பாலவிகாஸ் குருமார்களுக்கான குறிப்பு
பாலவிகாஸ் குருமார்களுக்கான குறிப்பு
பிரார்த்தனையும் தியானமும்
பூரணத்துவத்தை அடைய பிரார்த்தனை மற்றும் தியானம் என்ற இரண்டு வழிகள் இருக்கின்றன. ”பிரார்த்தனை” உங்களை இறைவனின் திருவடிகளில் மண்டியிட்டு, வேண்டுபவராக ஆக்குகிறது. ”தியானம்” உங்களிடம் கடவுளை இறங்கி வரத்தூண்டி, உங்களை அவரின் நிலைக்கு உயரச் செய்ய ஊக்குவிக்கிறது; ஒருவர் கீழ் என்றும் மற்றவர் மேல் என்றும் இல்லாமல் ஒன்றாக வரச் செய்ய விழைகிறது.
(Sathya Sai Speaks V-‘Lamps lit from the same Flame’)
தியானத்தை கற்பித்தல்
“யாராவது மற்றொருவருக்கு தியானம் செய்ய பயிற்றுவிக்க முடியுமா? அல்லது பயில்விக்கிறேன் என்று கூறிக்கொள்ளத்தான் முடியுமா? ஒருவருக்கு என்ன ஆசன முறையில் இருந்து கொண்டு தியானம் செய்வதென்றும், நிலை, கால்கள், பாதங்கள், கைகள், கழுத்து, தலை அல்லது முதுகு ஆகியவற்றை எப்படி வைத்துக் கொள்வது, மூச்சுவிடும் முறை அதன் வேகம், ஆகியவைகளை கற்பிக்க இயலும். ஆனால் தியானம் என்பது ஒரு மனிதனின் உட்புற செயல்பாடாகும்; அது ஆழ்ந்த உள்ளார்ந்த அமைதியைத் தருகிறது. மனதில் உள்ளவற்றை அழித்தொழிக்கிறது. ஒருவரின் உள்ளிருக்கும் தெய்வீகப் பொறியிலிருந்து கிளம்பும் ஒளியினில் அவரை மூழ்கடிக்கிறது. இந்த ஒழுங்கு நெறியை எந்த ஒரு பாடப்புத்தகமும் கற்பிக்க இயலாது. எந்த ஒரு வகுப்பும் சொல்லித்தர இயலாதது.”
(Sathya Sai Speaks VII Question & Answer)
“தியானத்திலும் ஜபத்திலும் நீங்கள் வெற்றி பெற நீங்கள் அடுத்தவரை சார்ந்திருக்கத் தேவையில்லை.மந்திர தீக்ஷ பெற வேண்டி ஒரு முனிவரை நாடவும் தேவையில்லை. உள்ளிருக்கும் இறைவனுடன் தொடர்பு கொண்டால் உங்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கும்.
(Sathya Sai Speaks VII – “The Commentary on the Messages”)
தியானம் செய்வதற்கான அட்டவணை
சூரிய உதயத்திற்கு முன்பான நேரம் (அதிகாலை 3 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரம்),உகந்த நேரமாகும். சிறப்பான நேரம் என்றால் காலை 4.30 – 5.15மணி
(Sathya Sai Speaks VI ‘Eyelids and the Pupil’)
ஆனால் நாள் தவறாது செய்வது ரொம்ப முக்கியமானது. மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு தியானம் செய்வதையும் ஸ்வாமி, பரிந்துரைக்கிறார்.
உருவ தியானம் பற்றி ஸ்வாமி
எந்தப் பொருளை வேண்டுமானாலும் – ஜோதி, சிலை அல்லது படம் இவற்றில் ஏதாவது ஒன்றை 12 நொடிகள் மனதை ஒருமுகப்படுத்தி கண்ணிமைக்காமல் கூர்ந்து பார்க்க வேண்டும், இதுவே “தாரணம்“ என்று ஸ்வாமி, மாணவர்களுக்கு விளக்கினார்.
12 தாரணங்கள் சேர்ந்து ஒரு தியானமாகிறது.
அதாவது ஒரு தியானமானது 12 x 12 = 144 நொடிகள் நீடிக்க வேண்டும்
இப்படி ஒழுங்காக செய்யப்படும் தியானமானது 2 நிமிடம் 24 நொடிகளுக்கு மேல் நீடிக்கத் தேவையில்லை.
12 முறை செய்யப்படும் தியானம் சமாதி நிலை ஆகிறது அதாவது 12 x 144 நொடிகள் = 28 நிமிடம் 48 நொடிகள் தியானம் செய்வது சமாதி நிலை ஆகிறது.
ஆனால் தியானமானது ஒருவர் சில நிமிடங்களுக்கோ, சில மணிகளுக்கோ அமர்ந்து செய்யும் ஒன்றல்ல. கடவுளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை எல்லா இடங்களிலும், எப்போதும் இருக்கவேண்டும்.
ஸ்ரீ ரமண மகரிஷியிடம் “எவ்வளவு நேரம் ஒருவர் தியானப் பயிற்சி செய்ய வேண்டும் 15 அல்லது 30 அல்லது 45 நிமிடங்களா அல்லது ஒரு மணி நேரமா?” என்று ஒருமுறை கேட்கப் பட்ட போது, ”நீங்கள் தியானித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீ்ங்கள் மறக்கும் வரை நீங்கள் தொடர வேண்டும். நீங்கள் தியானித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற தேக உணர்வு உள்ளவரை அது தியானமே ஆகாது.” என்று பதிலுரைத்தார்.
“தேக உணர்வு, மனம், உன்னைப் பற்றிய சிந்தனை மொத்தமாக ஒழிய வேண்டும். எதைக் குறித்து நீ தியானம் செய்கிறாயோ, அதைப் பற்றிய அனுபவமே நிலைத்திருக்க வேண்டும். அதாவது தெய்வீகத்தின் முன்னிலை தவிர வேறெதுவும் இருக்கக் கூடாது. தியான நிலை என்பது அனுபவிக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அனுபவிப்பதே“
தியானத்திற்கான ஆசன முறை
பிரார்த்தனைக்கு பயன்படுத்தும் ப்ரத்யேகமான பாய்/ துணி/ மெத்தை மீது அமர்ந்து கொள்ளவும், இது உடம்பிலிருக்கும் மின்னோட்டம் பூமிக்கு சென்று வீணாகாமல் காக்கிறது. நேராக உட்காரவும். ஏனென்றால் உடம்பு நேராகவும் அமைதியாகவும் இருக்கும் போது, மனமும் நேராகவும் அமைதியாகவும் இருக்கிறது. நீ உடலைக் கட்டுப்படுத்த முடியாத போது மனதை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? கீழ்க்காணும் இரண்டு வழிகளில் கைகளை தளர்வாக வைக்கவும். (1) கைகளை தொடையின் மேல் ஒரு உள்ளங்கை மீது மற்றொரு உள்ளங்கை வைத்து கட்டை விரல்களின் நுனிகள் தொட்டுக் கொண்டிருக்கும் படி வைக்கலாம் அல்லது (2) கைகளை, கால் முட்டியின் மீது உள்ளங்கைகள் மேற்புறம் பார்த்திருக்கும் படி விரல்களை சின் முத்திரையில் வைத்துக் கொள்ளலாம். மூச்சை ”ஸோஹம்” என்று உள்ளிழுத்து வெளிவிடும் போது நாக்கின் நுனி மெல்ல, பற்களின் பின்புறம் தொட்டுக் கொண்டிருக்கட்டும்.
[Sathya Sai Speaks XI, “Bhakti, Stage by Stage”] [source: http://www.sathyasai.org/devotion/meditation.html]