வீணாக்காதே

Print Friendly, PDF & Email
வீணாக்காமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்
ஆசிரியர் பயிற்சியை மெதுவாகப் படித்து, புள்ளிகளில் இடைநிறுத்த வேண்டும். 
திமிங்கலங்களின் ஒலிகள் போன்ற நீர் மற்றும் இயற்கை ஒலிகளின் சில இசையை இசைக்கவும்.

ஷமெதுவாக உட்கார்ந்து உங்கள் கால்களைக் மடக்கவும். (குழந்தைகள் அவர்கள் நின்ற இடத்தில் அமர வேண்டும்).

உங்கள் முதுகை நேராக வைத்து உட்காரவும்.

உங்கள் முழங்கால்களில் கைகளை வைத்துக் கொள்ளலாம்.

அனைவரும் ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுக்கவும் பின்பு வெளியே விடவும்.

இந்த முறை அமைதியாக முயற்சிப்போம்.

உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அசையாமல் வைத்து, அறை எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்பதைக் கேளுங்கள்.

நீங்கள் விரும்பினால், கண்களை மூடலாம் (5 வினாடிகள் இடைநிறுத்தவும்)
வகுப்பறைக்கு வெளியே உள்ள ஒலிகளைக் கேளுங்கள்.

மழைத்துளிகள்… காற்று… பறவைகள்… நாய் குரைக்கிறது…

வீணாக்காமல் பூமிக்கு உதவும் வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்…

மெதுவாக உங்கள் உடலை விடுவித்து, கண்களைத் திறந்து புன்னகைக்கவும்.

இப்போது அமைதியாக எழுந்து ஒன்றாக நெருங்கி வாருங்கள். உட்காருங்கள்.

விவாதம்:
  1. நீங்கள் என்ன சத்தம் கேட்டீர்கள்? என்பதை விவாதிக்கவும்.
  2. நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
  3. எப்படி உணர்ந்தீர்கள்?
  4. நீங்கள் அமைதியான நேரத்தை அனுபவித்திருந்தால் உங்கள் கையை மேலே உயர்த்தவும்.

[குறிப்பு: மனித மதிப்புகளில் சத்ய சாய் கல்வி, கரோல் ஆல்டர்மேன் எழுதிய குணாதிசயங்கள் மற்றும் உணர்ச்சிக் கல்வியின் வளர்ச்சிக்கான பாடத்திட்டம்]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: