சிவ சம்போ – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
சிவ சம்போ – மேலும் படிக்க
குருமார்களின் கவனத்திற்கு – பஜன் சிவ சம்போ

கங்காதர – கங்கையைத்தரித்திருப்பவர் சிவ பெருமான் எப்போதும் கங்கை தலையிலிருந்து பாய்வது போல் சித்தரிக்கப்படுகிறார். அது ஏன் அவ்வாறு உள்ளது?

ராமகதா ரசவாஹினியில், பகவான் பாபா கங்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவள் எவ்வாறு பூமிக்குக் கொண்டுவரப்பட்டாள் என்பது பற்றியும் கூறுகிறார். கங்கை ஒரு பரிசுத்தமான ப்ரவாகம். அமிழ்தனைய அதன் நீர் அமரத்துவத்தை அளிக்க வல்லது அவள் அனைத்து பலன்களையும் அளிக்க வல்லவள். பாபா மேலும் கூறுகிறார், ”கடவுளர் அனைவரும் கங்கையைத் தங்களுக்குத் தருமாறு கேட்டனர். அதன் மூலம் வளம் பெறலாம் என்பது அவர்களது எண்ணம்.எனவே, இமயமலையின் தலைவனான ஹிமவான் மூவுலகும் பயனடைவதற்காகவும், கடவுளரின் ஆசியைப்பெறுவதற்காகவும், கங்கையை அவர்களுக்குப் பரிசளித்தார். ஆகவே அவர்களது ஆசிகளைப் பெற விழைந்தார். இந்த பூமியில் பாயும் கங்கை அவ்வாறு கடவுளர் கொண்டு வந்ததே. இது மூன்று பிரிவுகளாக பிரிந்தது, ஒன்று வானுலகத்திலும், மற்றொன்று பூவுலகத்திலும், பிரிதொன்று பாதாளத்திலும் பாய்ந்தது.

திரேதாயுகத்தின்போது ராமரின் மூதாதையரான சகரன் என்னும் அரசன் இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தினால் அவனது பல மகன்களும் சாம்பலாக நேரிட்டது. ஒரு மதிக்கத்தக்க பெரியவர், அவர்களின் சாம்பலின் மேல்; புனித கங்கை நீரைத் தெளித்தால் மனித உருவை அடைவர் எனக்கூறினார். ஆனால் இது பல தலைமுறைகள் கடந்த பின்னர் சகரன் வழித்தோன்றலான பகீரதன் மூலமே வெற்றியாயிற்று.

பகீரதன் முனைப்பாக தவம் செய்து தெய்வீகக்காட்சியைக் கண்டான். அவனுக்கு என்ன வேண்டுமென்று ஒரு குரல் கேட்டது. பகீரதன் தன் விருப்பத்தை தெரிவித்தான். கங்கை வலுவானவள் ,வேகமானவள். அவளது வேகத்தின் தாக்கத்தை பூமியால் தாங்க இயலாது. எனவே அந்த நதியை சிவ பெருமானின் சிரசில் விழச் செய்து பிறகு அதன் பிரவாகத்தை பூமியின் மீது தணிந்த வேகத்துடன் கொண்டு செல்ல வேண்டும் பகீரதன் எனவே, சிவபெருமானை வழிபட்டு மகிழ்வித்து அதில் வெற்றியும் பெற்றான். இவ்வாறு சிவபெருமான் கங்கையை நேரடியாக தலையில் தாங்கினார். அவ்வாறு கங்கை சிவபெருமானின் சிரசிலிறங்கி அங்கிருந்து ஏழு தனிப்பட்ட நீரோட்டங்களாக பாய்ந்ததில் ஒன்று பகீரதனின் வழியில் பின் தொடர்ந்ததால், தன்னுடைய முன்னோர்களை அந்த நீரைத் தெளித்து, சாம்பலிலிருந்து உயிர்ப்பித்தான். இவ்வாறு, பகீரதன் கொண்டுவந்ததால் கங்கை நதிக்கு பாகிரதி என்ற பெயரும் உண்டாயிற்று. இவ்வாறு சிவ பெருமான் புனித கங்கையின் பகுதியை தன் ஜடாமுடியில் நிரந்தரமாகத் தாங்கினார்

பாபா உண்மையில் கங்கையைத் தலையில் தாங்கிய சிவபெருமானே!

பாபா தன் பதின்ம வயதில் இருந்த போது ஈஸ்வரம்மா அவரது பிறந்த தினத்தன்று அவருக்கு எண்ணெய் குளியல் செய்வது வழக்கம். அவ்வாறு ஒரு சமயத்தில் தன் தலை மீது தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். அன்னை ஈஸ்வரம்மா பார்த்துக்கொண்டிருந்த போதே பாபாவின் தலை உச்சியிலிருந்து தண்ணீர் பீரிட்டு ஈஸ்வரம்மா மீதும் அருகிலிருந்த மற்றொரு உறவினர் மீதும் பட்டு சிதறியது.

பகவான் பாபா கங்கை ஆரத்தி பெற்றுக்கொள்ளுதல்

ஒரு தடவை பகவான் பாபா, பேராசிரியர் கஸ்தூரியிடம், அவரது தாயையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு ,ஹரித்வார், காசி, கயா போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை சென்று வருமாறு கூறினார். பாபா கஸ்தூரியிடம், “ஏன் தயங்குகிறாய். இந்தப் பிரயாணத்துக்கு 3 ரெயில்வே பயணச்சீட்டு வாங்கு, நாம் நால்வரும் பயணப்படுவோம்” என்றார்.

பிரயாணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்வாமியின் இருப்பை மூவரும் உணர்ந்தனர். முதல் நாள் மாலை ஹரித்வாரில் மாலை கங்கா ஆரத்திக்கு சென்றபோது அந்த இடத்தில் ஏற்கனவே பெருங்கூட்டம் இருந்த போதிலும் அந்தப் படித்துறையை ஒட்டி ஒர் சிறு தீவு போல் இருந்தது. அங்கு ஒரு மணிக்கூகண்டு இருந்தது அந்தப் பகுதியிலிருந்து ஒருவர் நதியில் விடப்படும் விளக்குகள் மிதப்பதையும் படித்துறையில் அவை அலைமோதுவதையும் காண முடியும். அருகில் நடந்து செல்லக்கூடிய பாலம் இருந்தது. எனவே அதன் மீது நடந்து சென்று அங்கு இருந்த யாத்ரீகக் குழுவுடன் சேர்ந்து கொண்டனர். வழிபாட்டு முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. சங்கு முழங்கியது. மத்தளங்கள் கொட்டப்பட்டன. மேளங்கள் கோஷமிட்டன. மேலும் எவ்வளவோ. பிறகு நடந்தது என்ன? மூவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்!

கஸ்தூரி எழுதுகிறார். ”குருக்கள் கனமான பித்தளை விளக்குகளை உயரத்தூக்கி வட்ட வடிவத்தில் முன்னால் ஆட்டுகிறார். ஆ, முன்னால் யார்? பாபா ஆம். அவர் அங்கு நிற்பவர்களின் பூஜையை பெற்றுக்கொண்டிருக்கிறார். எல்லோரும் பார்க்கும்படி அங்கு இருந்துக்கொண்டு, அல்லது நாங்கள் மூவரும் பார்க்கும்படி ஆரத்தி முடியும் வரை, “கங்கா மாதா கீ ஜெய்” என்ற அலையோசை வரை இருந்து கொண்டிருந்தார் அனைவரும் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த போதும் நகரக்கூட முடியாமல் இருந்தோம். பிறகு மெதுவாக எங்கள் கால்கள் இதுவரை அவர் நின்று கொண்டிருந்த படியைக் குனிந்து தொடுவதற்காக அழைத்துசென்றது. பனாரஸ் நகரில் புனிதத்திலும் புனிதமான காசி விஸ்வனாதரின் சன்னிதியை அடையும் வரை பாபா ஆரத்தி ஏற்றுக்கொண்ட காட்சி எங்கள் மனதில் பளிச்சென்று தங்கி விட்டது இன்னொரு பரபரப்பு ஏற்படும் வரை.

பனாரஸ் நகரில் என்ன நடந்தது என்று உங்களுக்கு ஆர்வமா? கஸ்தூரி எழுதுகிறார் ‘எங்கள் முதல் வருகையின்போது உள் கருவறையில் பாபாவின் தரிசனத்தைக் கண்டோம்-எப்போதும்போல்- தலையில் கீரீடம் போன்ற முடி, நீண்ட ஆரஞ்சு அங்கி, ஆசியளிக்கும் உயரத்தூக்கிய கை. நாங்கள் லிங்கத்தைப் பார்க்க இயலவில்லை. படித்துறையிலிருந்து லிங்க அபிஷேகத்திற்கென சேகரித்த கங்கை நீரை அவரது தாமரைபாதங்களில் கவிழ்த்தோம். அதை அவர் மறுதலிக்கவில்லை.

இது அதிசயமாக இல்லையா? சாயி புட்டபர்த்தியில் மட்டும் உறைபவர் அல்ல. சர்வ வ்யாபகம் படைத்தவர். ஒவ்வொரு அணுவிலும் இருப்பவர். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடமேயில்லை. பிரார்த்தனை கங்கா மாதாவிற்கானதாக இருந்தாலும், சிவனுக்கே உரியதாக இருந்தாலும் சரி, நமது அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்பவர் நமது ஸாயியே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: