சிவ தத்துவம்

Print Friendly, PDF & Email

சிவ தத்துவம்

சிவ ஸ்தோத்திரம் : சிவன், தெய்வீக மிக்கவர். பொருளை பிரிப்பதும் அழிப்பதும் அவர் தொழில்.

உலகில் ஈடு இல்லா இரு சக்திகள்- விஷ்ணுவும், சிவனும் ஆவர். சிவன் எப்பொருளிலும் தொடர்பில்லாத வைராக்கியம் உடையவர். தன்னிச்சையாக எங்கும் நிறைந்தவர். அவரே படைத்த பொருட்களில் கூட அவருக்குப் பற்று இருக்காது. ஆனால், சிவன் மங்களகரமானவர். மன்மதனை எரித்து சாம்பலாக்கியவர். அதாவது, மனிதனிடமுள்ள ஆறு ஆசைகளைப் பொசிக்கியவர் என்பது பொருள். அவை – மோகம், லோபம், மதம், மாச்சரியம், காமம், குரோதம் ஆகிய ஆறு குற்றங்களாகும்.

கைலாஶ ராணா : ஒளிக்கு அதிகாரி; தூய்மையும் தெய்வீகமும் பேரானந்தமும் உடையவர்.

சந்திரமௌலி : சந்திரனை சடையில் தாங்கியவர். ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் சிவனை வணங்கித் துதிக்க வேண்டும். அந்த இரவு சந்திரனால் ஆட்சி செய்யப்படுவது. சந்திரனுக்கு 16 கலைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையை இழந்து அமாவாசை வரும்வரை தேய்ந்து வரும்.

சந்திரனின் கலை இழப்பு என்பது மனத்தின் தேய்வைக் குறிக்கும். அதாவது, மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டே வந்து, இறுதியில் மனம் என்பது இல்லாமல் ஆக வேண்டும். எல்லா சாதனைகளும் இதை அடைவதற்குரிய வகையில் முன்னேற வேண்டும். பௌர்ணமி நாளிலிருந்து 15 நாளில் நிலவு ஒவ்வொரு நாள் இரவும் தேய்ந்து வருவது என்பது மனத்தின் செயலிழப்பை காட்டுகின்ற குறியீடு. அதாவது மனத்தின் செயல் வரவேண்டும் என்பது கருத்து. 14 வது நாள் – சதுர்த்தசியில் ஒரு சிறு பகுதி இருக்கும். அந்த நாளில் சரியான முயற்சி எடுக்கப் படுமானால் கீற்று கூட மறைந்து, மனோ நிக்ரகம் ஏற்படும். ஆகவே அந்த 14 வது நாள் – ஜெபம், தியானம், சிவ உபவாசம் முதலியவைகளில் ஈடுபட்டு, உணவு – உறக்கம் – துறந்து சாதனையில் ஈடுபடவேண்டும்.

ஃபணீந்த்ர மாதா : சீறி எழும் நல்ல பாம்பின் உச்சித் தலை. அதாவது நாகப்பாம்பு. இங்கு அது குண்டலினி சக்தியை காட்டுகிறது. குண்டலினி சக்தியின் ஆறு இடங்களில் உச்சந்தலை என்பது சகஸ்ராரம். நாகப் பாம்புகளுக்கு கோவில் சுப்ரமண்ய ஸ்தலத்தில் உண்டு. இங்கு பாம்பு என்பது மனிதனின் நரம்புத் தொகுதியில் படிந்து இருக்கிற ஆன்மீக சக்தியைக் குறிப்பது. இந்த சக்தியை விழித்து எழச் செய்வதன் மூலம் ஆன்மீக சக்தி வளரும்.

காளையின் குறியீடு :

சிவனின் ஊர்தி – காளை. இங்கு காளை என்பது சனாதன தர்மம். இது சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை என்ற நான்கு கால்களைக் கொண்டது.

சம்போ= சுயம்பு, யாராலும் படைக்கப் படாதவன். சாம்பவி என்பது ஜம்புவின் பெண்மைப் பெயர்.

உடுக்கையின் உட்பொருள்

சிவன், புகழ்ச்சி, பாட்டு இவற்றை விரும்புகிறவர் என்பதைக் காட்டுவது.

திரி தண்டம்

சிவன் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் இவற்றைத் தன் பொறுப்பில் வைத்து பக்தர்களுக்கு அருளுகிறார்.

முக்கண்

அதாவது மூன்றாவது கண் என்பது அறிவுக்கண். அதாவது சர்வக்ஞ; சர்வசக்தி என்பது. திரிகால உணர்ச்சி உடையவர் சிவன்.

காருண்ய சிந்தோ

கருணைக்கடல். கடல் விரிந்தும், எல்லையற்றும் இருப்பது போல் – சிவனின் கருணையும் இப்படி இருக்கும். பக்தன் – சாதனை, ஜெபம், தியானம், நற்குணம் இவற்றை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இவற்றால் கடவுளின் அருள் – மாறி மழையாகப் பொழிந்து, அன்பு மழையாக ஆகி ,பின் ஆனந்த ஓடையாக எங்கும் பெருக்கெடுக்கும்.

பவதுக்க ஹாரி

கருடனுக்கு உணவு பாம்பு. ஒரு முறை விஷ்ணு கருடனில் ஊர்ந்து சிவனைக் கண்டு தன் மரியாதையை செலுத்தச் சென்றார். அங்கு சிவன் தனது கழுத்து, தோள், இடுப்பு, கணுக்கால் இவற்றில் பாம்பை அணிந்திருந்தார். பாம்புகள் கருடனைக் கண்டு அஞ்சவில்லை. மேலும், பாம்புகள் கருடன் முன்பு தம் நாக்கை நீட்டி ‘அருகே வா’ என்றும் அழைத்தன. இதற்குக் காரணம், அவை சிவனிடம் தொடர்புற்றிருந்தன என்பதே. இறைவன் கற்பித்தவற்றை ஒருவன் கடைப்பிடித்தும், கீழ்ப்படிந்தும் நடந்து முறையான பிரார்த்தனையும் செய்தால், அவனுக்குக் கவலையோ, துன்பமோ, அச்சமோ தொடர்ந்து துன்புறுத்த முடியாது என்பதை இக்கதைக் காட்டுகிறது.

[Source : Sri Sathya Sai Balvikas Guru Handbook]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன