பார்வதி தேவியின் தாயன்பு

Print Friendly, PDF & Email
பார்வதி தேவியின் தாயன்பு

பார்வதி, தன் பக்தர்களுக்குத் தாய் போல் அன்பைக் காட்டுகிறவள். தனது பக்தர்களின் துன்பங்களையும் அறியாமையையும் நீக்கிக் காக்கின்றவள். மங்களகரமான வரங்களைத் தருபவள்.

ஒரு முறை, யமுனை நதியில் நரேந்திரன் என்ற பிராமணச் சிறுவன் நீராடிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு முதலை அவனைத் திடீரென்றுப் பற்றியது. அவன் பார்வதியைப் பிரார்த்தித்தான்.

கைலாச மலையில் இருந்த பார்வதியை, சிறுவனின் மெல்லிய குரல் இழுத்தது. பார்வதி அந்த இடத்திற்கு வந்து அவனுக்குத் தனது சக்தி, அறிவு, மங்களம் ஆகியவற்றை அருளினாள். இவை பலமாக இருந்ததால், அச்சிறுவனை முதலைத் தொடர்ந்து பற்றியிருக்க முடியவில்லை. அவனை விட்டு விட்டு தண்ணீருக்குள் சென்று மறைந்து விட்டது.

நாம் கூட உலக ஆசையென்ற கடலில் நீந்தும் போது, அறியாமையென்ற முதலைகள் நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. நாம் பார்வதி தேவியை வேண்டினால் அவள் இரக்கம், கருணை, மங்களம் என்ற சக்திகளைத் தந்து, அறியாமையென்ற முதலைகளிடமிருந்து விடுவித்து, முக்தி என்ற கரையை நாம் அடைய உதவி செய்வாள் என்பதே இக்கதையின் கருத்து.

[Illustrations by Selvi. Sainee, Sri Sathya Sai Balvikas Student]
[Source: Sri Sathya Sai Balvikas Guru Handbook Group I ]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன