சேர்ந்து களித்தல்

Print Friendly, PDF & Email
சேர்ந்து களித்தல்

ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்

நீங்கள் விரும்பினால் பின்னணியில் மென்மையான இசையை இசைக்கலாம்.

முதலில், உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும்.

முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும். நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும். இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

இன்னிசையைக் கேட்டுக்கொண்டே………

உன் நண்பருடைய வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்.

விளையாடி முடித்துதம், விளையாட்டுப் பொருட்கள் யாவற்றையும் ஒழுங்காக எடுத்து வைக்கும்படி உன் நண்பனின் தாயார் கூறுகிறாள்..

நண்பனுக்கு உதவ நீ முன் வருகிறாய்.

நீ மிகுந்த மகிழ்ச்சியுடன் நண்பனின் வேலையில் பங்கு கொள்கிறாய்.

ஒன்றுசேர்ந்து, ஒத்துழைப்புடன் செய்யும்போது, வேலை எவ்வளவு எளிதாக இருக்கிறது! அந்த மகிழ்ச்சியை இப்போது உணர்ந்துகொள்.

மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.

புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன