சித்திர மர்மம்

Print Friendly, PDF & Email

சித்திர மர்மம்

விளையாட்டின் நோக்கம்:

இது குழந்தைகளின் கலைப் பக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு. ஒரு குழந்தையால் வரையப்பட்ட படத்தில் குறிப்பிடப்படும் வார்த்தை/சொற்றொடர்/ யோசனையை மற்ற ஆட்டக்காரர்கள் யூகிக்க வேண்டும்.

கற்பிக்கப்படும் குணங்கள்:
  • கற்பனை
  • படைப்பாற்றல்
  • ஆர்வம்
  • விசாரணை செய்தல்
  • காட்சிப்படுத்தல்
தேவையான பொருட்கள்:
  • வெள்ளை பலகை மற்றும் பேனாக்கள்
  • காகிதம் & பென்சில்கள்
  • வார்த்தைகள் மற்றும் சீட்டுகளின் பட்டியல்
குருவிற்கான ஆயத்த வேலைகள்:
  1. குரு பாடம் சார்ந்த கருத்துகளின் பட்டியலைத் தயாரிக்கிறார். பட்டியலில் பின்வரும் பிரிவுகளும் இருக்கலாம்:
    1. ஆன்மீகம்: கிருஷ்ணர், விஷ்ணு, சிவன், சுப்பிரமணியர், கணேஷ், புத்தர், இயேசு, ஜோராஸ்டர்
    2. ஆளுமைகள்: காந்திஜி, சாச்சா நேரு, கவிஞர் பாரதியார், விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி, மீராபாய்
    3. மதிப்புகள் மற்றும் துணை மதிப்புகள்: மகிழ்ச்சி, அன்பு, பகிர்வு, அக்கறை, ஒற்றுமை, அமைதி, நீதி, நட்பு, பாதுகாப்பு, ஆற்றல், தேசபக்தி, கவனம், அமைதி, தூய்மை, தியாகம்
    4. உணர்வுகள்:ஒலி, தொடுதல், சுவை, பார்வை, வாசனை
    5. சாய் மேற்கோள்கள்:
      • பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை
      • ஹீரோக்களாக இருங்கள், பூஜ்ஜியங்களாக அல்ல
      • அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்
      • காட்டில் தலை, சமுதாயத்தில் கை
      • மௌனம் சாய்-லென்ஸ்
      • பணம் வரும், போகும்; ஆனால் ஒழுக்கம் வந்து வளரும்
      • நேரத்தை வீணடிப்பதால் வாழ்க்கை வீணாகும்
      • நல்லதே பார்க்கவும், நல்லதே கேட்கவும், நல்லதே செய்யவும்
      • நிலையாக இருக்க படிக்க வேண்டும்
      • வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடு

    அடுத்து, ஒவ்வொன்றிலும் ஒரு வார்த்தையை (பட்டியலிலிருந்து) எழுதி சீட்டுகளைத் தயார் செய்கிறார்.

    விளையாட்டு:
    1. ஒரு குழந்தைக்கு வார்த்தை/சொற்றொடர் எழுதப்பட்ட ஒரு சீட்டு கொடுக்கப்படுகிறது. (உதாரணம்: அன்பு)
    2. குரு பின்னர் அக்குழந்தையை அவ்வார்த்தையை (அன்பைக்) குறிக்கும் ஒரு படமோ, உருவமோ பலகையில் வரையச் சொல்கிறார்.
    3. குரு அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களைச் சுட்டிக் காட்டவோ அல்லது வாய்மொழியாகவோ பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.
    4. வரையப்பட்ட படத்திலிருந்து (எடுத்துக்காட்டு: ❤), அவரது சீட்டில் எழுதப்பட்ட வார்த்தை ‘அன்பு’ என்று மற்ற வகுப்பினர் யூகிக்க வேண்டும்.
    5. வரையப்பட்டதை மற்ற வகுப்பினர் சரியாக ஊகிக்கவில்லை என்றால், புதிய திசையில் முயற்சி செய்யலாம், எடுத்துக்காட்டாக, மேலும் தொடர்புடைய படங்களை வரைந்து, அப்புதிய தடயங்களையும் ஒன்றாகச் சேர்த்து, சரியான பதிலைத் தூண்டும் வரை அவர் மேலும் முயற்சிக்கலாம்..
    6. அவர்கள் வார்த்தையை யூகிக்க முடிந்தவுடன், வரைவதற்கு அடுத்த வாய்ப்பு மற்றொரு குழந்தைக்கு செல்கிறது.
    7. ஆனால், பலமுறை முயற்சித்தாலும், அந்தக் குழந்தை அந்த வார்த்தையைச் சரியாகக் குறிப்பிடத் தவறினால், மற்றொரு குழந்தைக்கு அதே சீட்டை வழங்கலாம்.
    8. பிரிவில் உள்ள அனைத்து வார்த்தைகளும் (உதாரணம்: சாய் மேற்கோள்கள்) தீர்ந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பு கிடைக்கும் வரை விளையாட்டு இந்த முறையில் தொடரும்.

    இந்த வேடிக்கை நிறைந்த விளையாட்டு கலை மற்றும் ஆக்கப்பூர்வமான காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் கலவையாகும்!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: