செயலால் புனிதமான கனி

Print Friendly, PDF & Email

செயலால் புனிதமான கனி

Father asking son to get fruits

ஒரு சனிக்கிழமை, பூஜையில் ஈடுபட்ட ஒரு தந்தை, தன் மகனிடம் ஒரு ரூபாய் கொடுத்து வாழைப்பழம் வாங்கி வருமாறு கூறினார். அந்தப் பையன் மிகவும் நல்லவன். சில பழங்களும் வாங்கினான். வரும் வழியில் ஒரு தாயும் மகனும் பசியால் வாடி வருந்தி வீதியில் நிற்பதைக் கண்டான். பசியாக இருந்த சிறுவன் அந்த வாழைப்பழத்தைப் பார்த்ததும் அதன் அருகே ஓடிவந்தான். பசியோடிருந்த அந்த தாயும் தன் மகனை துரத்திப்பிடிக்க ஓடி வந்தாள்.

Son giving away the fruits to hunger

ஆனால் பசியின் காரணமாக, இருவரும் மயங்கி விழுந்தனர். பழம் வாங்கி வந்த பையன், இவர்களின் பசிக்கொடுமையை அறிந்தான். இப்பழங்களை வீட்டுக்குக்குக் கொண்டு போவதை விட, பசித்தவர்களுக்குக் கொடுப்பதே மேலானது என்று நினைத்தான். அவர்களுக்குப் பழங்களைக் கொடுத்ததோடு அருந்த நீரும் கொடுத்தான். பசி தாகம் நீங்கியதும் அவ்விருவரும் தமது நன்றியை பழம் கொடுத்த பையனுக்குத் தெரிவித்தனர். அந்த வயதான தாய் மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டாள்.

‘நல்ல செயல்’ என்ற கனியை அர்ப்பணிக்கும்போதே இறைவன் மிகவும் மன மகிழ்கிறார்.

[Source: China Katha – Part 1 Pg:5]

 Illustrations by Ms. Sainee
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன