ஜப்பானிய பூமி அமைப்பியல் நிபுணர் (Geologist)

Print Friendly, PDF & Email
ஜப்பானிய பூமி அமைப்பியல் நிபுணர் (Geologist)

ஜப்பானிய பூமி அமைப்பியல் நிபுணர் (Geologist) ஒருவர் இந்தியாவுக்கு வந்தபோது, பங்களூரில் தன் நண்பரின் வீட்டில் ஸ்வாமியின் புகைப்படங்களைக் கண்டார். இந்த விஞ்ஞானி, பாபாவைக் காணவும், அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தார். ஆகவே, அவரது நண்பர், அந்த வேளையில் பாபா தங்கியிருந்த பிருந்தாவனத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்.

பாபா அவரை நேர்முகப் பேட்டிக்கு (Interview) அழைத்தார். இன்னும் பொருத்தமாகக் கூறினால் அகக்காட்சி தருவதற்கு அழைத்தார். பாபா அவரிடம் அவர் பிறந்தபோது நீலக்குழந்தையாக (blue baby) இருந்தார் என்பதையும், அவர் பிழைக்கமாட்டார் என்று தந்தையிடம் மருத்துவர்கள் கூறியதையும் நினைவூட்டினார். அதன் பிறகுதான் தந்தை, புத்தரின் கோவிலுக்குச் சென்று, புத்தர் காலடியில் குழந்தையைக் கிடத்தி, “பிரபோ, இது உங்கள் குழந்தை, இது பிழைப்பதும், பிழைக்காததும் தங்கள் தெய்வத் திருவுள்ளத்தைப் பொறுத்தது” என்று கூறி பிரார்த்தனை செய்தார். பாபா கூறினார்: “அன்றி-ருந்து நான் உன்னைக் கவனித்து பராமரிக்கிறேன்.”

பிறகு பாபா அவருக்கு இதயவடிவத்தில் லாக்கெட் (கழுத்துச்சங்கி-யுடன் இணைக்கப்பட்ட சிறிய படம் பதிக்கும் பேழை) படைத்துக் கொடுத்தார். பிறகு அதைத் திறந்து ஜியாலஜிஸ்டிடம் காண்பித்தார். அந்த இதயத்தில் மூன்று அறைகள் மட்டும் இருந்தன. அந்த மனிதர் பிரமித்து ஸ்தம்பித்தார். பாபாவுக்கு தனது இரகசியம் எவ்வாறு தெரியும் என்று அதிசயித்தார். அவரது இதயத்தில் மூன்று அறைகள் தான் இருந்தன என்று மருத்துவர்கள் கூறியதாக தந்தை அவரிடம் கூறியிருந்தார். இவர் அதை யாரிடமும் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார். பாபாவிடமிருந்து எந்த இரகசியத்தையும் மறைக்க இயலாது என்று அந்த ஜியாலஜிஸ்ட் அன்று புரிந்து கொண்டார். பாபா சர்வ வியாபகர். சர்வ வல்லமை வாய்ந்தவர். சர்வ ஞானி.

தெய்வத்துவம், தனிமணிகளைக் கோர்த்துள்ள சரடு போன்றது. ஒவ்வொரு மணிக்குள்ளும் என்ன நடக்கிறது என்பது சரடுக்கு மட்டுமே தெரியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: