மனிதனே முதன்மைப் படைப்பு

Print Friendly, PDF & Email
மனிதனே முதன்மைப் படைப்பு

படைப்பிலிருந்து மனிதன் வெளி வந்தான். அவன் பஞ்ச பூதங்களால் ஆனவன். ஆற்றலால் போஷிக்கப்படுபவன். படைப்பினில் மனிதன் தலை சிறந்தவன். ஏனெனில் தன்னைப் பற்றிய உண்மையினையும், படைப்பினை பற்றிய உண்மையினையும் அறிந்துக் கொள்ளும் திறமை அவனுக்கு மிகுதியும் உள்ளது. படைப்பின் தொடக்கத்திலிருந்து, மனிதன் தெய்வீகத்தை நோக்கிய நீண்ட பயணம் செய்கிறான். கோடிக்கணக்கான பிறவிகளில், கோடிக்கணக்கான வருடங்கள் முன்னேற வேண்டுமென்று போராடியதன் பயனாக மனிதன் இப்போதைய நிலையை அடைந்திருக்கிறான்.

படைப்பு தொடங்கியதிலிருந்து, கணக்கற்ற உயிர்கள் வாழ்ந்து மறைந்திருக்கின்றன. ஆனால் மனிதன் விலங்கு இனத்தின் மகுடம் போன்றவன். அவனே ஜீவராசிகளின் சிகரம். மனிதன் மட்டுமே, தான் யார் என்பதை ஆராய்ச்சி செய்து, தனது உண்மை இயல்பான தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்திக் கொள்ளுகிறான். ஆகவே தான் “ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம்” என்று கூறப்படுகிறது.

– ஸ்ரீ சத்ய சாயி

மனிதன் உள்ளியல்பில் தெய்வீகமானவன். ஆனந்தம் அவனது இயல்பு. மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வீகம் உறைந்துள்ளது. துக்கமும் துன்பமும் அவன் இயல்புக்கு விரோதமானவை. மனிதனுக்கு அளிக்கப்பட்ட திறமைகளைக் கொண்டு, தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்து மகிழவும், தனக்குள் மறைந்திருக்கும் அன்பின் ஆற்றலை வெளிப்படுத்தவும் இயலும். அத்தகையதிறமைகள் அவனுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

இயற்கையின் பஞ்சபூதங்களுடன் மனிதனுக்கு வலுவான தொடர்பிருக்கிறது என்ற உண்மையை பாபா நமது கவனத்துக்குக் கொண்டு வருகிறார். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள இந்தத் தொடர்பு பிரிக்க இயலாதது. ஏனெனில் மனிதனும், தெய்வீக ஆற்றலைத் தனது மூல ஊற்றாகக் கொண்டு, பஞ்ச பூதங்களின் வெளிப்பாடாக இருக்கிறான். பஞ்ச பூதங்கள் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றன.

நாம் எப்போதும் பஞ்ச பூதங்களை உள்ளேயும் வெளியேயும் மாற்றிக் கொண்டு இருக்கிறோம். உதாணமாக நாம் உணவு உண்ணும் போது, ஒரு பகுதி ஜீரணம் செய்யபடுகிறது. இன்னொரு பகுதி இயற்கைக்கே சென்று விடுகிறது. காற்றின் ஒரு பகுதியை நாம் சுவாசிக்கிறோம். ஒரு பகுதியை உள்ளே வைத்துக் கொள்கிறோம். மிஞ்சத்தை உள்ளே இருக்கும் வேறு பொருட்களுடன் வெளியே தள்ளி விடுகிறோம். இவ்வாறு எப்போதும் நாம் இயற்கையுடன் ஏதாவது பரிமாறிக் கொண்டே இருக்கிறோம் “From Dust thou cometh, to dust thou returneth” துகளிலிருந்து வந்தாய். துகளுக்கே செல்வாய் என்பது ஸ்தூலப் பொருட்களைப் பொறுத்தவரையில் உண்மையானவை.

மனித உயிரினம், மாறுபட்ட சூழ்நிலையில் சம நிலையைக் கடைப்பிடிக்கும் இயல்பான திறமையுடன் செயல்படுகின்ற, (முழுமையாக ஒன்றிணைந்த) தகைமை பெற்றது. பஞ்ச பூதங்களுக்கிடையே சமநிலையைக் கடைபிடிக்கும் இயல்பான தன்மையுடன் குணப்படுத்திக் கொள்ளும் அமைப்புக் கொண்டது மனித உடல். அது வேண்டாதவற்றை வெளியே அனுப்பித் தேவையானவற்றை உணவு, காற்று, சூரிய ஒளி போன்றவற்றின் மூலமாக எடுத்துக் கொள்கிறது. அதிக வெளிச்சம், அடிக்கடி மாறும் வெளிச்சம், அதிக சத்தம் இவை மனிதனுக்கு எரிச்சலைத் தருகின்றன.

படைப்பினில் பஞ்சபூதங்கள் உள்ளன.ஆனால் மனிதனும் ஆறாவதான பூதம்-பொருள்-ஒன்று உள்ளது. அதுவே தன்னிகரற்ற அன்பு.

– ஸ்ரீ சத்யசாயி (20-5.2000)

வாழ்க்கை அன்புடன் தொடங்குகிறது. வாழ்க்கையின் மூலம் அன்பின் இனிமை வெளிப்படுகிறது என்பதே அனைத்துக்கும் மூல ஊற்றாக இருக்கும் ஒப்பற்ற தத்துவம்.

– ஸ்ரீ சத்யசாயி (13-01-1992)

மனிதனுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையில் இயல்பாகவே இசைவான தொடர்பு உண்டு என்று வெளிப்படுத்துவதன் மூலம் பகவான் பாபா, இயற்கையின் எல்லாப் பொருட்களையும் புனித நிலைக்கு உயர்த்தியுள்ளார். மனிதன் இந்த முழுமையான தொடர்பினைப் புரிந்து கொள்ளத் தகுதி பெற்றவன்.

உலகளாவிய அமைதிக்கான சம நிலை
பூதங்கள் (Element) புலன்கள் (Senses) மேம்பாடுகள (Values) வளம் (Resources)
வெளி (Space) ஒலி (Sound) அன்பு (Love) காலம் (Time)
காற்று (Air) தொடுகை (Touch) சத்யம் (Truth) அறிவு (Knowledge)
நெருப்பு (Fire) பார்வை (Sight) தர்மம் (Righteousness) ஆற்றல் (Energy)
நீர் (Water) சுவை (Taste) சாந்தி (Peace) பணம் (Money)
பூமி (Earth) மணம் (Smell) அஹிம்சை (Non-violence) உணவு (Food)

வாழ்க்கையில் சம நிலையும் இயற்கையில் சமநிலையும் மிகவும் முக்கியமானவை. பரஸ்பரத் தொடர்பு கொண்டவை.

இத்தகைய சமநிலை ஏற்பட்ட பின் உலகின் சம நிலை ஏற்படும். ஐந்து செல்வங்களைப் பயன்படுத்தும் போது ஆசைகளுக்கு உச்ச வரம்பைக் கொண்டு வர வேண்டும்.

இயற்கை வளங்களுக்கிடையே உள்ளமைதி, இசைவு, அழகு இவை இயல்பாக நிலவுகின்றன.

அனைத்து மனித செயல்களையும், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளையும் பஞ்சபூதங்களுக்குத் தக்கவாறு ஐந்து நிலைகளில் வரிசைப்படுத்தலாம். விவசாயத் தொழில்கள் அனைத்தையும் பூமியுடன் சம்பந்தப்படுத்தலாம். தாதுப் பொருட்களைத் தோண்டியெடுத்தல், எண்ணெய், தண்ணீர் நிலையங்கள் இவற்றை நீருடன் தொடர்புபடுத்தலாம். நெருப்பு, (energy) பல்வகை சக்திகள் சம்பந்தப்பட்டது. காற்று, விமானப் பயணம், மூச்சு விடுதல், பறவைகள் இடம் மாறிச் செல்வது, மக்கள் தொகையில் மாற்றம். இவை சம்பந்தப்பட்டது. ஆகாயம், கம்ப்யூட்டர், மைக்ரோவேவ், விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது.

முழுமையான மகிழ்ச்சிக்கு அன்பினை வெளிப்படுத்தும் அளவுக்கு ஸ்தூல உலகம் நமக்கு திருப்தி தரும். இயற்கையின் அம்சமான மனிதன், இயற்கையுடன் ஒன்றியிருக்கும் போதுதான் மகிழ்ச்சியுடன் அமைதியாகவும் இருக்கிறான். படைப்புக்கு ஆதாரமான பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட மனிதனின் இயல்புகளும் சூழ்நிலையுடன் ஒத்து சமநிலையுடனும் இசைவுடனும் இருக்க வேண்டும். இயற்கையின் விதிகளை மீறாதிருத்தலே அகிம்சையாகும்.

மனிதன் தான் இயற்கையில் முக்கியமான படைப்பு. அனைத்து அறிவும் மனிதனின் மனதில் உள்ளது. இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒன்றிய தொடர்பு உண்டு. மனிதனுக்கு உள்ளும் வெளியிலும் ஒரே பஞ்ச பூதங்கள் இருக்கின்றன. மனிதனுக்கு உள்ளிருக்கும் பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும் போது தான் அவனுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன