ஸாந்தாகாரம் – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஸாந்தாகாரம் – மேலும் படிக்க

ஸ்துதிக் கருத்து

‘ஸ்துதிக் கருத்து : “விஷ்ணு என்றும் அமைதி தருகிறவர். அவர் பாம்பில் படுத்திருப்பவர். அவரின் நாபியினின்று தோன்றும் தாமரை, படைக்கும் சக்தியைக் காட்டுவது. அவரே லக்ஷ்மியின் கணவன். கமலக் கண்ணன். இடைவிடாது தியானிக்கும் யோகிகளின் இதயவாசி. சம்சார சாகரத்தின் பயத்தை ஒழிப்பவர். உலக நாயகனான அவரை நாம் வணங்குகிறோம்.”

ஸாந்தாகாரம்

ஸாந்தம்- சமத்துவம், கலப்பின்மை, அதாவது அவர் நம் மனத்துள் அமைதி, களிப்பு, சமநிலை, பெருங்கருணை, இரக்கம், வலிமை, மேன்மை, அசையாத அமைதி இவற்றை அருள்கிறவர்.(எல்லா தெய்வங்களிலும், இந்த பாவம் அவர்களது முகத்தில் தெரியுமாறு காட்டப்பட்டிருக்கும்)

புஜகசயணம்

விஷ்ணு நச்சுள்ள ஆயிரந்தலை நாகத்தின் மேல் படுத்திருந்தாலும் பேரமைதியின் இருப்பிடம். உலகப்பொருட்கள் அனைத்திற்கும் குறியீடாக இருப்பது அந்த நாகம். இந்த உலகத்தைப் பாம்பு தாங்குகிறது. உலகின் மேல் பாம்பு இல்லை. இது இங்குள்ள இரகசியம். நிலையில்லாத உலகத்தை இது நிலையாக தாங்குகிறது. கடலில் விஷ்ணு ஓய்வெடுப்பது என்பது பவஸாகர் என்பதன் குறியீடு( SSS V / p224 ).

பத்மநாபம்

விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றும் தாமரையில் பிரம்மா இருந்து படைக்கிறார். ஒரு குழந்தை, தொப்புள் கொடியின் மூலம் தன் தாயிடமிருந்து தேவையான சக்தியைப் பெறுவது போல் விஷ்ணுவிடமிருந்து பிரம்மா, படைக்கும் சக்தியைப் பெறுகிறார். இதுவே விஸ்வாதாரம், எல்லாப் படைப்பிற்கும் அடிப்படை என்பது.

ககனஸத்ருஸம்

விஷ்ணு மேகத்தையொத்தவர். சர்வவியாபி. எல்லாவற்றையும் காப்பவர். எப்போதும் எங்கும் அவர் அருகே எல்லாக் குழந்தைகளும் இருப்பார்கள். அவர் துரும்பிலும் இருப்பார். தூரத்திலிருக்கும் கோளத்திலும் இருப்பார். பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருப்பது போல், எல்லாப் பொருளிலும் அவர் நிறைந்து இருப்பார். இதை எவன் தெரிந்து கொள்கிறானோ அவனுக்கு அச்சமில்லை. ஆகவே விஷ்ணு பவபயஹரம். நம்பிக்கையின்மை என்பது கடவுளுக்குப் பாவம் செய்வது. உன் உள்ளே அவர் இருக்கும்போது நீ ஏன் நம்பிக்கை இழக்கவேண்டும்? ஆகவே, அவர் சொல்கிறார் “ நான் இங்கேயிருக்கும்போது நீ ஏன் அஞ்சுகிறாய்? (யாமிருக்கப் பயமேன்) எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இரு.”

மேகவர்ணம்

பரந்த ஆகாயம், ஆழமான கடல் – இவை சற்று கருமையாக இருப்பது போல், விஷ்ணுவும் கருமை நிறத்தவர். நன்கு புரிந்துகொள்ளாமை, அறியாமை இவற்றுக்கு அறிகுறி கருமை, அவரைப்பற்றிய இரகசியம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. “எவராக இருந்தாலும், எவ்வளவு காலம் முயன்றாலும், எப்படி முயற்சித்தாலும் என்னுடைய மேன்மையை ஒருவரும் அறிய முடியாது. வேதத்தில் நம்பிக்கை வைத்து ஆழமாகப் படித்தால் எனது புகழின் ஒரு கீற்றை ஒருவாறு புரிந்து கொள்ளலாம்”

யோஹிபிர்த்யான கம்யம்:யோகிகளால் தியானத்தின் மூலம் அடையப்பெறுபவர்

சுபாங்கம்

விஷ்ணுவின் வடிவமே முழுவதும் அன்புமயம், அழகுமயம். அவை எல்லா இடத்திலும் மங்களத்தையும் நன்மையையும் பரப்புகின்றன.

லக்ஷ்மிகாந்தம்

விஷ்ணு செல்வத்துக்கு அதிபதி.

லக்ஷ்மி என்பதன் பொருள்

  1. நாம் உயிர் வாழத்தேவையான 5 பூதங்கள் பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம்
  2. வளமான இந்திரியங்கள், நல்ல ஆரோக்கியம்.
  3. குண நலன்கள்,

விஷ்ணுவே ஐம்பூதங்களுக்கும் தலைவன்; எல்லா குணநலன்களுக்கும் காரணம்; நல்ல மனம், புத்தி, ஆரோக்யமான உடல் இவற்றைத் தருகிறவரும் விஷ்ணுவே.

கமலநயனம்

விஷ்ணு, தாமரைக்கு ஒப்பானவர். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவர் பாதிப்பு இல்லாதவர். எனவேதான் அவருடைய கண்ணும், பாதமும் தாமரைக்கு ஒப்பிடப்படுகின்றன.(SSS V /P.73)

ஸர்வலோகைகநாதம்

பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவர்.

ஸாந்தாகாரம் புஜகசயனம்

சின்னஞ்சிறு பொருளிலும் பரமாத்மா ஊடுருவி இருப்பவர். எதில் இருந்தாலும் அவர் பாதிக்கப்படாதவர்.

ககனஸத்ருசம்

விஷ்ணு அல்லது எங்கும் வியாபித்திருக்கும் உணர்வாக அல்லது பிரக்ஞையாக உள்ளவர். அதனுடைய படைப்புகளிலும் ஊடுருவியிருப்பவர் .

சுபாங்கம்

வெள்ளிப் பனியைவிடத் தூய்மையானவர்.

லக்ஷ்மிகாந்தம் ஸர்வலோகைகநாதம்

மூன்று உலகத்தையும், படைத்தும், காத்தும், நிற்பவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன