தபால் பெட்டி

Print Friendly, PDF & Email

தபால் பெட்டி

விளையாட்டின் நோக்கம்:

இது ஒரு தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான செயலாகும்.

கற்பிக்கப்படும் குணங்கள்:

வெவ்வேறு மதங்களைப் பற்றிய அறிவு.

தேவையான பொருட்கள்:

வெவ்வேறு மதங்களின் அட்டைகள் மற்றும் 5 அல்லது 6 சோப்புப் பெட்டிகள், ஒரு மரப் பலகை.

தயாரித்துக் கொள்ள வேண்டியவை:
  • முக்கிய மதங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட வெவ்வேறு அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும் அல்லது சேகரிக்கப்பட வேண்டும். (எடுத்துக்காட்டு: மதத்தின் பெயர், நிறுவனர், புனித நூல், திருவிழாக்கள், போதனைகள், புனித இடங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் போன்றவை.)
  • ஒரு மரப்பலகையில் 5 அல்லது 6 பெட்டிகள் (காலி சோப்புப் பெட்டிகள் பயன்படுத்தப்படலாம்) அந்தந்த மதங்களின் வெவ்வேறு சின்னங்களை ஒட்டி அஞ்சல் பெட்டிகளைப் போல் அமைக்கவும்.
விளையாட்டு:
  1. குரு குழந்தைகளை 2 அல்லது 3 குழுக்களாகப் பிரிக்கலாம்.
  2. அனைத்து அட்டைகளும் குலுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
  3. குழுவிற்கு வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, குழந்தைகள் சிந்திக்க 2-3 நிமிடங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
  4. அந்தக் குழுவின் குழந்தைகள் சரியான பெட்டிகளில் அட்டைகளை சேர்க்க வேண்டும்.
  5. கொடுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அவர்கள் அட்டைகளை சரியாக சேர்த்தார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு சரியான சேர்கைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
  6. எல்லா குழுக்களும் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சி செய்யலாம். பின்னர் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற குழு வெற்றிக்குழுவாக அறிவிக்கபடலாம்.
மாறுபாடுகள்:
  • பிரசாந்தியின் சின்னம் (அனைத்து மதங்களின் சாராம்சம்) கொண்ட ஒரு பெட்டியையும் வைக்கலாம்.
  • குழந்தைகள் புட்டபர்த்தியில் (ஈஸ்வரம்மா தினம், சிவராத்திரி, ஆஷாட ஏகாதசி போன்றவை) கொண்டாடப்படும் திருவிழாக்களின் பெயர்களைக் கொண்ட அட்டைகளை அப்பெட்டியில் சேர்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன