மஹா சிவராத்திரி
மஹா சிவராத்திரி
சிவராத்திரி இந்தியாவில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் உகந்த மிக மங்களமான புனித தினமாகும். கிருஷ்ணபக்ஷத்தின் பதினான்காவது நாள் சிவராத்திரி (பௌர்ணமியி-ருந்து அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை அல்லது கிருஷ்ணபக்ஷம்). இங்ஙனம், ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிவராத்திரி இருக்கிறது. எனினும், மாசிமாதத்து சிவராத்திரி மஹா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
மனம் சந்திரனுடன் நெருங்கிய தொடர்புடையது. சந்திரன் மனதின் அதிதேவதையாகும். பௌர்ணமி நாளி-ருந்து சந்திரனின் 16 கலைகள் பிரதி தினமும் ஒவ்வொன்றாகத் தேய்ந்து சதுர்த்தசி இரவில் ஒரு கலைதான் மிஞ்சுகிறது.
ஆன்மீகச் சாதனாக்களைக் கடைப்பிடித்தால், சந்திரன் தேய்வது போல மனமும் தேய்ந்து வரும். முடிவாக கிருஷ்ணபக்ஷத்துச் சதுர்த்தசி இரவன்று அழிக்கப்படவேண்டிய ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளது. அன்று விழித்திருந்து இறைவனுடைய பெருமையில் ஆழ்வதனால் மனதை (ஆசைகளை) அழிக்கும் சாதனாவில் வெற்றியடைய முடியும். சதுர்த்தசியன்று தூங்காமல் விழிப்பாக ஒருவன் இருக்க வேண்டும் என்பது ஒருவன் சாசுவதமாக ஆன்மீக விஷயங்களில் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உண்ணாம-ருக்க வேண்டும் என்ற மரபு, புலன்கள் அடைய விரும்பும் இன்பங்களை விட்டாக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இரவு முழுவதும் செய்யும் வழிபாடும் நாமஸ்மரணையும் இறைவனை சந்தோஷப்படுத்துவதற்காக அல்ல, நமது சொந்த ஆன்மீக முன்னேற்றத்துக்காகத்தான் என்பதை உணரவேண்டும். பஜனை செய்வதாலும், பாடல்களில் தெய்வீகக் குணங்களைப் போற்றுவதாலும் நமது மனம் மிக உயர்ந்த இலட்சியங்களில் தோய்ந்து தெய்வீகக் குணங்களை நாம் மேலும் மேலும் பெறமுடியும். நாம் எதைத் தியானிக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
சிவராத்திரியன்று பரம புருஷனான சாசுவதமான சிவன் ஆனந்த தாண்டவ(நடன)த்தில் ஈடுபட்டார் என்று சொல்லப்படுகிறது. சிவன் நடனம் ஆடும்போது அவரது திருமேனியி-ருந்து பெருவெப்பம் வெளிப்பட்டது. அவ்வெப்பத்தைத் தணிவிக்க ஜகன்மாதாவான பார்வதியானவள் குளிர்ந்த கங்கையை அவர் தலையில் வைத்தாள். அவரது குழற்சடைகளுக்கிடையே குளிர்ந்த பிறைச்சந்திரனை வைத்தாள். சந்தனத்தை அவர் திருமேனியெங்கும் பூசினாள். குளிர்ந்த குருதியோட்டம் உடைய பாம்புகளை அவருடைய கரங்களிலும், கால்களிலும் சுற்றினாள். முடிவாக, பனிமலை ராஜனின் (இமவானின்) புத்திரியான தானே அவர் மடியில் அமர்ந்தாள். அதன்பின் சிவன் எழுந்து பார்வதியுடன் சேர்ந்து இருவரும் நடனம் ஆடினர். இதனால் தேவர்களும், படைப்பனைத்தும் பேருவகை கொண்டனர். சிவ பார்வதி நடனம் சிவராத்திரியன்று நடந்தது என்றும் அதனால்தான் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.
உண்மையில், சிவராத்திரியன்று சிவசிந்தனையோடு இருந்து அவரது அனுக்கிரஹத்தை அடைய வேண்டும். சிவராத்திரியன்று விழித்திருக்க வேண்டும் என்ற புறச் சடங்குக்காக சினிமாவுக்குச் செல்வதும், சீட்டாடுவதும், சிவராத்திரியின் மஹத்துவத்தைக் குறைப்பதாகும். நமது காலத்தை வீணடிப்பதாகும்.
எல்லாச் சிவன் கோவில்களிலும் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று ஸ்ரீசைலம் என்னும் சிவúக்ஷத்திரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். இங்கு ஸ்வாமிக்குத் திருநாமம் மல்-கார்ஜுனர். இதன் பொருள் வெண்மையான மல்-கை போன்றவர் என்பதாம். அம்பாளின் பெயர் பிரமரம்பா. பிரமரம் என்றால் வண்டு. மலரிலுள்ள தேனை அருந்த வண்டு மலரைச் சுற்றிச் சுற்றி வருகிறது. சிவனாரின் தெய்வீக ஆனந்தத்தை அடைய, ஜகன் மாதாவான அம்பாள் தன் நாதனை எப்போதும் அடுத்திருக்கிறாள். நாமும் அம்பாளைப் போல் ஆனந்தத்தை அடைய எப்போதும் அவரை அடுத்து வந்தனை செய்தும் சிந்தனை செய்தும் வாழ வேண்டும் என்பதுதான் சிவராத்திரியின் தத்துவம்.