ஆகாயம்

Print Friendly, PDF & Email
guided visualisation sky

ஆகாயம்

அன்பான குழந்தைகளே,

கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஆகாயத்தைப் போன்று பரந்து விரிந்ததாக எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உண்மையில் நீங்கள் ஆகாயத்தை விட பெரிதான வர்கள் பிரகாசமானவர்களும்கூட. இறைவன் அம்சத்தில் நீங்கள் ஒரு முக்கியமான பாகம்.

நீங்கள் ஒரு பூங்காவில் உலாவிக் கொண்டு இருக்கிறீர்கள். அது மிகவும் அழகாக இருக்கிறது. பறவைகள் மிகவும் ஆனந்தமாக பாடிக்கொண்டும், பறந்து கொண்டும், கீச்சிட்டுக் கொண்டும் இருக்கின்றன. குளிர்ந்த காற்று உங்களை அன்புடன் தழுவிக்கொண்டு வீசுகிறது!

நீங்கள் ஆகாயத்தைப் பாருங்கள். எவ்வளவு அருமையான காட்சி! விண்வெளி இறைவனால் படைக்கப்பட்டது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அதிர்வுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் உரக்கக் கத்தும் பொழுதும், பேசும்பொழுதும், பாடும் பொழுதும், அழும் பொழுதும் ஒலி எங்கு செல்கிறது? விண்ணுக்குள் செல்கிறது. ஆகாயம் ஏழை பணக்காரர் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் வலுவற்றவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவரின் வார்த்தைகளையும் ஏற்றுக் கொள்கிறது.

ஆகாயம் அனைத்து உயிரினங்களையும் உயரத்தில் மிதந்து ஆனந்தப் படுவதற்கு அழைக்கிறது. அன்பான கிரணங்களால் சூரியன் மிகப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. உங்கள் இரு கரங்களையும் இதயத்தையும் விரிவுபடுத்தி அனைத்து மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மீன்களுக்கும், கற்பாறைகளுக்கும் கூட உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஆகாயம் அனைத்திற்கும் இடமளிப்பது போல, உங்களது இதயம் அனைத்து உயிர்களையும் உள்ளடக்கட்டும். இந்த ஆனந்த மயமான மகிழ்ச்சியான உணர்வில் அசைவற்ற நிலையில் இருங்கள். இறைவனுக்கு உங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மெதுவாக கண்களைத் திறந்து கற்பனையில் இருந்து வெளிப்பட்டு வாருங்கள்.


வகுப்பறைக் கலந்துரையாடல்
வினாக்கள்:

குழந்தைகளிடம் கீழ்க்கண்ட வினாக்களை எழுப்பலாம்:

1. நீ ஆகாயத்தில் எதைப் பார்த்தாய்?

2. ஆகாயம் யாரால் யாருக்காக படைக்கப்பட்டது?

[ஆதாரம்: Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications
(தமிழாக்கம் செய்யப்பட்டது)]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: