மனித சோதனைக் கூடம்

Print Friendly, PDF & Email
மனித சோதனைக் கூடம்

மனிதன் இப்போது மனம் குழம்பி, சஞ்சலப்பட்டு, இயற்கையிடமிருந்து மகிழ்ச்சி பெற இயலவில்லையென்றால் தனது பிறப்புரிமையான ஆனந்தம், சந்துஷ்டி இவற்றைப் பெற வொட்டாமல் தடுப்பது என்ன என்பதைத் தேடி ஆராய்ந்து கண்டுபிடித்து விலக்கிக் கொள்ள வேண்டும். தன்னைச் சோதனைக் கூடமாகக் கருதி ஆராய்ந்து தன்னை அறிந்து கொள்ள வேண்டும்.

பஞ்ச பூதங்களின் ஐந்து குணங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கு மனிதன் ஐம்புலங்களைப் பயன்படுத்துகிறான். வெளி உலகம், அவனுக்குள்ளே வாய் மூலமாகவும், மூக்கு மூலமாகவும் மட்டுமே செல்வதில்லை. அதாவது உண்பதன் மூலமாக, மூச்சு விடுவதன் மூலமாக மட்டுமில்லை. மற்ற புலன்கள் மூலமாகவும் உள்ளே செல்கிறது. நாம் பிறந்த நேரத்திலிருந்து, மரணம் அடையும் வரையில், நமது அனுபவங்கள் அனைத்தும் இந்தப் புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன. இந்த ஐம்புலன்கள் வெளி உலகத்தைக் காண உதவும் ஜன்னல்கள். இயற்கையின் ஐந்து இயல்புகளும், நமது புலன்களும் பரஸ்பரத் தொடர்பு கொள்ளத் தொடங்கியதுமே, மனம் உருவாகிக் செயல்படத் தொடங்குகிறது.

நாம் எவ்வாறு செய்தியைச் சேகரித்துப் பயன்படுத்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள, ஒரு சிறிய படத்தின் வேலை செய்வது எவ்வாறு என்பதைக் கண்டறிவோம்.

கீழே வரையப்படும் பெரும் வட்டம், தூய உடலைக் குறிக்கிறது.

அதீத உணர்வு மனம் மனிதன் பஞ்சேந்திரியங்கள் -அறிவுணர்வுள்ள மனம் அடிமனம் அறிவுணர்வு கொண்ட மனம், மனதில் நாம் அறிந்து கொண்ட ஒரு பகுதியேயாகும். நமது அறிவுணர்வினைச் சிந்திக்கப் பயன்படுத்கிறோம். நாம் புலன்களின் மூலமாகச் செய்திகளைப் பெறும் போது, இந்த அறிவுணர்வு தான் அல்லது அறிமனந்தான் அந்த செய்தியைப் பற்றிய உணர்வினை (Aware)ப் பெறுகிறது.

அடிமனம் (Subconscious mind) நமது நினைவின் (memory) இருப்பிடம். இங்குதான் நமது செய்திகளனைத்தையும் சேர்த்து, வைக்கிறோம். நாம் புலன்கள் மூலமாகக் பெற்ற விஷயங்கள் அனைத்தும், நாம் எண்ணுகின்ற எண்ணங்கள் அனைத்தும், நாம் புரியும் செயல்களின் உணர்வுகள் அனைத்தும் நம் அடி மனத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. நமது கடந்த காலத்தில் பெற்ற விஷயங்கள், உணர்வுகள், எண்ணங்கள், செயற்பாடுகள் அனைத்தும் அடிமனதில் சேகரிக்கப்பட்டு, இருக்கின்றன. நாம் இப்போது இருக்கும் நிலை நம் அடிமனத்தின் இருப்பது அனைத்தின் விளைவாகும். நமது பழக்கங்கள், நமது உணர்வுகள் அனைத்தும் மனதின் இந்தப் பகுதியில் உருவாக்கப்படுகின்றன.

ஒரு புதிய உந்துதல் நம்மை வந்தடையும் போது, ஒரு படத்தை நாம் காணும் போது ஒரு பாட்டை நாம் கேட்கும் போது தமது நினைவு வங்கியில் (Memory Bank) அதாவது அடி மனத்தில் முன்பே பதிவு செயப்பட்ட அனுபவம் அல்லது செய்தியறிவு இதை அனுசரித்தே நாம் ஏற்றுக் கொள்கிறோம் அல்லது மறுதலிக்கிறோம். இந்தச் செயலும் பிரதிச் செயலும் (Reaction) இடைவிடாது நமக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு குழந்தை நெருப்பைக் காண்கிறது, தொடுகிறது, வலியை உணர்கிறது, பின் வாங்குகிறது (Recoils). பார்வை, தொடுதல் மூலமாக இங்கு ஒரு பாடம் கற்றுக் கொள்ளப்படுகிறது. பிற்காலச் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது அடிமனத்தில் (Subconscious) இந்தச் செய்தி சேமித்து வைக்கப்படுகிறது.

பருத்தி நூலின் ஊடும் பாவும் (woof and warp)ஒரு துணியை உருவாக்குவது போல எண்ணத்தின் ஊடும் பாவும், மனதை உருவாக்குகின்றன.

– ஸ்ரீ சத்யசாயி

புலன்களின் ஏதோ ஒரு தூண்டுதலின் விளைவாக அடிமனதில் (Conscious mind) எண்ணங்கள் நிகழ்கின்றன. அவை நமது அடி மனதில் (Sub Conscious) முன்பே சேமித்து வைக்கப்பட்ட உணர்ச்சிகளையோ, ஆசைகளையோ உடனுக்குடன் இயல்பாகவே தட்டியெழுப்புகின்றன. இவ்வாறு ஐம்புலன்களும் ஐந்து இயல்புகளுடன் நமது இன்பத்துக்காக பரஸ்பரத் தொடர்பு கொள்ளும் போது, நமக்குள் அவை எண்ணங்களை உருவாக்குகின்றன. அடிக்கடி இந்த எண்ணங்களை நேராகவே செயல்படுத்தும் போது, நாம் பழக்கங்களை (Habits) உருவாக்குகிறோம். பிறகு இந்தச் செயல்களின் விளைவுகளை உடலுக்குள்ளேயே நாம் எதிர் கொள்ள நேரிடுகிறது. ஒரு எண்ணத்தைச் சரியில்லாத செயலால் செயற்படுத்தும் ஒவ்வொரு சமயத்திலும், அது முழு உடலின், சீர்மையை (Rhythm)-க் குலைக்கிறது; நமக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களின் சமநிலை கலைக்கப்படுகிறது. உதாரணமாக, நாம் பொய் சொல்லும் போது, நமது தன்மையின் ஒழுங்கமைப்பில் (System) ஏதோ கோளாறு நிகழ்ந்திருப்பதை உணர்கிறோம். நமது உடற்கூறின் ஒழுங்கமைப்பில் ஏதோ ஒன்று, அது சரியான செயல் அல்ல என்று கூறுகிறது. எண்ணத்திற்கும் உட்குரலுக்கும் இடையே உள்ள இசைவு விலகுகிறது. அது நமது மகிழ்ச்சியைக் குலைக்கிறது. உள்ளிருக்கும் அமைதியை நாம் இழக்கிறோம்.

எண்ணங்கள் இடைவிடாது தொடர்ந்து இருக்கையில் அவை ஆசைகளை உருவாகுகின்றன. ஆசைகள் அடிமனத்தின் (Sub Conscios) ஒரு பகுதி. புலன்களிலிருந்து வரும் வலுவான உந்துதல் அல்லது செய்தி (Input) மனதில் உருவங்களையும் எண்ணங்களையும் ஏற்படுத்தி (அதை மறைக்கும் போது) உள்ளிலிருந்து இடைவிடாது வருகின்ற பேரன்பின் தெய்வீக ஆற்றலின் ஓட்டத்தை அது வறளச் செய்கிறது அல்லது தடுக்கிறது. இது மனங்குழம்பிய (Deluded) செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. உள்ளிருக்கும் பஞ்ச பூதங்களின் சமநிலையைக் குலைக்கிறது.

மனதில் எழும் எண்ணங்கள் ஆற்றலின் அலைகளால் (Waves of energy) சூழ்நிலை முழுவதையும் நிரப்புகின்றன. ரேடியோ அலைகள் போன்று அவை எல்லாவிடங்களிலும் இருக்கின்றன. அவை ஆற்றல் மிகுந்தவை, புனிதமானவை. ஆகவே நமது எண்ணங்கள் உயர்ந்த பண்பு கொண்டவையாகவும் புனிதமாகவும் இருக்க வேண்டும்.

அதீத மனம் என்பது தூய பேரறிவுணர்வாகும். (Pure Consciousness) அது அனைத்து ஞானமும் அறிவும் நிரம்பப் பெற்ற மனதின் ஒரு பகுதியாகும். நமக்குள்ளே இருக்கும் மனசாட்சி, ஜீவ சாட்சி (Conscience) அதுவே. அதுவே சத்யம்.

பேரன்பின் ஆற்றல் ஜீவசாட்சியின் உள் மையத்திலிருந்து தானாகவே வெளிவந்து ஊற்றேடுக்கும் போது, அது நமது எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றை சத்யம், சாந்தி, தர்மமாக உயர் மாற்றம் செய்விக்கிறது. பேரன்பு ஒவ்வொரு மனிதனின் உள்ளும் வெளியே வரக் காத்திருக்கும் இயல்பான ஊற்று. அன்பு இருக்கும் இடத்தில் ஜீவனுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு கால்வாய் கிடைத்து விட்டது என்பதே பொருள்.

இவ்வாறு சூட்சுமமும் ஸ்தூலமும் பின்னிப் பிணைந்துள்ளன. சூட்சுமமில்லாது, ஸ்தூலம் வேலை செய்யவே இயலாது. இவ்வுலகம் முழுவதுமே, மனதின் நிழல் வடிவம் (Projection) நமது ஆசைகளைக் கட்டுப்படுத்தவும், ஆனந்த அனுபவ நிலையைப் பெறவும், நமது தூய்மையான புனிதமான எண்ணங்கள், அறிவுணர் (Conscious) மனதின் மேலே மிதக்கும்படி செய்ய வேண்டும்.

உடல், மனம், ஆத்மா இவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பே மனிதன். தனது அடிப்படையான தெய்வீகத்தை மறந்து தற்காலிகமான மாறக் கூடிய உடலுடன் தன்னை ஒருமைப்படுத்திக் கொண்டு இருப்பதே அவனது தளைக்கும் துன்பத்துக்கும் காரணம். இவ்வாறு தவறாக இனங்கண்டு கொள்ளுதலுக்குக் (Identification) காரணம் மனமே. இத்தகைய தவற்றுக்குக் காரணம் வெளி உலகத்தில் ஈடுபடுதலும், புலன்களின் மூலம் கிடைத்த பதிவுகளுமேயாகும்.

சாவியை பூட்டினுள் செலுத்தி வலது பக்கம் திருப்பும் போது பூட்டு திறக்கின்றது. இடது பக்கம் திருப்பும் போது அது பூட்டிக் கொள்கிறது. இதயந்தான் பூட்டு. மனந்தான் சாவி. உலகத்தை நோக்கி மனம் திரும்பும் போது, நீ விடுதலை பெறுகிறாய். ஒரே பூட்டு, ஒரே சாவி. ஆனால் இவை தான் சிறைப்படுவதற்கும் விடுதலை பெறுவதற்கும் மூல காரணம்.

– ஸ்ரீ சத்யசாயி (21-09-1979)

உலகியல் வாழ்க்கையில் வேட்கை கொண்டு மனிதன் பஞ்ச பூதங்களுக்கு ஏற்பட்ட இயல்பான ஒழுங்கமைகின்ற பல ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். இன்று பஞ்ச பூதங்கள் அனைத்தும் மாசடைந்து விட்டன. இதன் விளைவாக மனிதன் பாதுகாப்பின்மை, துன்பம், அமைதியின்மை இவற்றில் மூழ்கிக் கிடக்கின்றான். மனிதனின் மிகுந்த சுயநலம் காரணமாக, பூமித்தாயின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் போது, உயிரினங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடையே உள்ள சமநிலை சீர் குலைகிறது. நாம் உண்ணும் உணவு, நாம் பருகும் நீர், நாம் சுவாசிக்கும் காற்று அனைத்தும் மாசு படிந்தவை. இதன் விளைவாக, ஒலி, தொடுதல், வடிவம், சுவை, நாற்றம் இவற்றின் பயனைப் பஞ்ச பூதங்களிடமிருந்து அவனால் பெற இயலவில்லை. இறைவனின் அருளை அவன் இழந்து விட்டான். பஞ்ச பூதங்கள் அவனிடம் பழி வாங்குகின்றன.

புலன்கள் ‘மாத்திரைகள்’ என்றும் அறியப்படுகின்றன. அதற்கு அளவு என்று பொருள். ஒவ்வொரு புலனுக்கும் அனுபவத்தை அளவிடத் திறமை உண்டு. மனிதன் ஒவ்வொரு புலனுக்கும் உள்ள இயல்பான கட்டுப்பாடு பற்றிய முழமையான உணர்வுடன் அதனைப் பயன்படுத்த வேண்டும். மூக்கு மூச்சு விடுவதற்காகவும் நறுமணம் நுகரவுமே அமைக்கப்பட்டுள்ளது. அதை விடுத்துப் பலர் அதற்குள் மூக்குப் பொடியினைத் திணிக்கின்றனர்.

அல்லது புகையினை மூக்கு வழியாக வெளியிடுகின்றனர். நாக்கு தற்காலத்தில் ராஜஸ, தாமஸ உணவை உட்கொள்ளவும், மது அருந்தவும் பயன்படுகிறது. இது மனிதனை மிகவும் கீழ்மைப்படுத்துகிறது. இவ்வாறு அனைத்துப் புலன்களும் இக்காலத்தில் மனிதனால் கெட்ட வழியில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, மனிதனுக்கு மனத்துன்பமும் வியாதிகளும் அதிகமாகின்றன.

– ஸ்ரீ சத்யசாயி (21–11–1979)

மனித மேம்பாடுகளை இழந்ததன் பயனாக, மனிதனுக்குள் இருக்கும் பஞ்ச பூதங்கள் தாழ்ச்சியடைந்து விட்டன. அவற்றில் நஞ்சு கலந்து விட்டது. இதன் பயனாக இயற்கையில் உள்ள பஞ்ச பூதங்களிலும் நஞ்சு கலந்து விட்டது. அதனுடைய பயனை நாம் எங்கும் காண்கிறோம். இயற்கையின் பாதிப்பு (Reaction) பூமியைப் பாதிக்கிறது. பூகம்பங்களும் உணவுப் பஞ்சங்களும், வியாதிகளும் இதனால் நிகழ்கின்றன. இயற்கையின் பிரதிபலிப்பு ஒளியை பாதித்து, அதன் மூலம் நமது கண் பார்வையும் மங்குகிறது. இயற்கையின் எதிரொலி (Resound) தண்ணீர் பஞ்சம், வெள்ளங்கள், தண்ணீரில் மாசு கலத்தல் இவற்றின் மூலம் வெளிப்படுகிறது. இது போல ஒலியும் மாசடைந்துள்ளது. இது போல இடைவிடாது வம்பு, அவதூறு இவற்றையே நாம் எங்கும் கேட்கிறோம். பிறரைக் குறை கூறுவதிலும், வம்பு பேசுவதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இறைவன் திருநாமத்தின் இனிமையான ஒலியைக் கேட்க விரும்பாது விலகிச் செல்கிறோம்.

இந்த மாபெரும் பேரண்டத்தில், மனிதன் ஒரு தூசு போன்றவன் அடிப்படையில் மனிதனுக்கும், படைப்பிற்கும் இடையே போராட்டம் ஏதுமில்லை. அன்னையிடமிருந்து பாலைப் பருகக் குழந்தைக்கு உரிமையுண்டு. மலரிலுள்ள தேனைப் பருகிடத் தேனிக்குச் சுதந்திரமுண்டு; அது போல இயற்கையின் வளங்களை அனுபவித்து மகிழ மனிதனுக்கு ஓர் தடையுமில்லை. ஆனால் அடக்க இயலாத ஆசைகள் காரணமாகவும், பொறுப்பில்லாது இயற்கையின் வளங்களைக் கொள்ளையடித்தாலும் இயற்கையில் பீதியளிக்கும் கோளாறுகள் ஏற்படுகின்றன. பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், வறட்சி, வெள்ளம் இவையனைத்தும், இயற்கை வளங்களைப் பொறுப்பற்று கொள்ளையடித்ததால், இயற்கையின் சமநிலை குலைந்ததன் விளைவாகும். தான் உட்கார்ந்து கொண்டிருக்கும் கிளையின் அடிப்புறத்தைக் கோடாரியால் வெட்டத் துணியும் மூடன் போல மனித சமுதாயம் செயல்படுகிறது.

– ஸ்ரீ சத்யசாயி (13-01-1997)

உண்மையான கல்வி என்பது, புலன்களுக்கும், மனதுக்கும் இடையே உள்ள தொடர்பினில் வெற்றி கொள்வதுதான். அதன் பயனான உள்ளிருக்கும் பேரறிவுணர்வு முன்னால் வந்து வெளிப்பட வேண்டும். மனதில் அலைச்சல்களைச் சீர்படுத்த, மனசாட்சி ஆற்றலுள்ள வழிகாட்டியாக அமைய வேண்டும்.

உள்ளும் புறமும் சமநிலையினை ஏற்படுத்த அனுபவப் பூர்வமான முயற்சி, இவற்றை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தும்.

  1. புலன்கள் மூலம் வெளியுலகத்தைப்பற்றித் தெரிந்துகொண்ட செய்தி ,உன் வாழ்க்கையில் வாழ்கின்ற உணர்வுகளுடன் ஒன்றிணைதல் வேண்டும்.
  2. மனிதனுக்குள் இருக்கும் உடல் உணர்வு ஆத்மா இவை பரஸ்பரத் தொடர்பும் பரஸ்பரச் சார்பும் நன்கு நிலைநிறுத்தப்பட வேண்டும்.
  3. மனிதன் பிறந்து வளர்ந்த சூழ்நிலையின் உட்புற இயல்பும் உள்ளே உறைந்திருக்கும் சர்வ வியாபியான இறைவனின் வெளிப்புற இயல்பும் தொடர்பு படுத்தப்பட்டு ஒன்றிணைய வேண்டும்.
  4. குடும்பத்தின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் சமூகத்தின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் தனி மனிதனின் உள் உந்துதல்கள் உயர் நாட்டங்கள் இவற்றுடன் ஒன்றிணையவேண்டும்.
  • நமக்குள் தூய்மை,ஒருமைத்தன்மை தெய்வீகம் இவற்றைக்கொண்டு வருவதற்கு மனிதன் என்ற சோதனைக்கூடத்தை நன்கு புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.
  • புலன்கள் மூலம் உள்ளே வருபவை கண்காணிப்பு, கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
  • மனித சோதனைக் கூடத்தின் திறமை, தகுதியை முழுவதும் பயன் படுத்தினால் தூய்மை பெற முடியும். புரிந்து கொண்டு மனதின் முழுத் திறமையினையும் பயன்படுத்துவது தான் மனிதனின் உயர்மாற்றத்திற்கான திறவுகோல்.
  • பேரன்பால் ,எல்லா எண்ணங்களையும் சொற்களையும் செயல்களையும் நிரப்ப வேண்டும்.
  • எண்ணம் சொல் செயல் இவற்றிடையே இசைவு இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன