பாடத்திட்டத்தில் ‘அனுபவம் மூலம் கற்றல்’ ஒரு அணுகுமுறையே தவிர, சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடம் அல்ல.
எனவே இதற்கென்று தனியே பாடத்திட்டம் வகுக்க இயலாது.
குழந்தைகள் மையக்கருத்திற்கான விபரங்களை,தாங்கள் பெற்ற அனுபவம்,அதனால் கிடைத்த அறிவுஞானத்தின் அடிப்படையில் அளிக்கிறார்கள். எனவே ‘இந்த விபரங்களை குழந்தைகள் அளிக்கலாம்’ எனவும் முன் கூட்டியே அறுதியிட்டும் கூற இயலாது.
ஆயினும், குழுச்செயல்பாட்டில் தங்களை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்ளும் போது, மையக் கருத்து வலுப்பெறுகிறது.
ஆகவே, ‘அனுபவம் மூலம் கற்றல்’ சக்தி வாய்ந்த,படிப்படியாக ஆற்ற வேண்டிய செயல் முறை.
முக்கியமாக,குழந்தைகளின் சமூகத்திறமைகள்,உள்ளுணர்வு அனுபவங்கள், மற்றும் படைப்பாற்றல் திறன் ஆகியவைகளை தூண்டச்செய்யும்,ஒரு ஆராய்வு நடைமுறையாகும்.
இந்த நடைமுறையில், பலவிதமான தரவுகளை சேகரித்தல்,அதன் பொருளைப் புரிந்து கொள்ளல்,பலதரப்பட்ட கருத்துப்பரிமாற்றம்,தன்னைத் தானே புரிந்து கொள்ளுதல் ஆகிய பல விரிவான திறமைகளை கண்டுபிடித்து ஆய்வு செய்கிறார்கள்.
இதைத் தவிர்த்து,குழுவில் இருந்து வேலை செய்யும் திறமை,ஆலோசனைகளை அளித்தல்,ஏற்றுக்கொள்ளுதல்,மற்றவர்களையும்,சூழ்நிலைகளையும் மதித்தல், பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய திறமைகளும் ஊக்குவிக்கப்பட்டு, உறுதியான மதிப்புகள் உள்ளத்தில் வேரூன்றச் செய்கிறது.