கூழாங்கற்கள்(அ) சில்லறைக் காசுகள்

Print Friendly, PDF & Email
கூழாங்கற்கள்(அ) சில்லறைக் காசுகள்
குழுமச் செயற்பாட்டு நோக்கம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கையிலுள்ள சக்கரம், சங்கு மற்றும் கதை இவை முறையே காலம், சப்தம் மற்றும் சக்தி இவற்றை உணர்த்துவதால், அவற்றை வீணாக்கக்கூடாது என குரூப் 1 குழந்தைகள் அறியும் பொருட்டு.

தேவைப்படும் பொருட்கள்

கூழாங்கற்கள், சில்லறைக் காசுகள், ஒரு தகர டப்பா

  1. குழந்தைகள் வட்ட வடிவில்; அமர்ந்திருக்கவேண்டும். குரு வட்டத்தின் நடுவில் அமர்ந்திருக்க, குழந்தைகள் குருவிற்கு முதுகைக் காண்பித்து அமர வேண்டும்.
  2. குழந்தைகள் கண்களை மூடி, அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும்.
  3. குரு, கூழாங்கற்களை ஒவ்வொன்றாய்த் தகர டப்பாவில் போட வேண்டும்.
  4. டப்பாவில் போடும் போது அவற்றை எண்ணுமாறு கூற வேண்டும்.
  5. முதலில் அனைவரும் ஒன்றாக உரக்க எண்ணுவார்கள்.
  6. அவர்களை, மனதிற்குள்ளேயே எண்ணச் சொல்ல வேண்டும். பிறகு குரு, சில கூழாங்கற்களை டப்பாவிற்கு அருகில் கொண்டு சென்று மெதுவாகப் போடவேண்டும்.
  7. குழந்தைகளின் கவனமும், ஒருமனக்குவிப்பும் அதிகரித்திருக்கும் சமயத்தில், டப்பாவில் போடும் கூழாங்கற்களின் எண்ணிக்கையையும், போடும் வேகத்தையும் சற்று அதிகரிக்கவேண்டும்.
  8. குழந்தைகளிடம், அவர்கள், பிறருடன் போட்டி போட்டு செய்ய வேண்டியது இல்லை. தனக்குத்தானே தான் போட்டி என்று கூற வேண்டும்.
சில மாதிரி வினாக்கள்
  1. இந்தச் செயற்பாடு உங்களுக்கு பிடித்ததா? ஏன்?
  2. முதலில் ஏன் விதவிதமான விடைகள் வந்தன?
  3. பேச்சைக் குறைத்து அதிக ஒன்றிப்புடன் கவனித்த காரணம் என்ன? மன ஒருமுகப்படுத்தல் என்பது அவ்வளவு கடினமா?
  4. அமைதியாக இருத்தல் என்பது மன ஒருமுகப்படுதலுக்கு அவசியமா?
  5. நாம் எவ்வாறு பல்வேறு வழிகளில் சக்தியையும், நேரத்தையும் வீணாக்குகிறோம்?
  6. வருங்காலத்தில் நாம் சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க மாட்டோம் என உறுதி கூற முடியுமா?

முடிவில், காலம், சப்தம் மற்றும் சக்தி ஆகியவை கடவுளால் நமக்கு வரமாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் எவ்வாறு பயனுள்ள வழிகளில் செலவழிக்கலாம் என்பது பற்றிக் கூற வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன