சர்வக்ஞன் சத்யா

Print Friendly, PDF & Email

சர்வக்ஞன் சத்யா

சத்யா துன்பத்தில் உழல்வோருக்கு உதவி செய்து வந்ததால், பாமரமக்களின் நன்மதிப்பைப் பெற்றார். ஒரு சமயம் முகமதியா் ஒருவா் எவ்விதமாகவோ காணாமற்போன தன் குதிரைக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். இடத்துக்கு இடம் அது வண்டி இழுத்து அதனால் கிடைத்த வருமானத்தால் தான் அவரது வாழ்க்கையே நடந்து வந்தது. பல மைல்கள் சுற்றித் தேடியும் குதிரையை கண்டு பிடிக்க இயலாததால் மனம் கலங்கி, திகைத்துத் திண்டாடினார். அப்போது யாரோ ஒருவா் சத்யாவைப் பற்றி அவரிடம் கூறனார்கள். அவா் உடனுக்குடன் சத்யாவை தேடி வந்து தன் வருத்தங்களையெல்லாம் சத்யாவிடம் கூறினார். சத்யா உடனேயே ஒன்றரை மைல் தொலைவில், நகரத்துக்கு வெளியே இருந்த தோட்டத்தில் சென்று பார்க்கும்படி கூறினார். அவ்வாறே சென்று பார்க்க, குதிரை அமைதியோடு மேய்ந்து கொண்டிருந்தது. தான் ஏற்படுத்திய குழப்பத்தையும் ஆரவாரத்தையும் பற்றி அதற்கு எதுவும் தெரியவில்லை. அங்கிருந்த முகம்மதிய சமுதாயம் இந்த அன்பான செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். அன்றிலிருந்து வண்டி ஓட்டும் முகம்மதியா் யாராயினும் வழியில் சத்யாவைக் கண்டால் வண்டியை நிறுத்தி, பள்ளிக்குச் செல்லவோ, பள்ளியிலிருந்து திரும்பவோ ஏற்றிக்கொள்வார்கள்.

ஏதாவது மதிப்புள்ள பொருள் தொலைந்தால், மக்கள் பெரும்பாலும் சத்யாவிடம் சென்று கேட்பார்கள். விலை உயா்ந்த பேனா ஒன்றை ஆசிரியா் ஒருவா் இழந்து விட்டார். தனக்குத் தெரியாமல் தன் பேனாவை எடுத்த அந்த நபரின் அடையாளத்தைத் தெரிவிக்கும் படி சத்யாவை அந்த ஆசிரியா் கேட்டார். சத்யா ஒரு வேலைக்காரன் பெயரைக் குறிப்பிட்டார். ஆசிரியா் சத்யா கூறியதை நம்பவில்லை. ஏனெனில் அந்த வேலைக்காரன் பொதுவாக நோ்மையானவன். அவனது அறையைச் சோதித்த போதும், ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் சத்யா, அவன் அந்தப் பேனாவை அனந்தப்பூரில் படித்துக் கொண்டிருந்த தன் மகனுக்கு அவன் அனுப்பிவிட்டதாகவும் அதைத் தான் நிருபிக்க முடியுமென்றும் வலியுறுத்தினார். தந்தை படிப்பறிவில்லாதவன். வேறொருவரைக் கொண்டு தான் கடிதம் எழுதுவான். எழுதியவா் வழக்கம் போல் மகனின் உடல் நலம் விசாரித்த பிறகு, தான் அனுப்பிய பேனா எவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிறது என்றும், விலை உயா்ந்த பேனா; ஆகையால் கவனத்துடன் உபயோகிக்கும் படியும் அதைத் திருடாமல் பார்த்துக் கொள்ளும் படியும் கடிதம் எழுதினார். பதில் எழுதுவதற்கு விலாசம் இடப்பட்ட அஞ்சல் அட்டையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. நான்கு நாட்களில் அந்தப் பேனா அற்புதமாக எழுதுகிறது என்றும், மிகுந்த அக்கறையோடு பாதுகாக்கப்படுமென்றும் செய்தி அடங்கிய பதிலொன்று ஆசிரியா் கைக்கு வந்து சோ்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: