வகுப்பறை செயற்பாடு

Print Friendly, PDF & Email
அனுபவம் மூலம் கற்றல் – வகுப்பறை செயற்பாடு
Step1: அமைதி அமர்வு- மாணவர்களின் இதயத்தை திறக்க
  1. மனோபாவம்
  2. அகமுகப் பார்வை
  3. பிரார்த்தனை
Step 2: தலைப்பு – ஒரு வார்த்தை கொண்ட தலைப்பை ஆசிரியர் கரும்பலகையின் மையத்தில் எழுதுதல்எப்படி தலைப்பு இருக்க வேண்டும்?
  1. குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக
  2. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக
  3. தெரிந்த ஒரு பொருளைப் பற்றியதாக
  4. அன்பு, அமைதி போன்ற பண்பு சார்ந்ததாக இலலாமல்
  5. கணிதம், புவியியல் போன்ற பாடங்களின் பெயர் இல்லாமல்

Step 3: தலைப்பு என்ற மையத்திலிருந்து பரவும் சிந்தனை (Radiant Thinking)

சூரியன் ஒன்று; கதிர்கள் பல. தலைப்பு ஒன்று; வார்த்தைகள் பல. இங்ஙனம் ஒன்றிலிருந்து உதிக்கும் பல வார்த்தைகளை (மையத்திலிருந்து) பரவும் சிந்தனை என்பர். தலைப்புடன் தொடர்புடைய வார்த்தைகளை அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும். அவற்றை ஒருவர் கரும்பலகையில் எழுத வேண்டும். பிற மாணவர்கள் நோட்டு புத்தகத்தில் எழுத வேண்டும்.

கவனம் :

வார்த்தைகளுக்கு வரிசை எண் போடவோ, ஒழுங்குபடுத்தவோ கூடாது. மாணவர்கள் கூறும் வார்த்தைகளுக்கு அளவேயிருக்காது. வார்த்தைகளுக்கு தடங்கல் வந்தால் மாணவர்களை சிறிதுநேரம் கண்ணை மூடி தலைப்பைச் சிந்திக்கச் சொல்ல வேண்டும். கண்ணைத் திறந்ததும் மாணவர்களால் இன்னும் பல வார்த்தைகளைச் சொல்ல முடியும்.

Step 4: வார்த்தைகளை வகைப்படுத்துதல் (Mind Mapping) & ஒருங்கிணைப்புப் படம் (Web Chart) –

மையத் தலைப்பிலிருந்து உதித்த எண்ணற்ற வார்த்தைகளை பல இனங்களாக (Categories) வகைப்படுத்தி உபதலைப்புகளின் கீழ் தொகுப்பாக ஒழுங்குபடுத்துவதே Mind Mapping எனப்படும்.மையத்தலைப்பும், உபதலைப்புகளின் கீழ் வரும் தொகுப்புகளும் பரவல் முறையில் வரைபடமாகச் சித்தரிக்கப்படுகிறது. இப்படமே ஒருங்கிணைப்புப் படம் (Web Chart) எனப்படும்.

  • வார்த்தைகளை வகைப்படுத்துதல் & ஒருங்கிணைப்புத் திட்டம் தயாரிக்கும் வழிமுறை:
  • மாணவர்களை 5 குழந்தைகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் வார்த்தைகளை வகை இனங்களாக (Categories) வகைப்படுத்தி ஒருங்கிணைப்புப் படம் வரையச் சொல்லவேண்டும். ஒவ்வொரு வகையினத்திற்கும் ஓர் உபதலைப்பு தரவேண்டும்
  • ஒவ்வொரு குழுவும் ஒருங்கிணைப்புப் படத்தை உருவாக்கியதும் குழுத்தலைவரை கரும்பலகையில் எழுதச்சொல்லுங்கள். அத்தனை குழுக்களும் தங்கள் ஒருங்கிணைப்புப் படத்தை எழுதியதும் வகுப்பு முழுமைக்கும் ஒரே ஒரு ஒருங்கிணைப்புப் படத்தை (Web Chart) ஐ தயாரிக்கவும். இறுதி ஒருங்கிணைப்புப் படத்தில்அளவுக்கு அதிகமான வகையினங்கள் இருக்கக் கூடாது. 5-7 வகையினங்கள் இருந்தால் நலம்.

Step 5: குழுமச் செயல்கள் (Group Activities) –

இறுதி ஒருங்கிணைப்புப் படம் தீர்மானம் செய்யப்பட்டதும் இறுதி ஒருங்கிணைப்புப்படம் படத்தில் எத்தனை வகையினங்கள் உள்ளனவோ அத்தனை குழுக்களாக மாணவர்களைப் பிரிக்கவேண்டும் (உ-ம்) 7 வகையினங்கள் இருந்தால் 7 குழுக்கள். 5-6 மாணவர்களே ஒரு குழுவில் இருக்க வேண்டும். மாணவர்கள் குறைவாக இருந்தால் ஒரு குழு 2 வகையினங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு குழுவும் தான் எடுத்துக் கொண்ட வகையினத்திற்கு ஏற்ப குழுமச் செயல்களைத் தயாரிக்க வேண்டும். வண்ணங்கள் என்ற தலைப்பின் இறுதி ஒருங்கிணைப்புப் படம்

Step: 6 குழுமச் செயல்களின் ஒத்திகை (Pre-presentation Activities)

ஒவ்வொரு குழுவும் வகுப்பறையில் பிற மாணவர்களுக்கு முன்பாக குழுமச் செயல்களின் ஒத்திகையை நடத்த வேண்டும். குழந்தைகளிடம் அவர்கள் என்ன செய்தார்கள், எதைக் கண்டுபிடித்தார்கள் என்று விவரிக்கும்படி கூறவேண்டும். அவர்கள் சொல்ஞானம் (Vocabulary)தொடர்பு கொள்ளும் திறமைகள் போன்றவை இதனால் அதிகரிக்கின்றன. ஆசிரியர்கள் கேள்விகள் கேட்பதன் மூலம் மாணவனின் தன்னம்பிக்கை வளரும்படி செய்கின்றார். ஆசிரியர் வழிகாட்டியாக இருந்து மாணவர்களைத் தூண்டுகிறார். ஊக்கமளிக்கிறார். தட்டி எழுப்புகிறார். குழந்தைகளின் குழுமச் செயல்கள் மூலம் வெளிப்படும் மனித மேம்பாட்டு குணங்களை எடுத்துக் கூறுவது மட்டுமே ஆசிரியர் வேலை.

Step7: குழுமச் செயல்களின் அரங்கேற்றம் (Presentation of Group Activities)-

முதல் பகுதி -வகுப்பறைகளில்: ஒவ்வொரு வகுப்பும் தன் வகுப்பறையில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. முதல்வர், ஆசிரியர்கள், விருந்தினர் முதலியோர் வகுப்பறையைச் சுற்றி வந்து கண்காட்சியைப் பார்க்கின்றனர். கேள்விகள் எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். அனைத்து வகுப்புகளும் ஒரு பெரிய அறையில் பொதுவான கண்காட்சி நடத்தலாம்.

இரண்டாம் பகுதி -பிரார்த்தனைக் கூட்டத்தில்: ஒவ்வொரு வகுப்பும் தங்கள் குழுமச் செயல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பிரார்த்தனைக் கூடத்தில் நடத்துவர். அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகின்றனர். முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் மற்ற வகுப்பினருக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்கள் தங்கள் கையாலேயே அழைப்பிதழ் அட்டைகள் தயாரிக்கின்றனர்.

குறிப்பு :ஆசிரியர் ஒரு நண்பனாக, வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும். தலையீடும், உற்சாகக் குறைப்பும் கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன