மன்மனாபவ – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
மன்மனாபவ – மேலும் படிக்க
மன் மண பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மானம் மத் பராயண:

(அத்.09, பதி.34)

பொருள்: உனது சிந்தைகளனைத்தையும் என் மீது இருந்துவாயாக! என் மீது பக்தி கொண்டிரு. என்னை வழிபடு! என்னை வணங்கு! முற்றிலும் என்னில் கலந்துவிட்ட நிலையில் என்னை உறுதியாக அடைவாய்!

ப்ருந்தாவனத்தில் மாலை நேரங்களில் கோபியர்கள் கிருஷ்ணன் வளர்கின்ற நந்தகோபரின் இல்லத்திற்குச் செல்வார்கள். அங்கே முதலில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து தம் இல்லத்திற்கு ஒளியேற்ற முனைவார்கள். அந்த புனிதமான விளக்குகளில் இருந்து தம் விளக்குகளில் ஒளியெற்றிக் கொள்வதன் மூலம் புனிதத் தன்மையைத் தம் இல்லங்களுக்குக் கொண்டு செல்வதாக உணர்ந்தார்கள்.

ஒரு நாள் கோபியருள் ஒருத்தி கிருஷ்ணனின் இலலத்தில் விளக்கேற்றிக் கொள்ள நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாள். காத்துக் கொண்டிருந்த மற்ற கோபியர்கள் பொறுமையிழந்து சீக்கிரம் வர வேண்டினர். பொறுமையிழந்த அவர்களது ஆரவாரத்தைக் கேட்ட யசோதை வெளியே வந்து கண்களை மூடிக் கொண்டு மெய்மறந்த நிலையில் இருக்கும் பெண்ணையும் அவள்தம் விரல்கள் தீக்குள் எரிந்து புண்ணாகிப் போயிருப்பதையும் கண்டாள்.அவள் சுற்றுப்புற சூழ்நிலையை அறியாதவளாக இருந்தாள். அவளை நினைவு கொள்ளச் செய்தபொழுது, அவள் தாம் விளக்கின் சுடரில் தாம் கிருஷ்ணனைக் கண்டதாகக் கூறினாள். கிருஷ்ணனின் தரிசனம் அவளுக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்து அவளது விரல்கள் தீச்சுடரில் இருப்பதையும் அதனால் அவை எரிந்து கொண்டிருப்பதையும் கூட அறிய விடாமற் செய்தது. அவள் அதனால் ஒரு போதும் துன்பமடையவில்லை. இத்தகையதே கோபியரின் ஒருநிலை கொண்ட பக்தியாகும்.

“கடவுள் ஒவ்வொரு உயிரினத்தின் உறையும் ஆத்மா ஆவார். இதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை நடத்தினால் அதுவே உங்களுக்குப் போதிய தியானமாகும். இந்த நம்பிக்கை தடுமாற்றம் அடையாமல், நிலை குலையாமல் இருக்குமாறு கவனித்து கொள்ளுங்கள். இந்த நம்பிககையை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடைபிடித்து உங்கள் எண்ணம், சொல் மற்றும் செயல்களில் பிரயோகியுங்கள்.” என நம் பேரன்புக்குரிய பகவான் உரைக்கின்றார்.

இறைவன் எல்லாவற்றுள்ளும் உறைந்துள்ளதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பகவான் அவர்களின் ‘அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்’ எனும் போதனையை பின்பற்ற இயலும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன