மஹாவீர் ஜெயந்தி – உட்கருத்து

Print Friendly, PDF & Email
மஹாவீர் ஜெயந்தி

மஹாவீர் ஜெயந்தி என்பது ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்காரரான வர்த்தமான மஹாவீரரின் பிறந்த நாள் விழாவாகும். ஜைனர்கள் இத்திருநாளை மஹாவீரர் ஜன்ம கல்யாணக் என்று கூறுகிறார்கள். சைத்ர (சித்திரை) மாதம் சுக்லபக்ஷ திரயோதசி அன்று மஹாவீரர் அவதரித்தார். ஆங்கில வருடக் கணக்குப்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

மஹாவீர் ஜெயந்தி நன்னாளில் கோவில்களில் தீர்த்தங்காரர்கள் சிலைக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. இந்தப் புனித நாளில் தீர்த்தங்காரர்கள் நினைவாக பலர் தரும காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் கோவில்களுக்குச் சென்று தியானமும் பிரார்த்தனையும் செய்கிறார்கள். ஜைனமதக் கொள்கைகளைப் பற்றிய பிரசங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. பசுவதையைத் தடைசெய்தலும், பணம் வசூ-த்து பெரிய அளவில் ஏழைகளுக்கு அன்னதானங்களும், எளியவர்களுக்கு உடைகள் வழங்குவதும் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன