தாமரை மலர், தெய்வீகம், செல்வம், அறிவு, ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சகதியில் -சேற்றில்- தோன்றினாலும் அது தூய்மையாகவே இருக்கிறது. அது, இதயத்தூய்மை, மனத்தூய்மை ஆகியவற்றைக் குறிப்பது. அதுபோல, நம் ஆன்மீக மனமும், எல்லாவிதமான இன்னல்களையும், புன்னகையுடன் தாங்கிக்கொள்ள வேண்டும். தாமரை பற்றற்ற நிலையைக் குறிக்கிறது. தண்ணீர் அதன்மேல்பட்டாலும், அது நனைவதில்லை.
வானத்தில் சூரியன் உதிக்கும்போது மலரும், தாமரையைப் போல இரு; சேற்றில் பிறந்தாலும், தாமரை அதனால் பாதிப்பு அடைவதில்லை. மேலும், மலருக்கு ஆதாரமாக உள்ள நீரிலிருந்தாலும், அதனாலும் அது பாதிக்கப்படுவதில்லை.