பூர்வம் ராம – செயற்பாடு

Print Friendly, PDF & Email
பூர்வம் ராம – செயற்பாடு
செயற்பாடு: ராமாயணப் படப் புத்தகம் தயாரித்தல்

குருமார்கள், இந்த ஸ்துதியின் அடிப்படையில் குழந்தைகளைச் சொந்தமாக ராமாயணப் படப் புத்தகம் தயாரிக்கச் சொல்லலாம்.

  1. பூர்வம் ராம தபோவனாதி கமனம் – ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணர் மூவரும் காட்டுக்குச் செல்வது போன்ற படத்தை முதல் பக்கத்தில் ஒட்டி, அதன் கீழ், ஸ்துதியின் இத்தொடரை எழுதலாம்.
  2. ஹத்வா ம்ருகம் காஞ்சனம் – சீதா ராமரிடம் பொன் மான் கேட்பது போல் உள்ள ஒரு படத்தை இரண்டாவது பக்கத்தில் ஒட்டலாம். அதன் கீழ், இந்தத் தொடரை எழுதவும்.
  3. வைதேஹி ஹரணம் – இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வது போன்ற படத்தை மூன்றாவது பக்கத்தில் ஒட்டி இந்தத் தொடரை எழுதலாம். மற்றும் பல.

குறிப்பு:

  • இந்தப் புத்தகத்தைப் பழைய நோட்டுப் புத்தகங்களின் உபயோகப் படுத்தாதப் பக்கங்களைக் கொண்டு தயாரிக்கலாம்.
  • மேலும் இந்த செயற்பாட்டைக் குழந்தைகள் அவரவர் வீட்டில் தம் பெற்றோர்களுடன் சேர்ந்து செய்யலாம். இதன் மூலம் பெற்றோர்களுக்குக் குழந்தைகளுடன் நேரத்தைப் பயனுள்ளதாக செலவிடமுயும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன