ஓம் ஸர்வே வை – செயற்பாடு

Print Friendly, PDF & Email
ஓம் ஸர்வே வை – செயற்பாடு
கற்பிக்கப்படும் பண்பு நலன்:

எப்போதும் மகிழ்ச்சியாக இரு.

தேவைப்படும் பொருட்கள்:

டேப் ரிகார்டர் (அல்லது அதற்கு பதிலாக குருவே பாடலாம்) மற்றும் சில சாக்பீஸ் துண்டுகள்

இந்த விளையாட்டை வீட்டிற்கு வெளியே விளையாடினால் நன்றாக இருக்கும். குரு தரையில் இரண்டு வட்டங்களை வரைய வேண்டும். படத்தைக் காண்க.

படத்தில் கண்டுள்ளபடி அந்த வட்டம் சிறு சிறு பகுதிகளாகப் (அதாவது ஒரு குழந்தை நிற்கும் அளவுக்கு) பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும், சிரித்த முகம், வருத்த முகம் வரைய வேண்டும்.

பிறகு, குழந்தைகள் அனைவரும், ஒரு கட்டத்தில் ஒருவராக நிற்க வேண்டும். பாடல் இசைக்கத் தொடங்கியதும் குழந்தைகள் ஒவ்வொரு கட்டமாகக் குதித்துக் குதித்துச் செல்ல வேண்டும். நடக்க அனுமதியில்லை. ஒவ்வொரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கட்டாயம் இரண்டு கால்களாலும் குதித்துத் தான் செல்ல வேண்டும்.

ஒரே கட்டத்தில் இரண்டு முறை குதிக்கவும் அனுமதி இல்லை. கட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஒரு கட்டத்தில் ஒரு காலும், மற்றொரு கட்டத்தில் இன்னொரு காலும் வைத்திருக்கக் கூடாது.

பாடல் நிற்கும்போது குழந்தை எந்த கட்டத்தில் இருக்கிறானோ அதே கட்டத்தில்தான் நிற்க வேண்டும்

சிரித்த முகம் உள்ள கட்டத்தில் நிற்கும் குழந்தை ஆட்டத்தில் தொடரும். வருத்த முகம் உள்ள கட்டத்தில் நிற்கும் குழந்தை வெளியேறும். இதுவே விதி முறை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன