பகவானின் தெய்வீகப் பேருரையிலிருந்து

Print Friendly, PDF & Email
பகவானின் தெய்வீகப் பேருரையிலிருந்து
விநாயகரின் யானைத் தலையின் தனிசிறப்பும் உட்பொருளும் என்ன?
  • யானை தன்னுடைய அறிவுத்திறனுக்குப் பெயர் பெற்றதாகும். கணேசரின் யானைத்தலை அவரது அறிவாற்றலின் கூர்மையையும், உயர்திறனான விவேகத்தையும் (பிரித்து நோக்கும் ஆற்றல்) குறிக்கிறது. விநாயகரின் தூய்மையான அறிவாற்றலால் அவர் அறிவைக் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குப் பலன் அளிப்பதால் அவர் ஸித்தி விநாயகர் (கேட்பதை அளிக்கும் விநாயகர்) என்றும் அழைக்கப்படுகிறார்.
  • ஒரு வனப்பகுதியில் செல்லும் யானை தன்னைத் தொடர்ந்து வரும் அனைத்திற்கும் பாதையை சீர் செய்து கொடுக்கும். அதேபோல், கணேசரை வழிபட்டு நாம் வேலை மேற்கொள்ளும்போது அதை செவ்வனே செய்து முடிக்க வழி காட்டுகிறார். யானையின் பாதங்கள் பெரியதாக இருப்பதால் அது நடக்கும்பொழுது மற்ற விலங்குகளின் பாத சுவடுகள் அழிந்து போகின்றன. அதுபோல் கணேசருக்குரிய வழிபாடுகளை ஆற்றும்போழுது நமக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. கணேசரின் பேரருளால் வாழ்க்கைப்பயணம் சீராகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது.
  • விக்னேஷ்வரர் யானையின் விவேகமும், ஞானமும் பெற்றவர் என்றுகருதப்படுகிறார். யானை அதன் நுண்ணறிவுக்கும், தன் எஜமானிடம் முழு விசுவாசமாக இருப்பதற்கும் பெயர் பெற்றதாகும். இதற்கு நேரிடை உதாரணம், பகவானுக்குப் பிரியமான ஸாயி கீதா ஆகும். வீதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றாலும், ஸாயி கீதா அவைகளை சட்டை செய்யமாட்டாள். ஆனால், ஸ்வாமியின் வாகனம் அவ்வழி செல்கையில் அவள் கூர்ந்து கவனிப்பாள். தன் வழக்கமான பிளிரலை எழுப்பி வீதிக்கு விரைந்து ஓடுவாள். என்ன ஒரு அன்பு சுவாமியிடம்! யானையுடன் நம்பிக்கையை ஒப்பிடுவது மிகையாகாது.
  • When an elephant moves among the bushes, its path turns into a regular passage for all animals. It is thus a pacesetter for all animals.
மூஞ்சூர் (அல்லது) சுண்டெலி கணேசரின் வாகனம்
  • மூஞ்சூர், கணேசரின் வாகனமாகும். அது புத்திசாலித்தனமும், பேரார்வமும் கொண்ட ஒரு படைப்பாகும். நாமும் சாமர்த்தியமாகவும் விடாமுயற்சியுடனும் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மூஞ்சூர் இருட்டையும் குறிக்கிறது. இருட்டில் அதன் பார்வை மிகவும் கூர்மையாக இருக்கும்.விநாயகரின் வாகனமான மூஞ்சூர் ஒரு மனிதனை இருட்டுலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது என்பதையும் குறிக்கிறது. ஒரு மனிதனிடம் உள்ள தீயகுணங்கள், தீயபழக்க வழக்கங்கள் மற்றும் தீய எண்ணங்களைக் களைந்து நல்லகுணங்கள் நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல ஒழுக்கத்தை பதியச் செய்வதே விநாயக தத்துவம் ஆகும்.
  • அறிவாற்றலுடன் கூடிய விவேகம் இல்லையென்றால் எந்தத் திறமையும் வலிமையும் நல்ல விதமாக உபயோகிக்க இயலாது. உதாரணமாக, தீயையோ அல்லது மின்சாரத்தையோ அதன் தன்மையைப் புரிந்துகொண்டு தேவைக்கேற்றப்படி ஒரு கருவியாக மட்டுமே உபயோகிக்க வேண்டும். மனிதனின் புலன்களும் தீயைப் போலத்தான்; நிலையான கண்காணிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்க வேண்டும்.
  • தூய்மையற்ற இதயத்துடனும், கட்டுப்படுத்தாத புலன்களுடனும் செய்யும் எந்த ஒரு வழிபாடும் வெற்றியாகாது. கணேசர் அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றி பெறச் செய்யும் கடவுளாவார். நல்ல செயல்கள் செய்கையில், தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் தடைகளை விலக்குவார்.உண்மையான சாதகர்களுக்கு வழி வகுத்துக் கொடுப்பார். நாம் நல்லவற்றை வேண்டும்பொழுது, பிரசன்ன வதனமாவார் (மகிழ்ச்சி கொண்ட முகம்)ஆனால் தேவையல்லாத தீய வேண்டுதல்களை ஏற்கமாட்டார். அவர் ப்ரணவ ஸ்வரூபமாவார். அதாவது முழுமுதற் கடவுளாவார். ஓம் என்ற சொல்லின் உருவமாவார். அவரே மங்கலமாவார்.
  • விநாயகர் அனைத்து தெய்வங்களின் தலைவராவார். அவரிடம் அளவு கடந்த நம்பிக்கை செலுத்தவேண்டும். அவரை தெய்வீகத்தின் உருவாக தொழவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன