அமைதி என்பது சாய்-லென்ஸ்

Print Friendly, PDF & Email

அமைதி என்பது சாய்-லென்ஸ்

விளையாட்டின் நோக்கம்:

எந்தவொரு குழப்பமான சூழ்நிலையிலும் குழந்தைகள் தங்கள் அமைதியை இழக்காமல் இருக்கும் மன வலிமையை வளர்ப்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும்.

கற்பிக்கப்படும் குணங்கள்:
  • சுய கட்டுப்பாடு
  • பொறுமை
  • சமாதானம்
  • அமைதி
விளையாட்டு
  1. குரு வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறார்.
  2. A குழுவில் இருந்து ஒரு குழந்தை எதிரில் வந்து அமைதியாக அமர்ந்திருக்கிறது.
  3. அடுத்து, B குழுவில் உள்ள குழந்தைகள், அமைதியாக அமர்ந்திருக்கும் குழந்தையைத் தொடாமல் பல்வேறு வழிகளில் (நகைச்சுவைகள், வேடிக்கையான செயல்கள் போன்றவை) தொந்தரவு செய்ய முயற்சிக்க வேண்டும்
  4. இவர்களது குறும்புகளுக்கு ஆளாகாமல், இறுதிவரை மௌனம் காக்க முடிந்தால், அக்குழந்தை தனது குழுவிற்கு ஒரு புள்ளியைப் பெற்றுத் தரும், மீண்டும் அவரது சொந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு குழந்தை வந்து அதன் இடத்தில் அமரலாம்.
  5. ஆனால், அக்குழந்தை குறும்புகளால் குழப்பமடைந்து, நடுவில் தனது மௌனத்தைக் கைவிட்டால், அக்குழந்தை ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். அப்பொழுது குழு B ஒரு புள்ளியைப் பெறுகிறது.
  6. இப்போது B குழுவில் இருந்து ஒரு குழந்தை வந்து முன்னால் அமர, A குழுவிலிருந்து குழந்தைகள் அவரை தொந்தரவு செய்ய முயற்சிக்க வேண்டும்.
  7. இந்த முறையில் விளையாட்டு தொடரும், அதிகபட்ச புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெற்ற அணியாகக் கருதப்படும்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன