கும்பகர்ணனின் இறப்பு
கும்பகர்ணனின் இறப்பு
ஆறு நாட்கள் கடுமையான போர் நடந்தது. ஆனால் ராக்ஷஸர்கள் அழிந்தனர். இராவணன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான்.அவனுடைய சகோதரன் கும்பகர்ணனின் உதவியை நாடினான். கும்பகர்ணன் அவனிடம், மிகவும் கீழ்த்தரமாகச் செயல் புரிந்து மற்றொருவனின் மனைவியை அபகரித்ததாகவும், அதனால் அவனை இராமரிடம் மன்னிப்பு கேட்கும் படியும் சொன்னான். ஆனால் இராவணன் கும்பகர்ணனின் சொற்களை புறக்கணித்தான். முடிவில் இராவணனுக்கு உதவும் பொருட்டு கும்பகர்ணன் போர்க்களம் சென்றான். அவன் சுக்ரீவனைக் கசக்கி தன் கை இடுக்கில் வைத்துக் கொண்டான். போர்க்களத்திலிருந்து அவன் வானர அரசனான சுக்ரீவனைத் தூக்கிச் சென்றதன் மூலம் வானரப்படையே தோல்வி கண்டதாக கும்பகர்ணன் கூறினான். சுக்ரீவன் அவனுடைய கையிடுக்கில் இருந்து விடுபட்டுத் தாக்குதலை தொடர்ந்தான். எப்படியிருந்தாலும் பல வானரர்கள் பயந்து போய் உயிரை விட்டனர். பிறகு இராமர் தான் களம் புக வேண்டிய நேரம் வந்து விட்டதாகச் சொல்லி, லட்சுமணனை தன்னுடைய வற்றாத அம்புகள் உள்ள அம்பராத்துணியின் உறையைக் கொண்டு வரச் கொன்னான். கோதண்ட வில்லுடன் இராமர், போர் நடக்கும் இடத்திற்குச் சென்றார். இராமருடைய சரமாரியான அம்பினால் ராக்ஷஸர்கள் வீழ்ந்தனர். கும்பகர்ணன் அவனால் முடிந்த வரையில் இராமருடன் போரிட்டான். ஆனாலும் அவன் முடிவு இராமர் கைகளினாலேயே நிகழ்ந்தது. கும்பகர்ணன் உடலிலிருந்து ஒரு சிறந்த ஒளி புறப்பட்டு இராமருள் கலந்தது.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
எத்தனைதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, அநியாயமும், அக்கிரமமும் செய்பவர்களாயின் ஒருபோதும் அவர்களுக்கு நீ துணையாக இருக்ககூடாது. அவர்களை கெட்டப் பழக்கங்களிலிருந்து தடுத்து நல்லவர்களாக்க உன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
அப்படி அவர்களை நல் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்றால் அவர்களை விட்டுப் பிரிவதே உனக்கு நல்லது. பின்விளைவு தெரிந்தும் அவர்களுடனேயே சென்றால் அவர்களுடன் சேர்ந்து உனது வாழ்க்கையும் பாழாகும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர்.
உனது வார்த்தை, செயல், எண்ணம், ஒழுக்கம் , இதயம் – ஆகியவைகளைக் கவனி.
[இங்கு குருமார்கள் ஜய, விஜயர்களின் கதையைக் கூறவேண்டும். இவ்விருவர்களும் மகாவிஷ்ணுவின் யதாஸ்தானத்தின் வாயிற்காப்பாளன் ஆவார்கள். இவர்களே த்ரேதா யுகத்தில் சாபக்கேட்டால் ராவணனும், கும்பகர்ணனுமாக மறுபிறவி எடுத்து தங்களது தவற்றை திருத்திக்கொள்ள வந்தவர்கள். ஆகையால்தான் கும்பகர்ணனின் மரணம் ஸ்ரீ ராமரின் கையால் ஏற்பட்டது. (மகாவிஷ்ணுவின் அவதாரம்) கடைசியில் அவரிடமே ஐக்கியமானான். ஜய விஜயர்களுக்கு கிடைத்த சாபத்தால் மூன்று யுகங்களில் மூன்று பிறவிகள் எடுத்த கதைகளை ‘வேதானுத்தரதே’ என்ற ஸ்லோகத்தை எடுக்கும்போது கூற வேண்டும்.]