இராமர் பஞ்சவடியில் தங்கினார்

Print Friendly, PDF & Email
இராமர் பஞ்சவடியில் தங்கினார்

Rama Recites in Panchavati

விரைவிலேயே இராமர் சீதையுடனும் லட்சுமணனுடம் அகஸ்திய முனிவரின் ஆச்ரமத்தை அடைந்தனர். அகஸ்தியர் இராமரை, கோதாவரி நதிக் கரையிலுள்ள பஞ்சவடிக்குச் செல்லுமாறு கூறினார். அதற்கு அருகில் உள்ள தண்டகாரண்யத்தில் தான் முனிவர்கள் வசிக்கிறார்கள் என்றும், அந்தக் காடு முழுவதுமே சபிக்கப்பட்டு அரக்கர்களால் சூரையாடப்பட்டிருப்பதாகவும் கூறினார். அகஸ்தியர், இராமர் முன்னின்று அனைத்து அரக்கர்களையும் ராக்ஷஸர்களையும் அழித்து விடுவார் என்றும், அதன் பிறகு மீண்டும் துறவிகளும் சாதகர்களும் அந்த இடத்தில் அமைதியாக வாழ முடியும் என்றும் நம்பினார். இராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தண்டகாரண்யத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள மரங்கள் தங்களுடைய பசுமையான இலைகளை அடைந்தன. காய்ந்து போயிருந்த செடி கொடிகளெல்லாம் மீண்டும் உயிர் பெற்றன.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
இந்த எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் இராமரின் தெய்வீகத் தன்மை வெளிப்பட்டதாலேயே. தெய்வத் தன்மை நம் அனைவரிடமும் உள்ளது.

நமக்குள் ஒன்றன கலந்திருக்கும் இந்த தெய்வீகத்தை நாம் புரிந்து கொண்டோம் என்றால் நாம் செல்லுமிடமெல்லாம் அன்பையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி, நமது வாழ்க்கையையும் இதன் அடிப்படையில் நடத்த இயலும்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
உள்ளிருக்கும் மனித மேம்பாடுகளை வெளிக் கொணர்ந்து, நடைமுறைப் படுத்துவதே விழுக்கல்வி.

இராமர் குளிர்ந்த மரநிழலில் நின்று கொண்டு லட்சுமணனைக் கூப்பிட்டு அவன் விருப்பப்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குடில் ஒன்று அமைக்குமாறு கூறினார். அதைக் கேட்டு லட்சுமணன் தன்னிஷ்டப்படி அவன் நடப்பதென்றால் அவன் எப்படி இராமருக்கு ஒரு சேவை செய்பவனாக இருக்க முடியும் என்று மிகவும் மனம் நொந்தான். அதைப் புரிந்து கொண்ட இராமர், தானே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு லட்சுமணனைக் குடில் அமைக்கச் சொன்னார்.

ஒரு நாள், இராவணனின் சகோதரி சூர்ப்பணகை நற்பண்புகளுடன் கூடிய ஒளிபொருந்திய லட்சுமணனால் ஈர்க்கப்பட்டாள். சூர்ப்பணகை லட்சுமணனைமணந்து கொள்ள விருப்பம் கொண்டு ஒரு அழகான பெண் வடிவம் கொண்டு அவனிடம் வந்தாள். லட்சுமணன், தான் இராமரின் அடிமை என்றும் அவருடைய ஆணைகளைத் தான் பின்பற்றுவதாகவும் கூறினான். சூர்ப்பணகை அடுத்து இராமரை மணக்க விருப்பமுற்றாள். ஆனால் அதுவும் வெற்றி பெறவில்லை. அவள் சீதைதான் தனக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி அவளை அப்படியே விழுங்குவதற்காக சீதையின் மேல் பாய்ந்தாள். இராமனின் ஆணைப்படி லட்சுமணன் சூர்ப்பகைணயின் மூக்கையும் காதையும் அறுத்து விட்டான். அவள் மிகுந்த வலியுடன் அந்தக் காட்டில் இருந்த தன் சகோதரர்களான, கர தூஷணர்களின் உதவியை நாடினாள். உடனே அவர்கள் தங்களுடைய 14000 அரக்க சேனையுடன் வந்தனர். இராமரின் ஆணைப்படி லட்சுமணன், சீதையை ஒரு குகையில் வைத்து விழிப்பாக இருந்து பாதுகாத்தான். இராமர் ஒரு புன்னகையுடன் அரக்கர் முன் சென்று கர தூஷணர்கள் உட்பட அனைத்து அரக்கர்களையும் கொன்று வீழ்த்தினார்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:

லக்ஷ்மணன் முழுமையாக இராமரிடம் சரணமடைந்தவர். குடிசை கட்டுவதற்கு பொருத்தமான இடம் தேர்ந்தெடுத்தது, சூர்ப்பனகாவை விரட்டியது, இராமர், ராக்ஷதர்களுடன் போரிட சென்றபோது சீதாவை குடிசையிலிருந்து அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் இருத்தி அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தது இவ்வாறு இராமர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் துளியும் தவறாமல் கேட்டுக்கொண்டு அதன்படியே செய்து முடித்தான்.

சுவாமியின் குழந்தைகளாகிய நாமும் நமது அனைத்து செயல்களையும் நமது நலனுக்காக அவருக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: தலைவனை(மனசாட்சியை)ப் பின்பற்று, தீமைகளை எதிர்த்து நில், இறுதி வரைப் போராடு, வாழ்வு என்னும் ஆட்டத்தை நிறைவு செய்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன