குருர் பிரம்மா – குழுச்செயல்பாடு

Print Friendly, PDF & Email
குருர் பிரம்மா ஸ்லோகத்திற்கானக் குழுச்செயற்பாடு

செயற்பாட்டின் நோக்கம் – பிரிவு 1 பாலவிகாஸ் குழந்தைகள், படைத்தல், காத்தல் அழித்தல் ஆகியவற்றை மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இயக்குகின்றனர் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வைப்பது.

தேவையான மூலப் பொருட்கள் – பீங்கான் (அ) களிமண் (அ) தகரத்திலான பானை (அ) தட்டு, உரம் கலந்த மண், கேழ்வரகு, கடுகு போன்ற விதைகள்.

செய்முறை – குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல் 3 அல்லது 4 குழுக்களாகப் பிரிக்கவும்.

  1. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பானையோ அல்லது தட்டோ கொடுக்கவும்.
  2. ஒவ்வொரு குழுவையும் தங்கள் பானை அல்லது தட்டிற்குத் தங்கள் குழுவின் பெயரையும், விதைகளின் பெயரையும் எழுதச் சொல்லவும்.
  3. ஒவ்வொரு குழுவையும் தங்கள் பானை அல்லது தட்டை உரம் கலந்த மண்ணால் நிரப்பச் சொல்லவும்.
  4. தேவையான தண்ணீர் விடச் சொல்லவும்.
  5. பலதரப்பட்ட விதைகளையும், அதன் அளவு, நிறம், உருவம் இவைகளைக் கவனமாக பார்க்கச் சொல்லவும்.
  6. ஒரு அழகான செடியாக, விதைகள் முளைப்பதற்கும், வளர்வதற்கும் என்னென்ன தேவை என்பதைப் பற்றி அவர்களுடன் விவாதிக்கவும்.
  7. ஒவ்வொரு குழுவையும் எத்தனை விதைகள் உள்ளன என்பதை எண்ணச்சொல்லி பின் தெளிக்கச் சொல்லவேண்டும். தேவையான தண்ணீர் ஊற்றச் சொல்லவும்.
  8. பானைகளை ஜன்னல் அருகில் அல்லது தேவையான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கச் சொல்லவும்.
  9. அந்தந்த அணியிலிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், சுழற்சி முறையில், செடிக்குத் தேவையான தண்ணீர் சரியான அளவில் இருக்கிறதா, சூரியஒளி கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கிறதா என்று கவனித்துச் செயல்படும் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்.
  10. குருமார்கள் இந்த நடைமுறையை முழுமையாகக் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். செடியைச் சுற்றி வளரும் தேவையில்லாத களைகளையும், மற்ற செடிகளையும் பிடுங்கிக் களையச் சொல்லவேண்டும்.
  11. படிப்படியாக வளரும் செடியைப் பற்றி குருமார்கள் வகுப்பில் விவாதிக்க வேண்டும்.
  12. சில நாட்களிலேயே விதையிலிருந்து சிறிய தளிர் வெளிவருவதைக் குழந்தைகள் காண இயலும். ஒரு வாரத்திற்குள் புதிய செடி வெளிப்படுவதைக் கண்டுக் குழந்தைகள் உற்சாகம்அடைவார்கள்.
  13. ஒரு குழு, மற்ற குழுக்களிடம் இந்தச் செடி வளர்க்கும் செயற்பாட்டைப் பற்றி, அதாவது அவர்களுக்கு இதில் கிடைத்த மகிழ்ச்சி, செடிவளர்க்கும் நடைமுறையில் – விதையிலிருந்து செடி எப்படி வந்தது மற்றும் அதை முறையாகப் பேணி காத்த விதம், தேவையில்லாத களைகளைப் பிடுங்கியது இதைப்பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளச் சொல்லவும்.

Seed

Sand

Plant

முடிவு:– குருமார்கள், இந்த விவாதத்திற்குப் பிறகு, ஒரு குருவானவர், படைக்கும் பிரம்மாவாகவும், காக்கும் விஷ்ணுவாகவும், நம்முள் இருக்கும் தீயகுணங்களை அழிக்கும் சிவனாகவும் விளங்குகிறார் என்பதைப்பற்றி விளக்க வேண்டும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலுமே நம் நன்மைக்காகவும், நம்நம் வளர்ச்சிக்காகவுமே, செய்யப்படுகிறது. ஒரு நல்ல குழந்தையாகச் செதுக்கும் பொறுப்பு குருமார்களுடையதாகும்.

வகுப்பில் விவாதிக்கக் குறிப்பான சில கேள்விகள்:

  1. நீங்கள் அனைவரும் இந்த செயற்பாட்டை ரசித்தீர்களா? ஏன்?
  2. விதைகள் இல்லாமல் செடிகள் வளர்ந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? விதை விதைத்ததால், படைக்கும் தொழிலை நாம் தொடங்கினோம் என்று கூறலாமா?
  3. நாம் சரியான அளவு தண்ணீரும், போதிய சூரிய ஒளியும் அளிக்காதிருந்தால், விதைகள் வளர்ந்திருக்குமா? சரியான சுற்றுச்சூழலும், தண்ணீரும், சூரிய ஒளியும் அளித்து இவைகளைப் பேணி காத்தோம் என்று கூறலாமா?
  4. தேவையில்லாமல் வளர்ந்த களைகளை நாம் ஏன் பிடுங்கிக் களைந்தோம்? அவைகள் மற்ற செடிகளைப் பாதித்திருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவைகளைக் களைந்ததால் தீய தொடர்புகளை அகற்றினோமா?

செயற்பாட்டுடன் தொடர்புடைய, விவாதிக்க வேண்டிய தலைப்புகள்:

(1) உடல்நலமும் சுகாதாரமும் – பிரிவு 1 குழந்தைகளுக்கு

(அ) வீட்டில் முளைக்கட்டுவது எப்படி? (ஆ) முளைகட்டிய தானியத்தில் உள்ள ஊட்டச்சத்து பற்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன