ராஜயோகம்

Print Friendly, PDF & Email
ராஜயோகம்

ராஜயோகத்தை, யோகங்களின் அரசன் என்று கூறலாம். இருந்தாலும் பக்தியோகமும், ஞான யோகமும் அதற்குத் தாழ்ந்ததல்ல.

சங்கதேவர் என்பவர் ஹடயோகி. மரணத்தை வென்றவர் என்று கூறுவார்கள். ஞானேஸ்வரர், அவரது சகோதரர்கள், சகோதரி ஆகியோரது பக்தியாலும் ஞானத்தாலும் அவர் கவரப்பட்டார். ஞானதேவரின் தீவிர சீடராக மாறினார்.

இவ்வாறு ஒவ்வொரு யோகமும் தன்னளவில் ஒப்பற்றது. அனைத்து யோகங்களின் இலட்சியமும் ஒன்றே, முடிவில் ஒவ்வொரு யோகமும் மற்றதனுடன் இணைந்து, அதன் வேற்றுமையை இழக்கிறது. மனிதனைப் பூரணமாக்குவது, யோகத்தின் இலட்சியமாகும். இயல்பில் தெய்வீகமாக மாறவேண்டும் என்பதும் யோகத்தின் இலட்சியமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: