கதை – அம்ருத மந்தனா
அம்ருத மந்தனா
அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலை கடைந்த பொழுது ஒன்றன் பின் ஒன்றாக பதினான்கு மதிப்புள்ள பொருள்கள் தோன்றின. அப்பொழுது ஒரு கோப்பையளவு நஞ்சும் தோன்றியது. அது மிகக் கொடியது. ஒரு சிறு துளி நஞ்சு கூட உலகம் முழுவதையும் எரிக்க வல்லது. இப்பொழுது இதிலிருந்து எப்படி காப்பது? என்ற சிக்கல் எழுந்தது. சாவின் கொண்டு செல்லும் இதை எங்கே வைப்பது என்று யாவரும் கலங்கினர். ஆகவே தேவாசுரர் தம்மையெல்லாம் காக்கின்ற விஷ்ணுவை அடைந்தனர். சிவனின் வல்ல மையைத் தெரிவிக்க விரும்பிய விஷ்ணு அவர்களை சிவன் பால் செல்லுமாறு கூறினார்.
தேவாசுரர்கள் நஞ்சினை எடுத்துக் கொண்டு கைலாச மலையை அடைந்தனர். சிவன் தவக் கோலத்தில் இருந்தார். தேவாசுரர்கள், சிவனிடம் வந்த நோக்கத்தை கூறினார்.
சிவபெருமான் புன்னகை புரிந்து அவர்களைக் காப்பதாக உறுதியளித்தார். நஞ்சு முழுவதையும் ஒரே மடக்கில் விழுங்கினார். நஞ்சு தொண்டையில் இறங்கியது. நஞ்சு சிவபெருமானின் இரத்தத்தில் கலந்து பூமியைத் தொட்டுள்ள அவரது திருப்பாதத்தின் வழியாக இறங்குமானால் உலகம் முழுவதும் எரிந்து சாம்பலாகும். ஆகவே சிவபெருமான் நஞ்சை தொண்டையிலேயே நிறுத்தினார். நஞ்சு அவரை எரிக்கத் தொடங்கியது.
அதை குளிரச்செய்வதற்கு எல்லா முயற்சியும் எடுத்தார். சந்திரன் மூலம் குளிர்ச்சியை ஊட்டினார். சந்திரனால் தணிக்க முடியவில்லை. பின்பு கங்கையை சடையில் தாங்கி குளிர் ஊட்டினார். அதுவும் பலன் தரவில்லை. இறுதியில் சிவன் ராமநாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார். உடனே நஞ்சின் எரிப்புத் தன்மை அடங்கியது. இந்நஞ்சு குளிர்வதற்காகத் தான் சிவன் தன் சடையில் சந்திரனையும் கங்கையையும் தாங்கினார். சிவன் தன் பக்தர்களை காப்பதற்காக நஞ்சினை உண்டார். ஆகவே அவர் கருணைக்கடல் என்று அழைக்கப்படுகிறார் .
[Illustrations by Shyam, Sri Sathya Sai Balvikas Student]
[Source: Sri Sathya Sai Balvikas Guru Handbook and SSS – V1]