரிக்கப்பட்ட நிலையில் ‘சின்’முத்திரை உருவாகிறது. ஜபமாலை நடுவிரலின் மேல் வைக்கப்பட்டு கட்டைவிரலால் திருப்பப்பட வேண்டும் ஆள்காட்டி விரல் கட்டை விரலின் மேல் வைக்கப் பட்டு, மூன்று குணங்களைக் குறிக்கும் மற்ற மூன்று விரல்களில் இருந்து நீக்கப்படுகிறது. ஒவ்வொரு மணியாக உருட்டி ஜபம் செய்யும் பொழுது, ஜீவாத்மாவை குறிக்கும் ஆள்காட்டிவிரல் அவ்வப்போது நடுவிரலைத் தொட்டாலும், சாத்வீக குணத்தை மட்டுமே தொடுவதாக அமையும். மற்ற இரண்டு குணங்களில் இருந்தும் நீங்கி நிற்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன