பேரன்பு (பிரேமை)

Print Friendly, PDF & Email
பேரன்பு (பிரேமை)

“ஆத்மாவைப் பற்றிய விழிப்பினையும், இதயவுணர்வுவிரிந்து முகிழ்த்தலையும், எதனையும் எவரையும் நோக்குந்தோறும் ஊற்றெடுக்கும் அன்பினையும் கொண்டதே அன்பாகும் என்று பாபா அழகுறக் கூறியுள்ளார்.
இது உள்ளுணர்வின் நிரந்தர விழிப்பினாலும் கடவுள் எல்லாரிடத்திலும் தங்கியிருப்பதைக் காண்பதாலும் ஏற்படுவதாகும்”.

“அன்பு தன்னலமற்றது” என்றும் அன்பு வழங்கியும் மன்னித்தும் வாழ்வது” என்றும் பாபா கூறுகிறார். அன்பானது. மற்றவரைத் தன்னிடமிருந்து வேறாகக் காணாது ஒருமையுணர்வுடன் (Spirit of identity)காண்கிறது. எல்லாவுயிரும் நமக்குறவே, எல்லா மக்களும் நமது சோதரரே என்ற உணர்ச்சி இதயத்தில் உதயமாகி, இறைவனிடம் கொண்டுள்ள தீராத இடைவிடாத காதலால் பண்பட்டு வளர்ந்து, அவ்வுணர்ச்சியே உண்மையெனத் தெளிந்து அனுபவித்தலே பேரன்பாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன