சிவ சம்போ – செயற்பாடு
சிவ சம்போ – செயற்பாடு
வரை தாளில் சிவனின் பல்வேறு நாமங்கள்
உணர்த்தும் பண்பு நலன்: குழு உணர்வு மற்றும் கூட்டாக இயங்கல்
தேவைப்படும் பொருட்கள்: சார்ட் பேப்பர்,சிவன் படம், மார்க்கர் பேனா
தயாரிப்பு: பழைய காலண்டரிலிருந்து சிவன் படத்தை வெட்டியெடுத்தல்
குழந்தைகளை குழுக்களாக பிரிக்கவும். குழுவின் தலைவர் படத்தை வரைதாளில் (சார்ட் பேப்பரில்) ஒட்ட வேண்டும்.
ஓரிரண்டு குழந்தைகள் சிவபெருமானின் பல்வேறு நாமங்களை, ஒட்டியுள்ள படத்தைச் சுற்றி எழுத வேண்டும். அந்த குழுவில் உள்ள மற்ற குழந்தைகள், பெயர்களை கூறிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த குழு அதிகமான பெயர்களை எழுதியுள்ளதோ அதுவே ஜெயித்த குழுவாகும்!